சிலிண்டர் விலை முதல் சம்பளம் வரை.. ஏப்ரல் 1 முதல் வரும் 10 முக்கிய மாற்றங்கள்..!

இன்றோடு நடப்பு நிதியாண்டு முடிவடையவுள்ள நிலையில், நாளை புதிய நிதியாண்டு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சமையல் எரிவாயுவில் ஆரம்பித்து, சம்பளம் வரையில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன.

அந்த வகையில் நாளை முதல் வரவிருக்கும் முக்கிய 10 மாற்றங்கள் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும்? இது சாமனிய மக்களுக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

குறிப்பாக மாத சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள், வரி சலுகை, வருமான வரி தாக்கல், என்ன சலுகைகள் இன்றுடன் முடிய போகிறது என பலவற்றையும் பார்க்கலாம்.

சிலிண்டர் விலை

சிலிண்டர் விலை

இன்றைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது ஒவ்வொரு மாதமும் 1ம் தேதியன்று மாற்றம் இருக்கும். அந்த வகையில் நாளை ஏப்ரல் 1, 2021 அன்று சமையல் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழிலாளர் சட்டம்

புதிய தொழிலாளர் சட்டம்

இந்தியாவில் நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய தொழிலாளர் விதியின் படி, அடிப்படை சம்பளத்தின் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 50%-க்கு குறைவாக இருந்தால் அவை விரைவில் மாறிவிடும், மேலும் உங்களது அடிப்படை சம்பளத்துடன் சிடிசி (CTC) மேலும் அதிகரிக்கும். இதனால் உங்களது Take Home Salary குறைவாக இருக்கும். எனினும் பிஎஃப் தொகை செலுத்துவதும் அதிகரிக்கும். இதனால் வருங்கால வைப்பு நிதிக்கு செல்லும் தொகை அதிகரிக்கும்.

கட்டணம் அதிகரிக்கும்

கட்டணம் அதிகரிக்கும்


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), ஓய்வூதிய நிதி மேலாளர்களை (pension fund managers), 2021 - 2022ம் நிதியாண்டில் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு மூலம் பெரும்பாலான பிஎஃப்எம்கள் லாபகரமாக மாறும்.

Array

Array

தேனா வங்கி, விஜயா வங்கி, காப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி உள்ளிட்ட 7 பொதுத்துறை வங்கிகளின் பாஸ்புக் மற்றும் செக்புக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IFSC codeம் மாற்றம் செய்யப்படும். ஆக இந்த ஏழு வங்கிகளில் உங்களது கணக்கு இருந்தால், வங்கிகளை அணுகி புதிய நடைமுறை மூலம் மேற்கண்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

பிஎஃப் வரி சலுகை

பிஎஃப் வரி சலுகை

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்தான வரி சலுகையில் பட்ஜெட் 2021ல் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் படி, ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விகிதம் உண்டு. பொதுவாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் வரி சலுகை உண்டு என்பதால் தான் பலரையும் ஈர்க்கிறது. ஆனால் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தும்போது இனி வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய விதிகளும் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. ஆக உங்களின் சம்பள விகிதத்திற்கு ஏற்ப நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம்.

Array

Array

பட்ஜெட் 2021ல் வருமான வரி தாக்கலை அதிகரிக்க டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் பற்றி புதிய திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார். இது ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதியதாக வருமான வரி சட்டத்தில் 206AB மற்றும் 206CCA என்ற புதிய பிரிவுகள் அமலுக்கு வரவுள்ளன. இதன் படி வருமான வரி தாக்கல் செய்யாத நபர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 50,000 ரூபாய் டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் (TCS) விலக்கு பெற்றிருந்தால், டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பிடித்தம் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் 5% செலுத்த வேண்டியிருக்கும்.

விடுமுறை பயண சலுகை (LTC)

விடுமுறை பயண சலுகை (LTC)

மத்திய அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியான இந்த நேரத்தில் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கான எல்டிசி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம். இதில் 2020 - 21ம் நிதியாண்டிற்கான தொகையினை மார்ச் 31, 2021-க்கு முன் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊழியர்கள் இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பெற செலவழிக்க வேண்டும் என்பது தான். இந்த திட்டமானது மார்ச் 31-வுடன் முடிவடையவுள்ளது. ஆக ஊழியர்களை இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன் கூட்டியே செய்ய வேண்டியதில்லை

முன் கூட்டியே செய்ய வேண்டியதில்லை

வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது சம்பள வருமானம், வங்கி கணக்கு, வரி செலுத்திய தகவல், டிடிஎஸ் விபரம் ஆகியவை முன்கூட்டியே பதிவிட்டு இருக்கும் நிலையில், தற்போது மூலதன ஆதாயங்கள், டிவிடெண்ட் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி வருமானம், போஸ்ட் ஆபீஸ்-ல் இருந்து கிடைத்த வருமானம் ஆகியவற்றையும் நேரடியாக வருமான வரி அறிக்கையில் சேர்க்கப்படும். ஆக அவற்றை துல்லியமாக இருப்பதை வருமான வரி செலுத்துவோர் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வருமான வரி தாக்கல் தேவையில்லை

வருமான வரி தாக்கல் தேவையில்லை

75 வயது அல்லது அதற்கு அதிகமாக வயதுடைய மூத்த குடிமக்கள், பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே வருடாந்திர வருமானமாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தேவையில்லை. வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மற்ற ஏதேனும் ஒரு வகையில் வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்களுக்கு இது பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

முந்தைய ஆண்டு பட்ஜெட்டில், வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதிக சலுகைகள் கொண்ட, ஆனால் வழக்கமான சில பிடித்தங்கள் பொருந்தாத இந்த முறையை தேர்வு செய்ய வேண்டும். ஆக இனி வருமான வரி தாக்கல் செய்யும் போது இதையும் கவனிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+