இந்திய பொருளாதாரம் மிரட்டலாக வளர்ந்து வரும் இந்த சூழலில், பணம் சம்பாதிப்பதற்கான விதிகள் முழுமையாக மாறிவிட்டன. கஷ்டப்பட்டு படி, வேலைக்கு போ என்ற பழைய பார்முலா இப்போது வேலை செய்யாது. ஒரு சராசரி இந்தியன் நிதி சுதந்திரத்தை அடைய கடக்க வேண்டிய 4 மேஜிக் மைல்கற்கள் எவை? உங்கள் போர்ட்ஃபோலியோவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப்போகும் அந்த 4 முக்கிய மைல்கற்களை தெரிந்து கொள்ளுங்கள். இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் பெரும்பாலானவர்கள் முதல் மூன்று மைல்கற்களை கூட கடப்பதில்லையாம்.
இந்தியாவில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த பலருக்கும், பணம் சம்பாதிப்பது என்பது வெறும் பிழைப்பு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால், நிஜமான செல்வம் என்பது ஒரு தொடர் பயணம். அந்த பயணத்தில் நீங்கள் கடக்க வேண்டிய 4 முக்கியமான மைல்கற்கள் எவை என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மைல்கல் 1: குறைந்தபட்ச அடிப்படை ரூ.2.5 லட்சம் (அவசர கால நிதி)
இது உங்கள் நிதி பயணத்தின் முதல் படி. இங்கு உங்கள் வருமானம் உங்கள் அடிப்படை தேவைகளான உணவு, வாடகை, போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும். இங்கு சேமிப்பு என்பது மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும். ஏதேனும் ஒரு சிறிய மருத்துவ செலவு வந்தால் கூட கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆக இந்த மைல்கல்லில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல, உங்கள் தகுதிகளை வளர்த்து வருமானத்தை பெருக்குவது மட்டுமே ஒரே வழி.
ஆனால் ஒரு சராசரி இந்திய குடும்பத்தின் மாதச் செலவு 40,000 ரூபாய் என வைத்துக் கொண்டால், 6 மாத செலவை கணக்கீடு செய்தால் 2.4 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்த நிதியை அவசர கால நிதியாக வங்கி எஃப்டி-யிலோ அல்லது சேமிப்பாக விரைவில் எடுக்கும் விதமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு வேளை திடீரென வேலை இல்லாமல் போனாலோ அல்லது மருத்துவ செலவு ஏற்பட்டாலோ அவசர கால நிதியை வைத்து நிர்வகிக்க முடியும். இந்த காலகட்டத்தில் முதலீடு பற்றி யோசிக்க முடியாது. அப்படி இருந்தால் அது நல்ல விஷயம் தான்.
மைல்கல் 2 : ரூ.10 லட்சம் முதலீடு இலக்கு (பாதுகாப்பு - நிம்மதி)
இரண்டாவது மைல்கல்லில் ஒரு நடுத்தர வர்க்க முதலீட்டாளர் தனது சேமிப்பு அல்லது முதலீட்டில் முதல் 2.5 லட்சம் ரூபாயை எட்டும் போது, அவர் Bare Minimum என்ற பிழைப்பு நிலையில் இருந்து பாதுகாப்பு (Security) என்ற இரண்டாம் மைல்களுக்குள் நுழைவார்.
உங்களுடைய முதல் 2.5 லட்சம் ரூபாய்க்கு தான் அதிக கால அவகாசம் எடுக்கும். அதோடு உங்களுக்கு போதிய நிதி பாதுகாப்பும் இருப்பதால், முழுக்க முழுக்க முதலீட்டில் கவனம் செலுத்தலாம். ஆக அவசர கால நிதியை அடுத்து, 10 லட்சம் ரூபாய்க்கான இலக்கை அடைய சரியாக திட்டமிடப்பட்ட முதலீடும், நிதி ஒழுக்கமும் அவசியம். இந்த 10 லட்சம் ரூபாய் மைல்கல்லை எட்டி விட்டாலே, அது ஒரு நம்பிக்கையை கொடுக்கும். ஒரு மிகப்பெரிய தைரியமும் கிடைக்கும். அதோடு இதை நம்மால் தொடர்ந்து செய்ய முடியும் என்ற எண்ணமும் வரும். உங்கள் முதலீடு ஒரு குறிப்பிட்ட தொகையை தாண்டியதும், நீங்கள் போடும் பணத்தை விட, அந்தப் பணம் ஈட்டும் வட்டி (Returns) வேகமாக வளரத் தொடங்கும்.
மைல்கல் 3: ரூ.50 லட்சம் இலக்கு
முதல் 10 லட்சம் ரூபாய் முதலீட்டை சேர்க்க 4 - 5 வருடங்கள் ஆகிறது எனில், அதே செயல்பாடுகளை தொடர்ந்தால், அடுத்த 4 - 5 வருடங்களில், உங்கள் இலக்கு 50 லட்சம் ரூபாயாக இருக்கும். இது தான் கூட்டு வட்டியின் மாயாஜாலம்.
இங்கு உங்கள் பணம் உங்களுக்காக வேலை செய்யும். வருமானமும் அதிகம், முதலீடும் அதிகம். உங்களுடைய நிகர மதிப்பும் அதிகரிக்கும். மொத்தத்தில் முதல் 4- 5 ஆண்டுகளில் இருந்த வேகத்தை விட, அடுத்த சில ஆண்டுகளில் பல மடங்கு வேகத்தில் முதலீடானது வளரும். இங்கு உங்கள் சேமிப்பை வெறுமனே வங்கிக் கணக்கில் வைக்காமல், வளரக்கூடிய சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். நீங்கள் தூங்கும்போது கூட உங்கள் முதலீடுகள் லாபத்தை ஈட்டித் தரும்.
மைல்கல் 4: நிதி சுதந்திரம் (ரூ.7 - 8 கோடி)
இதுதான் உங்கள் நிதி பயணத்தின் இறுதி இலக்கு. இங்கு நீங்கள் உழைக்க வேண்டிய அவசியம் இல்லை; உங்கள் முதலீடுகளில் இருந்து வரும் வருமானமே உங்கள் வாழ்க்கை செலவுகளை பூர்த்தி செய்யும். சொல்லப்போனால் உங்களுடைய பாசிவ் இன்கம் (முதலீட்டு வருமானம்) உங்கள் மாத செலவுகளை விட அதிகமாக இருக்கும். வருமானம் அதிகமாக இருப்பதால் நீங்கள் விரும்பிய வேலையை செய்யலாம், அல்லது வேலையே செய்யாமல் ஓய்வெடுக்கலாம். நேரத்தின் மீது உங்களுக்கு முழு அதிகாரம் இருக்கும். முதலீட்டையும் அதிகரிக்க முடியும்.
இந்தியாவில் 90% மக்கள் முதல் இரண்டு மைல்கற்களிலேயே தங்கி விடுகிறார்கள். ஆனால், 2026-ஆம் ஆண்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தில், சரியான விழிப்புணர்வு இருந்தால் 3 மற்றும் 4-வது மைல்கற்களை எட்டுவது கடினமல்ல. நீங்கள் இப்போது எந்த மைல் கல்லில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, அடுத்த மைல்கல்லை நோக்கி நகர இன்றே திட்டமிடுங்கள்..
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications