எரிபொருள் கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள் மற்றும் சேமிப்புகளை வழங்கும் பல வகையான கடன் அட்டைகளில் ஒன்றாகும். இந்தியாவில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டாளியாக இருக்கும் வங்கிகளால் எரிபொருள் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
நீங்கள் ஒரு மாதத்தில் நிறைய தூரம் சொந்த வாகனத்தில் பயணம் செய்பவர் என்றால் உங்களுக்கு எரிபொருள் கிரெடிட் கார்டு பயனுள்ளதாக இருக்கும்.

எரிபொருள் விலை மக்களை கவலைப்பட வைக்கும் ஒரு விஷயமாகும். சொந்தமாக வாகனம் வைத்து வேலை செய்பவர்களுக்கு இதனால் அதிக செலவு ஏற்படும். எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால்தான் உங்களது எரிபொருள் செலவு மிச்சமாகும்.
அதேசமயத்தில் எரிபொருள் கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயமாக உங்களது பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தலாம். நீங்கள் செலவு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரெடிட் கார்டு நிறுவனங்கள் உங்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள், வெகுமதிகளை வழங்குகின்றன.
எரிபொருள் கிரெடிட் கார்டு என்பது பலவகையான கிரெடிட் கார்டுகளில் ஒன்று. இதன்மூலம் பல வகையான பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுடன் வங்கிகள் கூட்டு வைத்துக் கொண்டு இதுபோன்ற கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இந்த கார்டுகளை வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்குச் சென்று தாங்கள் விரும்பும் கார்டுகளைப் பெறலாம்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கென்று சுயமாக வாகனங்களை வைத்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தனித்தனியாக இதுபோன்ற கிரெடிட் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. எரிபொருள் செலவில் நீங்கள் அளிக்கும் பணத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதம் ரிவார்டு பாயிண்டுகளாக உங்கள் கிரெடிட் கார்டில் வரவு வைக்கப்படும்.

குறிப்பிட்ட பாயிண்ட் எண்ணிக்கை வந்ததும் நீங்கள் அதை பரிசாகவோ அல்லது வெகுமதிகளாகவோ திரும்ப வாங்கிக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது எரிபொருளுக்கான காசை தரவேண்டும். ஆனால் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் செலவில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை திரும்பப் பெறலாம். இது புத்திசாலித்தனமான விஷயம்தானே.
நீங்கள் முன்பணமாக தரும் தொகை கிரெடிட் கார்டில் வரவு வைக்கப்படும். அதை வைத்து பெட்ரோல் பங்குகளில் உங்கள் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். பெட்ரோல், டீசல் தவிர ஆயிலும் இதில் வாங்கலாம். இதனால் கூடுதல் வெகுமதி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications