டிகிரி முடித்தோமா? வேலைக்கு சென்றோமா? சம்பாதித்தோமா? என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் படித்து முடித்தவுடன் வேலைக்கு சென்றாலும், இருக்கும் நேரத்தில் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும். அதனை ஸ்மார்ட்டாகவும் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
இது குறித்து நண்பர்கள், உறவினர்கள், இணையத்தின் தேடினால் முதலீடு செய்ய பரிந்துரை செய்கின்றனர்.

எனினும் சில நேரங்களில் சேமிக்க நினைத்து, இருப்பதையும் இழக்கும் நிலையைத் தான் அதிகம் காண முடிகின்றது.
செபியில் பதிவு செய்திருக்க வேண்டும்
பங்கு சந்தையில் ஒரு முதலீட்டாளர் வர்த்தகம் செய்வதற்கு, செபியில் பதிவு செய்யப்பட்ட தரகராக இருக்க வேண்டும். பொதுவாக இந்த தரகர்கள் மூலமாக வர்த்தகம் செய்யும்போது கட்டணங்கள் சற்று அதிகமானதாகவே இருக்கும். எனினும் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கும் தள்ளுபடி தரகர்களும் இருக்கின்றனர். இவர்கள் இளம் மற்றும் புத்திசாலி முதலீட்டாளரை ஈர்க்கும் வகையில், குறைந்த கட்டணங்களை கொண்ட தரகு விகிதங்களை வழங்கும் தரகர்களாக உள்ளனர்.
எனினும் ஒரு முழு சேவை தரகு நிறுவனம் என்பது நிபுணர்களின் ஆலோசனை உள்ளிட்ட முழுமையான அனுபவத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கும். தனி பயனாக்கப்பட்ட தீர்வுகள், நிலையான வழிகாட்டுதல்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தேவையான தொழில் நுட்பம் என வழங்கும். அந்த வகையில் மோதிலால் ஆஸ்வால் போன்ற தரகர்கள் தீர்க்கமான முடிவையும், வழிகாட்டுதலையும் வாடிக்கையாளார்களுக்கு வழங்க முடியும்.
நிறுவனம் ஒரு வலுவான அனுபவத்தினை கொண்டுள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்பே ஈக்விட்டி ஆராய்ச்சி மையத்தினை உருவாக்கியதில் முதன்மையானது.
மோதிலால் ஆஸ்வால் Vs குறைந்தகட்டணத்தில் சேவை வழங்கும் தள்ளுபடி தரகர்கள்: எது சாதகமானது?
மோதிலால் ஆஸ்வால் | குறைந்தகட்டணத்தில் சேவை வழங்கும் தள்ளுபடி தரகர்கள் | |
தனிப்பட்ட முறையில் சேவை | மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் மூலம் தனியாகவே சேவையினை பெற்றுக் கொள்ளலாம். | குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் தள்ளுபடி தரகர்களின் மூலம் வர்த்தகம் செய்யும்போது கால் செண்டர்கள் அல்லது மெயில் மூலமாகவே உதவியினை பெற முடியும். அல்லது முழு விவரங்களை தெரிந்து கொள்ள நீங்கள் ஆன்லைன் ஆய்வு மூலமாகவே அல்லது நண்பர்கள் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம். |
வாடிக்கையாளர்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப சேவை | மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் வாடிக்கையாளர்களின் இலக்கினை அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு தீர்வுகளை வழங்குவார்கள். | தள்ளுபடி தரகர்களிடம் இதுபோன்ற சேவைகள் என்பது கிடைக்காது. |
அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் கொண்டு குழு | தகுதி வாய்ந்த அனுபவம் கொண்ட ஈக்விட்டி நிபுணர்கள் மூலம், துறையை பற்றிய ஆராய்ச்சி செய்தும், நிறுவனங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தும், முதலீட்டாளார்கள் செல்வத்தினை உருவாக்க உதவுகின்றனர். | தள்ளுபடி புரோக்கர்களிடம் இதுபோன்ற சரியான சேவைகள் கிடைக்காது. |
நேரடி தொடர்பு | மோதிலால் நிறுவனத்தில் நேருக்கு நேர் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையினை வழங்கும். நாட்டில் கிட்டதட்ட 98% பின் கோடுகளை உள்ளடக்கியுள்ளது. | குறைந்தகட்டணத்தில் சேவை அளிக்கும் தரகர்களிடத்தில் இப்படி சேவை கிடைக்காது. அதனை எதிர்பார்க்கவும் முடியாது |
கட்டண விகிதம் | மோதிலால் நிறுவனத்தில் சற்றே கட்டணங்கள் அதிகமானதாக இருக்கும். | தள்ளுபடி புரோக்கர்களிடத்தில் கட்டணம் என்பது சற்றே குறைவாக இருக்கும். |
சரியான ஆலோசனை
இளம் மில்லியனர்கள் தங்களது இலக்கினை அடைய சரியான ஆலோசனைகள் இல்லாமல், தொடர்ந்து அவர்களது முதலீடுகளை நிர்வகிப்பதற்கும் கண்கானிப்பதற்கும் நேரமில்லாமல், தள்ளுபடி புரோக்கர்களிடம் ஏமாந்து போகின்றனர்.
சில சமயங்களில் சரியான முடிவினை எடுக்க அவர்களுக்கு தொடர்ச்சியான சரியான வழிகாட்டல் அவசியம். ஆனால் தனி நபர்கள் மூலம் அல்லது வேறு எதும் ஆலோசனைகளை பெற வேண்டுமெனில் அதற்காக நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
சில சமயங்களில் தவறான வழிகாட்டுதல்களால் முதலீட்டாளர்கள் இழப்பினை காண கூடும். ஆனால் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் நாட்டிலேயே சிறந்ததொரு ஆராய்ச்சி குழுமத்தினை கொண்டுள்ளது. இதில் உள்ள நிபுணர்கள் பல ஆண்டுகளாக நிறுவனங்களையும், சந்தையையும் கண்கானித்து வருகின்றனர். அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் நிபுணத்துவம் முதலீட்டாளர்கள் விவேகமான முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது. இது ஈக்விட்டி மற்றும் கமாடிட்டிக்கான ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதல்களை கொடுத்து வருகின்றது. இது டெக்னிக்கல் மற்றும் பண்டமெண்டல்களை அடிப்படையாகக் கொண்டது.
நேரடியாக தொடர்பு கொள்ளலாம்
வாடிக்கையாளர்கள் நேரடியாக சேவைகளை பெற முடியும். இதே தள்ளுபடி புரோக்கர்கள் மத்தியில் நேரடியாக எந்த சேவையினையும் பெற முடியாது. நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ மட்டுமே பெற முடியும். ஆனால் மோதிலால் ஆஸ்வால் போன்றதொரு சேவை வழங்குனர்களிடம் முழுமையான சேவையினை பெற முடியும். இதுவே பெரும்பாலான சிக்கல்களை தவிர்க்கும். மொத்தத்தில் மோதிலால் ஆஸ்வால் போன்ற தரகர்கள் மூலம் சிறந்த வர்த்தக அனுபவத்தினை முதலீட்டாளர்கள் பெற முடியும். Phygital Investing முறையின் அனுபவத்தை பெற உடனே கிளிக் செய்யுங்கள்.
கட்டணம்
வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி தரகர்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்கும் என்றாலும், முழு நேர சேவைகள் என்பது கிடைக்காது. தகுதி வாய்ந்த நிபுணர்களின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் மோதிலால் ஆஸ்வால் போன்ற பதிவு செய்த புரோக்கர்களிடம் மட்டுமே கிடைக்கும். ஆனால் தள்ளுபடி புரோக்கர்களிடம் அப்படி கிடைக்காது. முழு நேர சேவை அளிக்கும் மோதிலாஸ் ஆஸ்வால் போன்ற தரகர்கள் வாடிக்கையாளர்கள் செய்யும் வர்த்தகம் மற்றும் அவற்றின் மதிப்பின் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படும். ஆக இதனை தள்ளுபடி தரகர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக தோன்றினாலும் முழு சேவையும் மோதிலால் ஆஸ்வால் போன்ற தரகு நிறுவனங்களால் தான் தர முடியும். இதனையும் நிறுவனங்கள் வழங்கும் வழிகாட்டுதல் மூலம் கிடைக்கும் லாபத்தின் மூலம் அவற்றை ஈடுகட்ட முடியும்.