டூ வீலர் வாங்க இது தான் சரியான சான்ஸ்.. குறைந்த வட்டியில் கடன்.. எந்த வங்கி பெஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கனவு பைக்கினை வாங்க இது தான் சரியான தருணம் எனலாம். ஏனெனில் வங்கிகள் அந்தளவுக்கு வட்டி விகிதத்தினை குறைவாக வைத்துள்ளன.

இன்று பல வங்கிகள் நிதி நிறுவனங்கள் என பலவும் போட்டி போட்டுக் கொண்டு வாகனக் கடன் கொடுத்து வருகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகன கடன் அதிகளவில் கொடுத்து வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில் தங்களது கனவினை நிறைவேற்ற பலருக்கும் மிக முக்கிய பாலமாக இருப்பது வங்கிக் கடன் தான். அப்படி கடன் வாங்கி நாம் விரும்பிய பொருளை வாங்கினாலும், பலரும் அந்த சமயத்தில் யோசிக்காத விஷயம் எந்த வங்கியில் குறைவான வட்டி? வேறு என்னென்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கும்? மற்ற விவரங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. தொடர்ச்சியாக சரியும் தங்கம் விலை.. இன்று என்ன நிலவரம்..! சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. தொடர்ச்சியாக சரியும் தங்கம் விலை.. இன்று என்ன நிலவரம்..!

வட்டி குறைவாக இருக்குமா?

வட்டி குறைவாக இருக்குமா?

முதலில் இந்த இருசக்கர வாகன கடனுக்கு கிரெடிட் ஸ்கோர் மிக முக்கிய காரணியாக இருக்கும் நிலையில், உங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கும் குறைவான வட்டி விகிதமாக இருக்கும்.

இதே நீங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை வாங்கினால் சில வரி சலுகைகளும் கிடைக்கலாம். இது 80சியின் படி 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகை கிடைக்கும்.

வயது தகுதி

வயது தகுதி

நீங்கள் இருசக்கர வாகன கடன் வாங்க தகுதியானவரா? உங்களின் வயது 21 - 58 ஆக இருக்க வேண்டும். இதே சம்பளதாரர்கள் எனில் 21 - 65 வயதாக இருக்க வேண்டும். கடன் வாங்க நினைப்பவர் சம்பளதாரர் அல்லது சுயதொழில் செய்பவராக இருக்கலாம். கடன் வாங்க நினைப்பவரின் குறைந்தபட்ச வருமானம் மாதம் 10,000 ரூபாயாக இருக்க வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
 

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

அடையாள ஆவணம் மற்றும் முகவரி ஆவணம், வருமான சான்றிதழ், வயது சான்றிதழ், கடைசி 3 மாத வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட் உள்ளிட்டவை தேவைப்படும்.

இதற்கிடையில் இன்று நாம் 10 வங்கிகளின் வட்டி விகிதம் மற்றும் அதிகபட்சமாக எவ்வளவு கடன் பெற்றுக் கொள்ளலாம் என பார்க்கலாம் வாருங்கள்.

Array

Array

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.25% முதல் 7.70% வரையில், அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.35% முதல் 8.55% வரையில், அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

Array

Array

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் 8.70% முதல் 10.05% வரையில், அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையில் இருசக்கர கடன் பெற்றுக் கொள்ளலாம்.

ஜம்மு காஷ்மீர் பேங்க்-கில் வட்டி விகிதம் 8.70% முதல் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் வரையில் இருசக்கர வாகன கடன் பெற்றுக் கொள்ளலாம்.

Array

Array

பாஞ்சாப் & சிந்த் வங்கியில் வட்டி விகிதம் 9.00% முதல் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையில் இருசக்கர வாகன கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இதே கனரா வங்கியில் வட்டி விகிதம் 9.00% முதல் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையில் இருசக்கர வாகன கடன் பெற்றுக் கொள்ளலாம்.

Array

Array

ஐசிஐசிஐ வங்கியில் வட்டி விகிதம் 9.50% முதல் 26.00% வரையில் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரையில் இருசக்கர வாகன கடன் பெற்றுக் கொள்ளலாம்.

ஐடிபிஐ வங்கியில் வட்டி விகிதம் 9.80% முதல் 9.90% வரையில் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் அதிகபட்சமாக 1.20 லட்சம் ரூபாய் வரையில் இருசக்கர வாகன கடன் பெற்றுக் கொள்ளலாம்.

 

Array

Array

யூனியன் வங்கியில் வட்டி விகிதம் 9.90% முதல் 10.00% வரையில் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையில் இருசக்கர வாகன கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இதே ஐடிஎஃப்சி வங்கியில் வட்டி விகிதம் 9.99% முதல் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரையில் இருசக்கர வாகன கடன் பெற்றுக் கொள்ளலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Get two wheeler loans at lowest rate in Indian banks; check details here

India’s top banks offering lowest interest rates on two wheeler loans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X