இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவிற்கு ஏதேனும் பரிசு வழங்க வேண்டும் என விரும்பினால் அவர்களை நிதி ரீதியாக வலுப்படுத்தும் பரிசுகளை வழங்குங்கள். அது அவர்களை நிதி ரீதியாக தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும். அப்படி நிதி ரீதியான பரிசு குறித்து பார்க்கலாம்.
நிலையான வைப்புத்தொகை:
இந்த அன்னையர் தினத்தையொட்டி உங்களின் அம்மாவின் பெயரில் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யலாம். பல்வேறு வங்கிகளும் மூத்த குடிமக்கள் பெயரில் செய்யப்படும் நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு கூடுதலாக வட்டியை வழங்குகின்றன. சில வங்கிகளில் 300 நாட்கள், 400 நாட்கள் என பிரத்தியேக டெபாசிட் திட்டங்கள் கூட கிடைக்கின்றன. எனவே உங்கள் அம்மாவின் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யுங்கள். இவை பாதுகாப்பானவை என்பதோடு மட்டும் இல்லாமல் உறுதியான வருமானம் தரக்கூடியவையாக இருக்கின்றன.

தங்கம்:
தங்கம் உலகிலேயே மிகவும் மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீடு. இந்த அன்னையர் தினத்தில் உங்களுடைய அம்மாவிற்கு தங்கத்தை பரிசாக வழங்கலாம். இது காலா காலத்திற்கும் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு பரித பொருளாக இருக்கும். தங்கத்தை நகையாகவோ அல்லது நாணயமாகவோ வழங்கலாம் அல்லது கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் அவர்கள் பெயரில் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு அன்னையர் தினத்திற்கும் அது வளர்ந்து உங்கள் அன்னையின் பெயரில் சொத்தாக மாறி இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகள்:
நீண்ட கால அடிப்படையில் சிறந்த லாபம் தருபவை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள். தற்போது பங்குச்சந்தை இறக்கத்தில் இருப்பதால் சிறந்த ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை தேர்வு செய்து ஒரு முறை டெபாசிட்டாகவோ அல்லது எஸ் ஐபி முறையிலோ உங்களின் அம்மாவின் பெயரில் முதலீடு செய்யுங்கள். எனவே உங்களுடைய அம்மாவின் பெயரில் அதிக ரிஸ்க் இல்லாத ஃபண்டுகளை தேர்வு செய்த முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு நல்ல தொகை வருமானமாக கிடைத்திருக்கும். பின்னர் எஸ்டபிள்யூபி முறையில் அவர்களுக்கு மாதம் தோறும் வருமானமாக கிடைக்கும் வகையிலும் மாற்றலாம்.
சொத்து வாங்குவது:
தமிழ்நாட்டில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கும் போது பத்திரப்பதிவு கட்டணத்தில் 1 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. இதே போல பல மாநிலங்களிலும் பெண்கள் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு சலுகைகள் கிடைக்கின்றன. எனவே உங்களின் கணிசமான தொகை இருக்கிறது என்றால், உங்கள் அம்மாவின் பெயரில் சொத்து வாங்கலாம்.
தங்கள் பெயரில் வங்கியில் பணம் இருக்கிறது, சொத்து இருக்கிறது எனும் போது பெண்களுக்கு கூடுதலாக தன்னம்பிக்கை கிடைக்கிறது. அந்த தன்னம்பிக்கையை பரிசளுக்கும் ஒரு ஆண்டாக இந்த அன்னையர் தினம் அமையட்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications