தங்கத்தில் முதலீடு செய்ய இது செம சான்ஸ்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது நல்ல வாய்ப்பு தான்!

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

ஆக அதனை தங்கமாக வாங்கி வைக்காமல் பேப்பர் தங்களாக வாங்கி வைத்தால், அதில் லாபம் அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

அதுவும் அது அரசின் ஒரு சூப்பர் திட்டம் என்றால் வேண்டாம் என்றா சொல்ல முடியுமா? வாருங்கள் அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

அரசின் பாதுகாப்பான திட்டம்

அரசின் பாதுகாப்பான திட்டம்

ஆரம்பத்தில் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு பாதுகாப்பான திட்டம் தான் அரசின் இறையாண்மை தங்க பத்திர திட்டம். இது தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பொதுவாக தங்கம் முதலீடு என்றாலே கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. என்ன தான் விலை அதிகரித்தாலும், நம் மக்கள் வாங்குவதை நிறுத்துவதில்லை.

இது ஜாக்பாட் காலம்

இது ஜாக்பாட் காலம்

அந்தளவுக்கு தங்கத்தின் மீது மோகம். அப்படிப்பட்டவர்களுக்கு இது சரியான ஜாக்பாட் காலம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இத்தகைய நேரத்தில் அரசின் தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு நல்ல ஆப்சன் தான். ஏனெனில் நல்ல லாபம் கிடைக்குமே.

சிறந்த முதலீடு

சிறந்த முதலீடு

சர்வதேச சந்தையானலும், இந்திய கமாடிட்டி வர்த்தகமானாலும் தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது விலை ஏற்றத்தில் தான் உள்ளது. அதோடு நிபுணர்களும் நிச்சயம் ஏற்றம் காணும் என்றே கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஆர்பிஐ தங்க பத்திர விற்பனையானது நாளை (அக்டோபர் 12) அன்று தொடங்கவுள்ளது. இந்த முதலீட்டு திட்டமானது தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு, இது ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

கடைசி தேதி என்ன?

கடைசி தேதி என்ன?

ஏழாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை வாங்க கடைசி தேதி அக்டோபர் 16 ஆகும். அதன் பிறகு அக்டோபர் 20, 2020 அன்று இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த தங்க பத்திர விற்பனையில் கிராமுக்கு 5,051 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்று 5,001 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?

எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?

பொதுவாக ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

எப்போது ஆரம்பம்?

எப்போது ஆரம்பம்?

இந்த தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டம் 2015ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அப்போது மொத்தம் 9.14 லட்சம் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு 245 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது முதலீட்டாளர்களும் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிணையமாக வைத்து கடன் வாங்கலாம்

பிணையமாக வைத்து கடன் வாங்கலாம்

இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.

எவ்வளவு வட்டி?

எவ்வளவு வட்டி?

இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டீடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.

கேபிட்டல் டேக்ஸ்

கேபிட்டல் டேக்ஸ்

தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது. எட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால்- நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பது கவனிக்கதக்கது.

அடுத்த சீரிஸ் எப்போது?

அடுத்த சீரிஸ் எப்போது?

சீரிஸ் 8
சந்தா தேதி நவம்பர் 09 - 13, 2020, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி நவம்பர் 18, 2020

சீரிஸ் 9
சந்தா தேதி டிசம்பர் 28 - ஜனவரி 1, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜனவரி 05, 2021

சீரிஸ் 10
சந்தா தேதி ஜனவரி 11 - ஜனவரி 15, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜனவரி 19, 2021

சீரிஸ் 11
சந்தா தேதி பிப்ரவரி 1 - 5, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி பிப்ரவரி 9, 2021

சீரிஸ் 12
சந்தா தேதி மார்ச் 1 - 5, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி மார்ச் 9, 2021

தங்க ஆபரணமாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று தங்க பத்திரங்கள் வாங்கி வைப்பது நல்ல லாபத்தினையும் கொடுக்கும். செலவினையும் குறைக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+