இது செம சான்ஸ் போங்க.. நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. நல்ல வாய்ப்பு தான்..!

கொரோனா ரணகளத்திற்கு மத்தியிலும் இதில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் பார்க்க முடியும். அதுவும் அரசின் முதலீட்டு திட்டமாகவே அல்லது அரசு வழிகாட்டுதல் படி உள்ள திட்டமாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இது நிச்சயம் மிக நல்ல வாய்ப்பு தான்.

Recommended Video

தங்கத்தின் விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் காரணம்

பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு அரசு அறிவித்த ஒரு நல்ல திட்டம் தான் அரசின் இறையாண்மை தங்க பத்திர திட்டம். இதனாலேயே என்னவோ தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.

அதுவும் இந்த நெருக்கடியான காலகட்டங்களில் மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுவது, கவர்ச்சிகரமான பாதுகாப்பு முதலீடாக பார்க்கப்படும் தங்கம் தான்.

சிறந்த முதலீடு

சிறந்த முதலீடு

அனுதினமும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் தங்கம் விலையானது, இன்னும் தொடர்ந்து விலை அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். கமாடிட்டி சந்தையிலும் சரி, அல்லது பிசிகல் தங்கமாக வாங்கி வைத்தாலும் அது பிரச்சனை தான். ஆனால் தங்க பத்திரமானது இந்த காலகட்டத்தில் மிக சான்ஸ் ஆக பார்க்கப்படுகிறது.

கடைசி தேதி என்ன?

கடைசி தேதி என்ன?

ஐந்தாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை ஆக்ஸ்ட் 3 முதல் தொடங்க உள்ளது. இதனை ஆகஸ்ட் 7 வரை வாங்கிக் கொள்ள முடியும். இதன் வெளியீட்டு தேதி ஆகஸ்ட் 11 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

விலை நிர்ணயம் எவ்வளவு?

விலை நிர்ணயம் எவ்வளவு?

தங்க பத்திரம் விற்பனை நாளை தொடங்கவுள்ள நிலையில் அதன் விலையானது கிராமுக்கு 5,334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக இந்த பத்திர கொள்முதலுக்கு பணம் செலுத்திக் கொள்பவர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடியுடன் 5,284 ரூபாயுக்கும் கிடைக்கும்.

எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?

எவ்வளவு முதலீடு செய்து கொள்ளலாம்?

பொதுவாக ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்து கொள்ளலாம்.

பிணையமாக வைத்து கடன் வாங்கலாம்

பிணையமாக வைத்து கடன் வாங்கலாம்

இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.

எவ்வளவு வட்டி?

எவ்வளவு வட்டி?

இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.

கேபிட்டல் டேக்ஸ்

கேபிட்டல் டேக்ஸ்

தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது. எட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால்- நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பது கவனிக்கதக்கது.

அடுத்த சீரிஸ் எப்போது?

அடுத்த சீரிஸ் எப்போது?

சீரிஸ் வரும் ஆக்ஸ்ட் 31 அன்று தொடங்கி செப்டம்பர் 04. 2020 அன்று முடிவடைய உள்ளது. பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி செப்டம்பர் 08, 2020

தங்க நகைகளாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று தங்க பத்திரங்கள் வாங்கி வைப்பது நல்ல லாபத்தினையும் கொடுக்கும். செலவினையும் குறைக்கும்.அதுவும் இது போன்ற கொரோனா நெருக்கடியில் நிச்சயம் பலன் கொடுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+