பொதுவாக தங்கம் முதலீடு என்றாலே கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. என்ன தான் விலை அதிகரித்தாலும், சாமனியர்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை, அவரவர் தகுதிக்கு ஏற்ப தங்கத்தினை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் காரணமான தங்க நகை கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் கூட, ஆன்லைனில் தங்கத்தினை புக் செய்து வருகின்றனர்.
அந்தளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் மக்களிடையே இருந்து வருகின்றது. இந்த நிலையில் செய்கூலி சேதாரம் இல்லாமல், நீங்கள் வாங்கி வைக்கும் தங்கத்திற்கு ஏற்ப லாபமும் கிடைக்கும் என்றால், இது மிக நல்ல வாய்ப்பு தானே.
சிறந்த முதலீடு
இந்த நிலையில் தான் ஆர்பிஐ தங்க பத்திர விற்பனை இன்று தொடங்கியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த தங்க பத்திரத்தில் மே 15 வரையில் முதலீடு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரத்தின் விலை
ஆன்லைன் மூலமாக இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும். அத்தகைய முதலீட்டாளர்களுக்கு பத்திரத்தின் விலை 4,540 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே மற்றவர்களுக்கு இந்த பத்திரத்தின் விலையானது கிராமுக்கு 4,,590 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு தேதி மே 19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரிஸ் 1 தங்க பத்திரம்
அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி மூலம் இந்த பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி சீரிஸ் 1 தங்க பத்திரங்களை வெளியிட்டது. கொரோனாவின் மத்தியில் அதிகரித்து வரும் தங்கம் விலையானது, வலுவான முதலீடுகளை ஈர்த்தது எனலாம். இந்த நிலையில் இந்த முறையும் வலுவான முதலீடுகளை ஈர்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் எம்சிஎக்ஸ் தங்கம் விலை அதிகபட்சமாக 10 கிராமுக்கு 47,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. கடந்த ஒரு ஆண்டில் தங்கத்தின் விலை சுமார் 40% உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸின் காரணமாக தொடர்ந்து லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், பரவலான மந்த நிலை காரணமாக பொருளாதார அச்சங்கள் நிலவி வருகின்றன.
தங்கம் இருப்பு
இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய தங்க பரிவர்த்தனை வர்த்தக அமைப்பான SPDR ETF பல ஆண்டுகளாக தங்கம் இருப்பு அதிகமாக வைத்துள்ளது. இது அதிகபட்சமாக 1075.8 டன்னாக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சீரிஸ் 1 பத்திரம்
இந்த நிலையில் தான் தங்க பத்திரங்களுக்கான முதல் வெளியீட்டில், ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.4,639 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் மொத்தம் 17.73 லட்சம் பத்திரங்கள் அப்போது விற்பனையாகி இருந்தன. இதன் மூலம் அரசுக்கு 822 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு பத்திர முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்கும் அதிகபட்ச வருவாய் இதுவாகும்.
எப்போது ஆரம்பம்? எவ்வளவு முதலீடு?
இந்த தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டம் 2015ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அப்போது மொத்தம் 9.14 லட்சம் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு 245 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களுக்கு தங்கப் பத்திரங்களை வெளியிடுவதற்கான கால அட்டவணையை ரிசர்வ் வங்கி முன்னரே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த அட்டவணை
2020 -21 சீரிஸ் 3
சந்தா தேதி ஜூன் 08 - 12, 2020, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜூன் 16, 2020.
சீரிஸ் 4
சந்தா தேதி ஜூலை 06 - 10, 2020, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜூலை 14, 2020
சீரிஸ் 5
சந்தா தேதி ஆகஸ்ட் 03 - 07, 2020, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஆகஸ்ட் 11, 2020
சீரிஸ் 6
சந்தா தேதி ஆக்ஸ்ட் 31 - செப்டம்பர் 04. 2020, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி செப்டம்பர் 08, 2020
வெறுமனே தங்க நகைகளாக வாங்கி குவிப்பதை விட, இது போன்று தங்க பத்திரங்கள் வாங்கி வைப்பது நல்ல லாபத்தினையும் கொடுக்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications