தங்க கடன் Vs தனிநபர் கடன்: ஒரு அவசரத் தேவைக்கு எது சிறந்தது? எதில் வட்டி குறைவு?

தற்போது நமக்கு கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் மிக எளிமையாகி விட்டன. வங்கிக்கு செல்லாமல் நம் ஃபோனில் இருக்கும் ஒரு செயலி வாயிலாகவே விண்ணப்பம் செய்து நம்மால் கடன் வாங்கி விட முடிகிறது. அந்த அளவிற்கு வங்கி கட்டமைப்புகளும் டிஜிட்டல் கட்டமைப்புகளும் இந்தியாவில் மேம்பட்டு இருக்கின்றன .

சாதாரண மக்களை பொருத்தவரை தங்களுக்கு ஒரு அவசர பண தேவை என்றால் உடனடியாக அவர்கள் நாடுவது இரண்டு கடன்களை தான் ஒன்று தங்க கடன் இன்னொன்று பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன். உடனடியாக எனக்கு ஒரு தொகை தேவைப்படுகிறது எனும் போது இந்த இரண்டு கடன்களும் விரைவில் நமக்கு பணத்தை பெற்று தரக்கூடிய ஒரு வாய்ப்பாக இருக்கின்றன . ஒரு அவசர தேவைக்கு தங்க கடன் வாங்குவது சிறந்த முடிவா அல்லது பர்சனல் லோன் வாங்குவது சிறந்த முடிவாக இரண்டிலும் இருக்கக்கூடிய சாதக பாதகங்கள் என்ன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

தங்க கடன் Vs தனிநபர் கடன்: ஒரு அவசரத் தேவைக்கு எது சிறந்தது? எதில் வட்டி குறைவு?

தங்க கடன்: நம்மிடம் இருக்கக்கூடிய தங்க நகை ,நாணயம் உள்ளிட்டவற்றை அடமானமாக வைத்து கடன் வாங்குவது. வங்கி அல்லது நிதி நிறுவனங்கள், அடகு கடைகளில் கூட இந்த தங்கத்தின் மீது கடன் என்பது வழங்கப்படுகிறது. பொதுவாக அன்றைய நாளில் தங்கத்தின் விலையில் 75 சதவீத தொகையை கடனாக வழங்குகிறார்கள். தங்க கடனை பொருத்தவரை இந்தியாவில் சாமானிய மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஒன்று . ஒரு மணி நேரத்திற்குள் பணமானது நம் கைக்கு வந்துவிடும்.

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்க கடன்கள் வழங்குவதில் தான் கவனம் செலுத்துகின்றன. ஏனென்றால் பணம் திரும்ப வரவில்லை என்றால் கூட இந்த தங்கத்தை விற்பனை செய்து அவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வார்கள்.

தனிநபர் கடன்: அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கக்கூடிய ஒரு கடன் . ஒரு தனிநபரின் வருமானம், வேலை , கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த கடன் என்பது வழங்கப்படுகிறது . பொதுவாக 10000 ரூபாயில் இருந்து 30 லட்சம் வரை பர்சனல் லோன்களை நாம் பெற முடியும். எந்த ஒரு பொருளையும் அடமானமாக கொண்டு இந்த கடன் வழங்கப்படுவதில்லை என்பதால் இதில் வட்டி விகிதம் என்பது சற்று அதிகமாகவே இருக்கும் . சரி இரண்டு கடன்களையும் தற்போது நாம் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

வட்டி : தங்க கடனில் நாம் நகையை அடமானமாக வைப்பதால் அதற்கான வட்டி குறைவாக இருக்கும். அதுவே தனிநபர் கடனுக்கு தங்க கடனை விட அதிகமாக இருக்கும். சராசரியாக தங்க நகைகளுக்கு 7 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. இது கடன் வழங்கக்கூடிய நிறுவனத்தை பொறுத்தது . பிராசசிங் கட்டணம் சொற்ப தொகையாக தான் இருக்கும். தனிநபர் கடனில் 10% முதல் 24% வரை வட்டி விகிதம் இருக்கும். இதற்கான பிராசசிங் கட்டணம் நாம் பெறக்கூடிய கடன் தொகையில் 1 முதல் 3 சதவீதமாக இருக்கும். எனவே வட்டி அடிப்படையில் பார்க்கும்போது தங்க கடன்கள் சிறந்தவையாக இருக்கின்றன .

கடன் திரும்ப செலுத்தும் காலம்: நாம் அடகு வைக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பை பொறுத்து நமக்கான கடன் தொகை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 1000 ரூபாயில் தொடங்கி 1 கோடி ரூபாய் வரை கடன்கள் கிடைக்கும் பணத்தை திரும்ப செலுத்த 3 மாதம் முதல் 36 மாதங்கள் வரை அவகாசம் இருக்கும். கடனை திரும்ப செலுத்துவதி நெகிழ்வு தன்மை உண்டு. தனி நபர் கடன்களை பொருத்தவரை நம்முடைய கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் முடிவு செய்வார்கள் 10 லட்சம் ரூபாயில் இருந்து 40 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும் 12 மாதங்களில் இருந்து 60 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

எவ்வளவு காலம்: நீங்கள் வங்கிக்கோ அல்லது நிதி நிறுவனத்திற்கு சென்றால் உங்களுடைய தங்கம் எவ்வளவு மதிப்பு அன்றைய நாள் விலை என்ன அடிப்படை ஆவணங்களை சரி பார்த்து 30 நிமிடங்களுக்குள் பணத்தை கையில் கொடுத்து விடுவார்கள் . ஆனால் தனி நபர் கடன்களை பொறுத்தவரை உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், வருமானம், நீங்கள் வேலை செய்யும் இடம், உங்களுடைய வருமான வரலாறு உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்வார்கள் என்பதால் அதற்கு சிறிது காலம் தேவைப்படும்.

என்னென்ன ஆவணம்: தங்க கடனுக்கு ஆவணம் எதுவும் தேவையில்லை. நகை மற்றும் ஆதார் வங்கி கணக்கு விவரங்கள் போதும். தனிநபர் கடனுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள், பே சிலிப் ஆகியவற்றை கேட்பார்கள்.

கிரெடிட் ஸ்கோர்: இரண்டிலுமே நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் கட்டாயம் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இதில் தனிநபர் கடனில் அதிக தாக்கம் இருப்பதை எதிர்பார்க்கலாம்.

நமக்கு இழப்பு என்ன: கடனை செலுத்தவில்லை என்றால் அடகு வைத்த தங்கம் நம் கையை விட்டு போய்விடும் வங்கிகள் அதனை உடனடியாக விற்பனை செய்து பணத்தை மீட்டிக் கொள்வார்கள். பெர்சனல் லோனில் வங்கிகளால் ஒன்றும் செய்ய முடியாது நம்முடைய கிரெடிட் ஸ்கோர் குறையும். எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படும்.

குறைந்த அளவிலான பணம் தேவை குறுகிய காலத்திற்கு தான் தேவை என்பவர்கள் கையில் நகை இருந்தால் தனிநபர் கடனுக்கு மாற்றாக தங்க நகை கடனுக்கு செல்லலாம். இதற்கு கிரெடிட் ஸ்கோர் வருமான ஆதாரம் தேவையில்லை. குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும். ஆனால் நகை வைக்க விருப்பமில்லை என்பவர் தனிநபர் கடனுக்கு போகலாம் ஆனால் வட்டி அதிகமாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+