இந்திய வீடுகளைப் பொறுத்தவரையில் தங்கத்திற்கென்று ஒரு கலாச்சார மதிப்பு உண்டு. திருமணங்கள், பண்டிகைகள் என எதுவாக இருந்தாலும் தங்கத்தை விரும்பி அணியும் பெண்கள் இந்தியாவில் அதிகம். அதோடு தங்கத்தை சிலர் முதலீடாகவும் சேமித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப சில காலமாக தங்கம் அதிரடியாக உயர்ந்து வருகிறது. சாமானியர்களும் தங்கத்தை விரும்பி வாங்குவதற்கான காரணம்.. தேவைப்படும் நேரங்களில் அதை அடமானம் வைத்து பணம் பெற முடியும்.
தங்கக் கடன்கள் என்றால் என்ன?: தங்க கடன் என்பது ஒரு வகையான பாதுகாப்பான கடன் என்றே சொல்லலாம். ஒரு வங்கி அல்லது ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து உங்கள் தங்க நகைகளுக்கு ஈடான பணத்தை பெற முடியும். அவசர காலம் ஏற்படும் சூழலில் வேறு இடங்களுக்குச் சென்று கடன் பெறாமல் தங்களிடம் உள்ள நகைகளை வைத்து பணம் பெறலாம். ஆனால் அதற்கு பெயரளவு வட்டி செலுத்த வேண்டும். கடன் தொகை பொதுவாக தங்கத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் வழங்கப்படும்.

தங்க கடனை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?:
சீக்கிரம் கடன் கிடைக்கும்: பிற கடன்களை விட தங்கக் கடன் வேகமாக கிடைக்கக்கூடிய விருப்பங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக வங்கி கடன்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முதலில் வங்கிக்குச் சென்று தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும். பிற வங்கி செயல்முறையை முடிக்க வேண்டும். இதற்கு கண்டிப்பாக மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை செலவாகும். ஆனால் தங்க நகை வைத்துப் பெரும் கடன்களை அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று எளிதில் பெற முடியும்.
கிரெடிட் ஸ்கோரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: வங்கிகளுக்குச் சென்று கடன் பெற்றால் கிரெடிட் ஸ்கோர் 600 முதல் 750 வரையில் இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? அல்லது வேண்டாமா? என யோசித்து தான் முடிவு எடுக்கும். ஆனால் தங்க கடன்களைப் பொறுத்தவரையில் கிரெடிட் ஸ்கோரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும். வீட்டில் தங்கம் இருந்தால் அதை வைத்து கடன் பெறலாம்.
வட்டி குறைவு: வங்கியில் வாங்கும் கடன்களை விட தங்க நகையை அடகு வைத்து வாங்கும் கடனுக்கு வட்டி குறைவு. இதுவும் தேவைப்படும் நேரங்களில் தங்க கடனை மக்கள் கருத்தில் கொள்ள முக்கிய காரணமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications