மக்கள் அவசர தேவைக்காக தங்களது தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து தங்க நகைக்கடன் வாயிலாக பணம் பெறுகின்றனர். கையில் பணம் கிடைக்கும் வரை வட்டியை மட்டும் கட்டிவிட்டு அதனை மறு அடகு வைப்பர். பணம் மொத்தமாக கிடைத்தவுடன் அதனை செலுத்தி நகைகளை மீட்டு கொள்வர். தனியார் வட்டிக்கடை, தனியார் அடகுகடைகளை விட பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் குறைவு என்பதால் மக்கள் அதிகம் பொதுத்துறை வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற்று வந்தனர்.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு 2024 செப்டம்பர் முதல் மாதாந்திர தங்கநகைக் கடன் வளர்ச்சி 50 சதவீதத்தை தாண்டியது. இந்த ஆண்டின் முதல் மாதமான கடந்த ஜனவரியில் தங்க நகைக்கடன் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 76 சதவீதம் வளர்ச்சி கண்டது. தங்க நகைக்கடன் பிரிவில் ஏற்பட்டுள்ள திடீர் வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கிக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன் தொடர்பாக புதிய விதிமுறையை அறிவித்தது. அதாவது முன்பு போல் வட்டியை மட்டும் செலுத்தி நகையை மறுஅடமானம் வைக்க முடியாது. தற்போது அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்தி நகையை திரும்ப பெற வேண்டும்.

இதனால் தங்களின் நகைகளின் ஏலத்துக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி நகையை மீட்டு மீண்டும் அடகு வைக்க வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர். இது சாமானிய மக்களுக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. மேலும் இந்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்தனர். இந்நிலையில், தங்க நகைக்கடன் விதிமுறைகள் தொடர்பாக விரிவான வரைவு வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இது தொடர்பாக கூறுகையில், தங்க நகைகள் மூலம் ஆதரிக்கப்படும் கடன்களுக்கான விதிமுறைகள் ஒரே மாதிரி இருப்பதை நோக்கமாக கொண்ட விரிவான வரைவு வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிடும். மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக இந்த வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். வரவிருக்கும் அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களிலும் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒன்றிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் அவற்றின் இடர்தாங்கும் திறன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. தற்போது வங்கிகள் மற்றும் வங்கி சாரா கடன் வழங்குநர்களிடையே விதிகள் பரவலாக வேறுபடுகின்றன. சமீபத்திய ரிசர்வ் வங்கி தணிக்கைகளில் அடையாளம் காணப்பட்ட பல அபாயங்களை தொடர்நது, புதிய கட்டமைப்பானது விவேகமான மற்றும் நடத்தை தொடர்பான அம்சங்களை கையாளும் என்று தெரிவித்தார்.
தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பான விதிமுறைகள் ஒன்றிணைக்கப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், தங்க நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களான முத்தூட் பைனான்ஸ் மற்றும் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் ஆகிய பங்குகளின் விலை சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே முத்தூட் பைனான்ஸ் பங்கின் விலை 11 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.2,027.25 வரை சென்றது. பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஐஐஎஃப்எல் பைனான்ஸ் பங்கு விலை 8 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டு ரூ.305.55ஆக குறைந்தது.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications