வீடுகளில் தங்க நகைகளை வைத்திருப்பது பாதுகாப்பு கிடையாது என்பதால்தான் ஏராளமானவர்கள் தங்கள் கைவசம் இருக்கக்கூடிய தங்க நகைகளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பார்கள்.
வங்கி லாக்கரில் தங்க நகைகளை வைத்திருக்கிறோம். திடீரென அந்த நகைகள் மாயமாகிவிட்டன அல்லது லாக்கர் வைத்திருந்த வங்கி திவால் ஆகிவிட்டது எனும் போது நமக்கு லாக்கரில் வைத்த முழு நகையும் திரும்ப கிடைக்காது . அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும். நீங்கள் லாக்கரில் வைத்த நகையின் மதிப்பு எத்தனை லட்சமாக இருந்தாலும் சரி ஏன் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருந்தாலும் சரி இது போன்ற சமயங்களில் உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடியது ஐந்து லட்சம் ரூபாய் தான்.

ஆனால் இதே தங்கத்தை வேறு முறையில் வங்கியில் வழங்கி தங்கத்தை பாதுகாக்கும் பொறுப்பையும் ஒரு வேளை ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தங்கத்திற்கான முழு மதிப்பையும் வங்கியே நமக்கு தரும் வகையில் மாற்ற முடியும் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள் . பிரேம் சோனி என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக விரிவாக பதிவு செய்து இருக்கிறார்.
நீங்கள் வங்கி லாக்கரில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தி தங்க நகை வைக்கிறீர்கள், அந்த நகைக்க ஏதேனும் நடந்தது என்றால் வங்கி உங்களுக்கு திரும்ப ஐந்து லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் கொடுக்கும். நான் சொல்லக்கூடிய இந்த வழிமுறையை பின்பற்றுங்கள் என கூறியிருக்கிறார் . இதன்படி வங்கி லாக்கரை வாடகைக்கு எடுத்து தங்க நகைகளை வைப்பதற்கு மாற்றாக வங்கியில் உள்ள Gold Over Draft Loan (கோல்டு ஓவர் டிராஃப்ட் லோன்) என்ற ஒரு பிரிவு இருக்கிறது அதனை பயன்படுத்துங்கள் என கூறியிருக்கிறார் .
உங்கள் கைவசம் இருக்கும் அதே தங்கத்தை வேறு முறையில் வைத்து அதற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கப் போகிறீர்கள் என விளக்கம் தந்து இருக்கிறார். அதாவது Gold Over Draft Loan என்ற முறையில் நாம் வங்கிக்கு சென்று நம்முடைய நகைகளை கொடுக்கும்போது வங்கி அந்த நகைகளின் மதிப்பு என்ன என்பதை மதிப்பீடு செய்யும். இதனை எடுத்து அவர்கள் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்து விடுவார்கள். அந்த நகைக்கான முழு பொறுப்பும் வங்கிக்கு சென்றுவிடும்.

வங்கி அந்த தங்க நகையின் மதிப்பில் 70% பணத்தை ஓவர் டிராஃப்ட் வரம்பாக நிர்ணயம் செய்வார்கள் . இந்த நடைமுறைக்கு உங்களுக்கு செயலாக்க கட்டணமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டியது இருக்கும் அதன் பிறகு ஜிஎஸ்டி பணத்தை செலுத்தினால் போதும். உங்களுக்கு வரக்கூடிய பணத்தை நீங்கள் தேவைப்பட்டால் எடுத்து பயன்படுத்தலாம் இல்லையென்றால் அப்படியே வைத்து விடலாம்.
எவ்வளவு பணத்தை எடுத்து பயன்படுத்துகிறீர்களோ அதற்கு மட்டும்தான் வட்டி செலுத்த வேண்டும் ஒரு வேளை நீங்கள் ஓவர் டிராஃப்டில் கொடுக்கப்பட்டிருக்கும் பணத்தை பயன்படுத்தவே இல்லை என்றால் நீங்கள் வட்டியே செலுத்த தேவையில்லை என கூறுகிறார்.
உதாரணமாக நீங்கள் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கோல்டு ஓவர் டிராப்ட் லோனில் வைக்கிறீர்கள். உங்களுக்கு 35 லட்சம் ரூபாய் ஓவர் டிராஃப்ட் லிமிட்டாக வழங்கப்படுகிறது. அந்த பணத்தை அப்படியே மொத்தமாக எடுத்து பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை , அதற்கு மட்டுமே வட்டி செலுத்தலாம் அல்லது உங்களுக்கு அந்த பணமே தேவை இல்லை என்றால் அதனை எடுத்து பயன்படுத்த தேவையில்லை அவ்வாறு எடுக்காத போது எந்த ஒரு கூடுதல் கட்டணத்தையும் நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை.
இந்த முறையில் வங்கி உங்களுடைய தங்கத்திற்கான முழு பாதுகாப்புக்கான பொறுப்பை பெறுகிறது. உங்கள் நகைகளுக்கு ஏதேனும் நடந்தால் அந்த முழு தொகையும் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு வங்கிகள் இடம் சென்று விடுகிறது . உங்களுக்கு எப்பொழுதாவது பணம் தேவைப்படுகிறது என்றால் இதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எடுத்த பயன்படுத்தும் பணத்திற்கு மட்டுமே நீங்கள் வட்டி செலுத்தினால் போதும் . எனவே ஸ்மார்ட்டான முறையில் உங்களுடைய தங்க நகைகளை பயன்படுத்துங்கள் என கூறியிருக்கிறார். ஆனால் அடுத்த சில மாதங்களுக்கு இந்த தங்க நகை எனக்கு தேவையில்லை எனும் போது மட்டுமே இந்த பிரிவை பயன்படுத்த அறிவுரை வழங்குகிறார்.


Click it and Unblock the Notifications