தங்கம் Vs தங்க பத்திரம் Vs மியூச்சுவல் ஃபண்ட்.. எது சிறந்தது.. எது லாபகரமானது..!

இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்பது எல்லாருடைய வாழ்க்கையிலும் மிக அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த முதலீட்டு திட்டத்திற்கு நிதி நிர்வாகம் என்பது மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அப்போது தான் உங்கள் முதலீட்டினை பெருக்க முடியும். உங்களின் வயதுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.

ஒவ்வொரு முதலீட்டிலும் ஆதாயம், இடர்பாடு என இரண்டும் கலந்திருக்கும். ஆக நீங்கள் செய்துள்ள முதலீட்டின் தன்மை குறித்து முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இலக்கினை தீர்மானியுங்கள்

இலக்கினை தீர்மானியுங்கள்

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆரோக்கிய பராமரிப்பு காப்பீடு இன்றியமையாத ஒன்றாகும். இதிலும் சிறு தொகையை முதலீடு செய்து வாருங்கள். இது மிகப்பெரிய மருத்துவ செலவுகளை சமாளிக்க இந்த துணை நிற்கும். உங்கள் இலக்கினை தீர்மானம் செய்து அதற்கேற்ப முதலீடு செய்யலாம்.

பிசிகல் தங்கம்

பிசிகல் தங்கம்

இன்று நாம் பார்க்கவிருப்பது தங்கம், தங்க பத்திரம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தான். தங்கம் என்பது பொதுவாக பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. இதனை நகையாகவும், காயினாகவும் வாங்கலாம். எனினும் இதனை வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும்.

செலவு அதிகம்

செலவு அதிகம்

இதனை திரும்ப விற்கும் போதும், தேய்மானம், தரம் என பலவற்றையும் கண்கானிக்க வேண்டியிருக்கும். எனினும் இதில் லாபம் என பெரியதாக இல்லை. ஆக ஆபரண நோக்கில் வாங்க நினைப்பவர்கள் நகையாக வாங்கி வைக்கலாம். மற்றவர்கள் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அல்லது பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

தங்க பத்திர திட்டங்கள்

தங்க பத்திர திட்டங்கள்

ரிசர்வ் வங்கியின் தங்க பத்திர திட்டங்கள், இன்று பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இந்த பத்திரங்களுக்கு 2.50% வருடத்திற்கு வட்டி விகிதம் கிடைக்கிறது. அதோடு இதனை சந்தை மதிப்புக்கு ஏற்ப விற்பனை செய்து கொள்ளலாம். இந்த பத்திரங்களின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். எனினும் 5 ஆண்டுகள் கழித்து வெளியேறும் வழி உண்டு. இதில் வரி சலுகையும், உண்டு.

இதனையும் கவனிக்க வேண்டும்?

இதனையும் கவனிக்க வேண்டும்?

எனினும் பிசிகல் தங்கத்தினை போன்று இந்த தங்க பத்திரங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் வாங்க முடியாது. ரிசர்வ் வங்கி அறிவிக்கும் தேதிகளில் மட்டுமே வாங்க முடியும். இந்த பத்திரங்களை டிஜிட்டல் மூலமாக வாங்கும்போது கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பத்திரங்களை பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

எந்த திட்டம் சிறந்தது?

எந்த திட்டம் சிறந்தது?

மொத்தத்தில் பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக தங்க பத்திரங்கள், கோல்டு இடிஎஃப் உள்ளிட்ட டிஜிட்டல் தங்கங்கள், தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்த திட்டங்களாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவை நல்ல லாபம் கொடுக்கக் கூடிய சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. லாபம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனும்போது தங்க பத்திரங்கள் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

இதே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்பது அதிகளவிலான லாபத்தினை பார்க்க சிறந்த முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக எஸ்ஐபி-க்களில் குறைந்த அளவிலான தொகையை கூட முதலீடு செய்ய முடியும். எதிர்காலத்தில் நல்ல லாபம் பார்க்க, கணிசமான கார்பஸினை அடைய மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த அம்சமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+