பிரம்மாண்டமான வட்டி கொடுக்கும் FD திட்டங்கள்! சரிப்பட்டு வருமா பாருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கையில் கொஞ்சம் காசு இருக்கிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம், ஆனால் எந்த பங்குகள் எப்போது மேலே போகும், எப்போது கீழே வரும் என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது.

 

ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பிரச்சனை வெளியானதில் இருந்து, மியூச்சுவல் ஃபண்ட்கள் பக்கம் திரும்பக் கூட கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது.

இப்போதைக்கு கையில் இருக்கும் பணத்தை நல்ல ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா?

வட்டி குறைவு

வட்டி குறைவு

ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியிலேயே வட்டி விகிதங்கள் மிகவும் குறைவாக கொடுப்பதாகத் தோன்றுகிறதா? அப்படி என்றால் இது உக்களுக்கான கட்டுரை தான். எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களை விட கூடுதலாக, 7.5 - 9 % வரை வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். ஒப்பீட்டுக்காக, எஸ்பிஐ வங்கி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களைக் கீழே கொடுக்கிறோம்.

SBI FD வட்டி விகிதங்கள்

SBI FD வட்டி விகிதங்கள்

27-05-2020 முதல், பொது மக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days 2.9%
46 days to 179 days 3.9%
180 days to 210 days 4.4%
211 days to less than 1 year 4.4%
1 year to less than 2 year 5.1%
2 years to less than 3 years 5.1%
3 years to less than 5 years 5.3%
5 years and up to 10 years 5.4%

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்
 

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

Fincare Small finance Bank என்கிற வங்கி பொது மக்களுக்கு அதிகபட்சமாக 48 மாதங்கள் - 59 மாதங்கள் வரையான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.5% வட்டி கொடுக்கிறார்கள். மற்ற டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே பாருங்கள். 22 ஜூன் 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள். இது 2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Fincare Small finance Bank FD Interest rates

Fincare Small finance Bank FD Interest rates

7 Days to 45 Days 3.50%
46 Days to 90 Days 4.00%
91 Days to 180 Days 5.00%
181 Days to 364 Days 6.25%
12 months - 15 months 6.95%
15 months 1 day - 18 months 7.00%
18 months 1 day - 24 months 7.10%
24 months 1 day - 36 months 7.20%
36 months 1day - 48 months 7.30%
48 months 1day - 59 months 7.50%

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

Utkarsh Small Finance Bank என்கிற வங்கி பொது மக்களுக்கு, அதிகபட்சமாக 700 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8% வட்டி கொடுக்கிறார்கள். மற்ற டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே பாருங்கள். 03 ஜூலை 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள். இது 2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Utkarsh Small Finance Bank FD Interest rates

Utkarsh Small Finance Bank FD Interest rates

7 Days to 45 Days 3.50%
46 Days to 90 Days 4.00%
91 Days to 180 Days 4.50%
181 Days to 364 Days 6.50%
365 Days to 699 Days 7.75%
700 Days 8.00%
701 Days to 3652 Days 7.75%

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

என்னாது 9% வட்டியா? என மூக்கு மேல் விரல் வைக்கும் விதத்தில் இந்த சூர்யோதய் வங்கி, பொது மக்களுக்கான, 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9% வட்டி கொடுக்கிறார்கள். மற்ற டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே பாருங்கள். 01 மே 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுப்பதாக அவர்களின் வலைதளம் சொல்கிறது. இது 2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Suryoday Small Finance Bank FD interest rates

Suryoday Small Finance Bank FD interest rates

7 days to 14 days 4.00%
15 days to 45 days 4.00%
46 days to 90 days 5.00%
91 days to 6 months 5.50%
6 months to 9 months 6.50%
9 months to less than 1 Year 7.00%
1 Year to 2 years 7.25%
2 Years to 3 Years 7.50%
3 Years to less than 5 Years 7.75%
5 Years 9.00%
Above 5 years to 10 years 7.25%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good interest rate giving latest fixed deposit plans

Fixed deposit plans which are giving high interest rates than state bank of India fixed deposits.
Story first published: Monday, July 27, 2020, 13:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X