நாட்டில் கொரோனாவின் வருகைக்குப் பிறகு இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது எனலாம்.
குறிப்பாக அரசு வழங்கும் இன்ஷூரன்ஸ் திட்டங்களில், குறைந்த பிரீமியத்தில், அதிக காப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்பது மிகவும் கவர்ச்சிகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா உள்ளிட்ட சில திட்டங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இந்த காப்பீட்டு திட்டங்களில் வெறும் 342 ரூபாய் பிரீமியமாக செலுத்தினால், 4 லட்சம் வரையில் காப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
அரசு வழங்கி வரும் பல்வேறு திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா. இந்த திட்டத்தில் வெறும் 330 ரூபாய் பிரிமீயம் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் எடுக்க முடியும். அதோடு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் இந்த சேமிப்பு கணக்கினை எடுக்க முடியும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா - இறப்பு பலன்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் வருடத்திற்கு 330 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். ஓரு வேளை பாலிசிதாரர் இறந்து விட்டால், இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் வரை க்ளைம் செய்து கொள்ள முடியும்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம்
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா எனப்படும் காப்பீடு திட்டமானது, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குறுகிய கால காப்பீட்டு திட்டமாகும். இது விபத்து காரணமாக இறப்போ அல்லது உடல் ஊனமோ ஏற்பட்டால் வழங்கப்படும் ஒரு காப்பீடாகும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் படி, தனி நபர் இறப்பிற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், இதே நிரந்தர ஊனத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், இதுவே உடல் ஊனத்திற்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகின்றது.
சுரக்ஷா பீமா யோஜனாவில் எவ்வளவு பிரீமியம்?
இந்த திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் இன்சூரன்ஸ் பிரீமியம் தான். ஏனெனில் வருடத்திற்கு வெறும் 12 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதுமானது. அதாவது மாதத்திற்கு நீங்கள் வெறும் 1 ரூபாய் செலவு செய்தாலே போதுமானது. ஆனால் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் எனில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதோடு இந்தத் இன்சூரன்ஸ் திட்டத்தில் பங்கேற்க 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் இதற்கு தகுதியானவர் எனில், வங்கிகளை அணுகி அதற்கான விண்ணப்பத்தினை கொடுக்கலாம்.
எப்போது பிரீமியம் செலுத்தனும்?
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 12 ரூபாய் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். இந்த தொகையானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதிக்குள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். முதல் ஆண்டில் பிரீமியம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம், அடுத்த வருடத்தில் முதல் பருவத்திலிருந்து தொடங்கும்.
பிரீமியம் - ஆட்டோமேட்டிக் டெபிட்
இந்த திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பெற வங்கியில் விண்ணப்பங்கள் சமர்பிக்கும் போதே, இன்சூரன்ஸ் திட்டத்திற்கான பிரீமியத்தை வங்கியே தானாக எடுத்துக்கொள்ளும் ஆட்டோமேட்டிக் டெபிட் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது 12 ரூபாய் ஆனது மே 31ம் தேதிக்கு முன்னர், உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே இன்சூரன்ஸ் திட்டத்திற்கு செலுத்தப்படும்.
தொகை இல்லையெனில் பாலிசி முடிவடைந்து விடும்
ஒரு வேளை உங்களுடைய வங்கிக் கணக்கு ஜாய்ண்ட் கணக்கு எனில் (Joint Account) கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்காகவும் 12 ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான நிலுவைத் தொகையை வைத்திருக்கவில்லை எனில், உங்கள் திட்டம் ரத்து செய்யப்படும். இது தவிர வங்கி கணக்கு மூடப்பட்டால் பாலிசி முடிவடையும். பிரிமீயம் டெபாசிட் செய்யப்படாவிட்டால் பாலிசியை புதுபிக்க முடியாது.
எந்தெந்த வங்கிகள் இணையலாம்?
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தினை எஸ்பிஐ, வங்கிகள், ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஹெச் டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியா, உள்ளிட்ட பல வங்கிகளில் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்காக
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)-க்கான படிவம் வெவ்வேறு இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. இவற்றில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, பங்களா, கன்னடம், ஒடியா, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவை அடங்கும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://jansuraksha.gov.in/Forms-PMSBY.aspx என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

மினிமம் பேலன்ஸ் அபராதங்களுக்கு முடிவு கட்டுமா மத்திய அரசு? நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பிரச்சினை

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications