கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி மத்தியில், மத்திய வங்கியானது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தினை மாற்றாமல் வைத்துள்ளது.
இதன் காரணமாக வங்கி வைப்பு நிதிகளுக்காக வட்டி விகிதமானது சமீப காலமாக பெரியளவில் மாற்றம் காணவில்லை. சொல்லப்போனால் வட்டி விகிதமானது மிக குறைந்து காணப்பட்டது.
இது வங்கி வைப்பு நிதியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினையே ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் வங்கி பிக்சட் டெபாசிட்டுகளிலும் மக்கள் முன்பை போல ஆர்வம் காட்டவில்லை.
வட்டி அதிகரிப்பு ஆரம்பம்
இதற்கிடையில் கடந்த ஆர்பிஐ கூட்டத்தில் கூட ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த முறை வட்டியில் மாற்றம் செய்யவில்லை என்றாலும், விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக சில வங்கிகள் மீடியம் டெர்மிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை கணிசமாக உயர்த்த ஆரம்பித்துள்ளன,.
எஸ்பிஐ அதிரடி முடிவு
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு தான் தனியார் துறையை சேர்ந்த மிகப்பெரிய தனியார் வங்கியான, ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினை இரண்டாவது முறையாக அதிகரித்தது. இந்த நிலையில் ஹெச்.டி.எஃப்.சி தொடர்ந்து தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்பிஐ-யும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
எப்போது முதல் அமல்
இந்த வட்டி அதிகரிப்பானது பிப்ரவரி 15, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது எனவும், இது 2 கோடி ரூபாய் வரையிலான வைப்பு நிதிக்கு பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளார்கள் இனி சற்று அதிகப்படியான வட்டி விகிதத்தினை பெறுவர்.
மாற்றப்பட்ட வட்டி விகிதம் (பொதுமக்களுக்கு)
- 7 - 45 நாட்கள் - 2.9%
- 46 - 179 நாட்கள் - 3.9%
- 180 - 210 நாட்கள் - 4.4%
- 211 முதல் 1 வருடத்திற்குள் - 4.4%
- 1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5.1%
- 2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.2%
- 3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.45%
- 5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.5%
மாற்றப்பட்ட வட்டி விகிதம் (மூத்த குடி மக்களுக்கு)
- 7 - 45 நாட்கள் - 3.4%
- 46 - 179 நாட்கள் - 4.40%
- 180 - 210 நாட்கள் - 4.9%
- 211 முதல் 1 வருடத்திற்குள் - 4.90%
- 1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5.60%
- 2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.70%
- 3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.95%
- 5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 6.3%


Click it and Unblock the Notifications