இன்று கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு மக்களிடையே சர்வ சாதாரணமாகிவிட்டது. கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் கிரெடிட் கார்டுகளைப் பெற்று செலவு செய்து வருகின்றனர். கிரெடிட் கார்டுகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால்.. அதற்கான கேஷ் பேக் மற்றும் ரிவார்ட் புள்ளிகளை வைத்து நல்ல பலன்களைப் பெற முடியும். இந்தப் பதிவில் கிரெடிட் கார்டுகளை முதல் முறை பெற்றிருந்தால் எந்தெந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்? என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம்.
அறிமுக சலுகைகள் மற்றும் போனஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்: பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் போனஸ், ரிவார்ட் பாயிண்ட்டுகள், மெம்பர்ஷிப்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளுடன் தள்ளுபடிகள் அல்லது கேஷ்பேக்குகள், இலவச விமான டிக்கெட்டுகள் போன்ற பலன்களை வழங்குகின்றன.

எடுத்துக்காட்டாக, Flipkart Axis Bank கிரெடிட் கார்டு முதல் ஸ்விக்கி ஆர்டரில் 50 சதவீத உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இதே போல உங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு என்னென்ன தள்ளுபடிகள் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ரிவார்டு பாயிண்ட்கள் மற்றும் போனஸ் வகைகளைப் புரிந்து கொள்ளுங்கள்: கிரெடிட் கார்டுகள் ரிவார்டு பாயிண்ட்கள் அல்லது பெரும்பாலான செலவினங்களுக்கு கேஷ்பேக் வடிவில் வால்யூ-பேக்கை வழங்குகின்றன.
நீங்கள் ஒரு புதிய கிரெடிட் கார்டைப் பெறும்போது, அதிகபட்ச பலன்களைப் பெறக்கூடிய வகைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் கார்டைப் பயன்படுத்த வேண்டும்.
சில கார்டுகள் குறிப்பிட்ட பிராண்டுகளுடன் கூடுதல் பலன்களை வழங்கலாம். உதாரணமாக, உங்கள் கார்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் ரிவார்டு பாயிண்ட்டுகளை வழங்கினால், ஆன்லைன் பரிவர்த்தனைகள் அனைத்தையும் கிரெடிட் கார்டின் மூலம் செலுத்தி பலன்களைப் பெறலாம்.
நிபந்தனைகளைப் புரிந்து கொள்வது: கிரெடிட் கார்டு பலன்களைப் பெறுவதற்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பெட்ரோல், நகை, பயன்பாட்டுப் பொருட்கள் போன்றவற்றில் எந்தவிதமான ரிவார்டுகளும் கிடைக்காது. இந்த விஷயங்களை மனதில் கொண்டால், கார்டிலிருந்து அதிகபட்ச பலன்களை பெற முடியும்.
பணம் எடுத்தலைத் தவிர்க்கவும்: பெரும்பாலான கிரெடிட் கார்டுகளில் பணம் எடுத்தல் வட்டி இல்லாத காலத்திற்கு தகுதியானது அல்ல. அதாவது, உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்-லிருந்து பணம் எடுத்தால், முதல் நாளிலிருந்தே கட்டணம் பொருந்தும்.
சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு மட்டுமே செலவிடுங்கள்: சிலர் தங்களையும் மீறி அனைத்து கிரெடிட் கார்டு தொகையையும் பயன்படுத்திவிட்டு, பின்னர் திருப்பி செலுத்தும் போது நிதி சிக்கலுக்கு ஆளாகி சிரமப்படுவார்கள். இது போன்ற நபர்கள் ஒரு வரையறை வைத்து செலவு செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
கூடுதல் சலுகைகளைப் படித்து பயன்படுத்துங்கள்: பரிசுகள் அல்லது கேஷ்பேக்குடன் கூடுதலாக, கிரெடிட் கார்டுகள் வெவ்வேறு வகைகளில் பல கூடுதல் சலுகைகளை வழங்கலாம். அவற்றைத் தெரிந்து கொண்டு செயல்படுவது கிரெடிட் கார்டுகளை திறம்பட பயன்படுத்துவதற்கு உதவும்.


Click it and Unblock the Notifications