புதிதாக திருமணம் செய்துக்கொண்டவர்கள் ஆரம்பத்திலேயே சரியான நிதியியல் திட்டமிடல் இல்லாமல் வாழ்க்கை தொடங்குவது எவ்வளவு பெரிய தவறு என்பது ஆரம்பத்தில் புரியாது, 5- 10 வருடத்தில் பெரிய பின்னடவை வாழ்க்கையில் உருவாக்கும்.
புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள், எதிர்கால சேமிப்பை எப்படி திட்டமிடுவது என்பதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் எளிதாக அனைவருக்கும் புரியும். உதாரணமாக இங்கு வினித் - கீதிகா என்ற ஜோடியை எடுத்துக்கொள்வோம்.

வினித்துக்கும் கீதிகாவுக்கும் இப்போது தான் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் முப்பதுகளின் தொடக்கத்தில் உள்ளனர். இருவரும் நல்ல வேலையில் உள்ளனர், மேலும் அவர்கள் குடும்பத்தைத் தொடங்க எந்த அவசரமும் இல்லாததால் தங்கள் வாழ்க்கையை ஜாலியாகத் தொடர முடிவு செய்துள்ளனர்.
ஆனால் தற்போது அவர்களிடம் பெரிய சேமிப்பு எதுவும் இல்லை. அவர்கள் தங்களுக்கென ஒரு உறுதியான நிதி ஆதாரத்தை உருவாக்க ஆர்வமாக உள்ளனர். மேலும் அவர்கள் ஒரு குடும்பத்தைத் தொடங்குவதற்கு முன் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க முடியும்.
அதே நேரத்தில், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். ஒரு இறுக்கமான வாழ்க்கை முறையை தொடர விரும்பவில்லை. தங்கள் வாழ்க்கையில் இந்த கட்டத்தில் சேமிக்க வேண்டியது அவசியம்தானா என்று மிகவும் கவலைப்படுகிறார்கள்.
இது பெரும்பாலான இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் முக்கியமான மற்றும் அடிப்படையான பிரச்சனை. இந்த நிலையில் வினித்துக்கும் கீதிகாவுக்கும் ஒன்றாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது பணம் சம்பந்தமாக முன்னுரிமையில் விஷயங்கள் என்ன?
வினித்தும் கீதிகாவும் தங்கள் வாழ்க்கையில் உற்சாகமான புதிய கட்டத்தில் இருந்தாலும் சிந்தித்து திட்டமிடுவது மிகவும் முக்கியம். இந்த நிலையில் வீடு வாங்குவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும். பொழுதுபோக்கு, பயணம், உணவு உண்பதில் அதிக செலவுகளைச் சந்திக்க நேரிடும்.
இருவரின் பங்களிப்பின் அடிப்படையில் மாதாந்திர வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குவது, செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். மேலும் இந்தக் கணக்கில் உள்ள உபரியை பெரிய செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
அவர்களின் செலவினங்களை திட்டமிட்டு அதற்கான பணத்தை ஒதுக்கிய பிறகு மீதமுள்ள வருமானத்தை ஈக்விட்டி ஃபண்டுகளில் முறையாக முதலீடு செய்ய பயன்படுத்த வேண்டும். இது அவர்களின் சொந்த வீட்டு கனவின் முன் பணத்துக்குத் தேவையான நிதி ஆதாரத்தை அவர்களுக்கு வழங்கும்.

அவர்கள் தங்கள் பெயர்களில் முதலீடுகள், நல்ல கிரெடிட் ஸ்கோர், தங்கள் வங்கிகளுடன் உறவு வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் அவர்கள் தேவைப்படும்போது எளிதாக கடன் வாங்க முடியும். கடன் வலையில் விழுவது, அதை உணர்ந்து கொள்வதற்கு முன்பே, அவர்களைப் போன்ற பல இளம் தம்பதிகள் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை ஆகும்.
ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாமல் இருப்பது, பல கார்டுகளைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக நிலுவைத் தொகையை செலுத்துதல், பல தனிநபர் கடன்களை அடைத்தல், தவணைகளை தவற விடுதல் போன்றவை அவர்கள் தங்கள் வருவாய்க்கு அப்பாற்பட்டு வாழ்கிறார்கள் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாகும். இது அவர்களின் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அவர்கள் வீடு வாங்கத் தயாராக இருக்கும் போது நல்ல விலையில் கடன் வாங்கும் திறனையும் பாதிக்கும். தங்களது நிதி நிலைமையை அவ்வப்போது அவர்கள் சரி பார்த்துக் கொள்வது மற்றும் விஷயங்கள் கையை விட்டு மீறுவதற்கு முன் சரியான நடவடிக்கை எடுப்பது அவர்களின் நிதி நல்வாழ்வை உறுதிப்படுத்த ஒரு நல்ல படியாக இருக்கும்.
More From GoodReturns

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications