தீபாவளி போனஸ் வந்தாச்சா? உடனே செலவு பண்ணிடாதீங்க.. இந்த 7 வழிமுறைகளை ஃபாலோ பண்ணுங்க..!!

இந்தியர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி என்றால் பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அப்படி இந்த தீபாவளிக்கான போனஸ் பெரும்பாலான ஊழியர்களுக்கு வந்துவிட்டது. இந்த போனஸ் பணத்தை மொத்தமாக ஒரே நேரத்தில் தீபாவளி ஷாப்பிங்கிற்காக செலவழித்துவிட்டு கையை பிசைவதைவிட பின்வரும் வழிகளில் பயன்படுத்தினால் பணத்தை சேமிக்கவும் முடியும்.

கடன்கள்: கிரெடிட் கார்டு பில்கள் அல்லது தனிநபர் கடன்கள் போன்ற அதிக வட்டி விகிதம் உள்ள கடன்களை அடைப்பது புத்திசாலித்தனமானது. கிரெடிட் கார்டு நிலுவை தொகைக்கு மாதத்திற்கு 3% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 30% க்கும் அதிகமாகும். எனவே, போனஸ் வந்தவுடன் இந்த உயர்ந்த வட்டி கடன்களை அடைப்பது, பெரிய வட்டி சேமிப்பை தரும்.

தீபாவளி போனஸ் வந்தாச்சா? உடனே செலவு பண்ணிடாதீங்க.. இந்த 7 வழிமுறைகளை ஃபாலோ பண்ணுங்க..!!

அவசர கால நிதி: வாழ்க்கையில் எந்த நேரத்திலும் எதிர்பாராத செலவுகள் வரலாம். எனவே, உங்கள் போனஸ் தொகையின் ஒரு பகுதியை அவசர கால நிதிக்காக ஒதுக்கி வைக்கலாம். அவசர கால நிதியை எளிதில் எடுக்கக்கூடிய சேமிப்பு கணக்குகள் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் போட்டு வைக்கலாம்.

காப்பீடு: நிறுவனங்கள் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் அந்த வேலை இருக்கும் வரை மட்டுமே பலன் தரும். வேலை மாறும்போது அது முடிவுக்கு வரலாம். எனவே, உங்களது போனஸ் தொகையை கொண்டு தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிக்கான ஆண்டு பிரீமியத்தை செலுத்தலாம்.

Also Read

முதலீடு: போனஸ் தொகையை ஒரேடியாக செலவழிக்காமல், எதிர்காலத்திற்காக மியூச்சுவல் ஃபண்டுகள், எஸ்ஐபி அல்லது பங்குகளில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஏற்கனவே எஸ்ஐபி செய்துகொண்டிருந்தால், இந்த போனஸ் தொகையை கொண்டு அந்த தொகையை உயர்த்தலாம். இது உங்கள் எதிர்கால இலக்குகளை விரைவாக அடைய உதவும்.

தீபாவளி பட்ஜெட் : தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் ஷாப்பிங் மீதுள்ள ஆர்வத்தால் பணத்தை கண்டபடி செலவழிப்பது இயல்பு. ஆனால், பண்டிகைகளை கொண்டாட கடனாளி ஆக வேண்டும் என்பதில்லை. தீபாவளிக்காக எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே நிர்ணயம் செய்து, அதற்கென ஒரு பட்ஜெட் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

Recommended For You

தங்கம்: கையில் வரும் போனஸ் தொகைக்கு தங்கம் வாங்கி வைக்கலாம். இப்போது தங்கம் விலை குறைந்து இருப்பதால் தங்கம் வாங்கவும் கோல்டு ஈடிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்யவும் சிறந்த வாய்ப்பு.

வீட்டு கடன் EMI : இந்த போனஸ் தொகையை ஒரு எக்ஸ்ட்ரா EMI செலுத்த பயன்படுத்தலாம் , நீண்ட கால அடிப்படையில் இது உங்கள் வீட்டு கடனில் சிறந்த வட்டி லாபத்தை ஏற்படுத்தி தரும்.போனஸ் கிடைக்கும்போதெல்லாம் அதற்கேற்ப நமது செலவுகளையும் அதிகரித்து கொள்வது தவறான பழக்கமாகும். உங்கள் போனஸ் தொகையை எதிர்கால நிதி பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+