சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு உதவிடும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த கடன்களை SMEகள் (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) தங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்கும், தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும், புதிய உபகரணங்களை வாங்குவதற்கும் கடன்களை பெறலாம். அதன் படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் CGTMSE திட்டம். 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான கடன்களுக்கு 85 சதவிகிதம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் வரை கடனுக்காக அணுகும் குறுந்தொழில்களுக்கு 80% உத்தரவாதக் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், வட கிழக்கு மாநிலங்களில், இந்த திட்டத்தின்மூலம் பெண்களுக்குச் சொந்த தொழில்கள் தொடங்க கடன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிட்பி மேக் இன் இந்தியா MSMEs (SMILE Scheme): இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு கடன்களை வழங்குகிறது. அந்த வகையில், புதிய நிறுவனங்கள் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம். அதே சமயம் தற்போதுள்ள நிறுவனங்கள் ரூ.25 லட்சம் வரை பெறலாம். மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது, SMILE திட்டத்தின் கீழ் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகமாக இருக்கும். வட்டி விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 துறைகளுக்கு இந்தக் கடன் கிடைக்கிறது. இந்தத் திட்டம் நாட்டில் புதிய முயற்சிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.
பிரதம மந்திரி யோஜனா: கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதம மந்திரி யோஜனா (Pradhan Mantri MUDRA Yojana - PMMY) திட்டம் மத்திய அரசால் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தொழில் செய்வதற்கான திட்டம், விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்பித்து முத்ரா கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.
சொந்தமாக தொழில் துவங்கி தொழில்முனைவோர்கள் ஆக விரும்புகிறவர்கள், தங்களது தொழிலை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறவர்கள் முத்ரா யோஜனா திட்டத்தில் விண்ணப்பித்து கடன் பெறலாம். கார்பரேட் நிறுவனங்களால் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது. பொதுவாகவே கடன் பெறுவதற்கு ஏதேனும் ஒரு பொருளை அடமானம் வைக்க வேண்டும். ஆனால் முத்ரா யோஜனாவில் திட்டத்தில் கடன் பெறுவதற்கு அடமானம் எதுவும் தேவையில்லை. பண்ணை அல்லாத துறையில் ஈடுபட்டுள்ள வணிகங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குகிறது
முத்ரா கடன் திட்டம்: இது தருண், கிஷோர், சிஷு என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிஷு பிரிவில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் பிரிவில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் பிரிவில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகின்றன. வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், தனிநபர் வருவாயை பெருக்குவதற்கும் என்பனப் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக முத்ரா கடன் வழங்கப்படுகிறது. 18 வயதை நிரம்பிய யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் விவசாயம் செய்யும் விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. விவசாயம் அல்லாத பிற தொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக கோழி வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களும் முத்ரா கடன் பெறலாம்.
முத்ரா கடன்கள் பொது, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs), வெளிநாட்டு வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ( NBFCs ) மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் (MFIகள்) மூலம் வழங்கப்படுகின்றன .
ஸ்டாண்ட் அப் இந்தியா: கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'ஸ்டாண்ட் அப் இந்தியா' மத்திய அரசால் துவங்கப்பட்டது. ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் ஆகியோருக்கு உதவுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை 'ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தொழில் முனைவோராக முயற்சி செய்யும் சிறு தொழில் செய்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். குறிப்பாக பட்டியல் பிரிவினர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இந்த திட்டம் முன்னுரிமை வழங்கி வருகிறது. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு சொந்தமாக தொழில் துவங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஒருவர் 10-15 சதவீதம் தொகையை சொந்தமாக தொழில் துவங்குவதற்கு டெபாசிட் செய்யும் போது, மீதி பணத்தை இந்த திட்டத்தின் மூலம் கடனாக பெறலாம்.
தேசிய சிறுதொழில் கழகம் (NSIC) திட்டம்:தேசிய சிறு தொழில் கழகம் (NSIC) இத்திட்டத்தின் கீழ் கடன்களை வழங்குகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்ய கடன்களை வழங்க வங்கிகளுடன் NSIC ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. NSIC குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. MSME அலகுகள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைக் கொண்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் 9.5% முதல் 12% வரை வட்டி விகிதங்களுடன் ரூ.5 கோடி வரை கடன் பெறலாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications