டெல்லி: ஃபின் டெக் எனப்படும் நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களின் பான் எண்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது. தி எக்னாமிக் டைம்ஸ் இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023ஐ அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த தயாராகி வருகிறது. இதன் முன் நடவடிக்கையாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனிநபர் அடையாளம் காணும் தகவல்களை அங்கீகரிக்கப்படாத வகையில் பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களின் பான் எண்களை ஃபின் டெக் மற்றும் பிற நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்துவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனவே இனி நிறுவனங்கள் "PAN enrichment" செய்ய முடியாது. அதாவது கடன் வினியோகம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை அவர்களின் பான் எண்ணை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கி கொள்கின்றன. இது தான் "PAN enrichment" என அழைக்கப்படுகிறது.
பின்னர் கடன் மற்றும் பிற நிதி தயாரிப்புகளுக்கு இந்த தகவல் சென்று வாடிக்கையாளரின் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது. எனவே அரசு இதனை தடுக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஃபின்டெக் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். சில சமயங்களில் இந்த தரவுகள் வாடிக்கையாளர்கள் விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களை சரி பார்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் கடந்த ஒரு வார காலமாக இத்தகைய சேவைகள் தடைபட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனெனில் மத்திய அரசு அங்கீகரிக்கப்படாத முறையில் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தரவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டால் இந்திய குடிமக்களின் தரவுகளை தொழில் நிறுவனங்களும், சேவை வழங்கும் நிறுவனங்களும் அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது.
எனவே தான் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு கையில் எடுத்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பான் எண்ணை பயன்படுத்தி வருமான வரி துறையின் பேக் அண்ட் சிஸ்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் முழு பெயர், முகவரி ,தொலைபேசி எண் மற்றும் பிற விவரங்களை அணுகுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் தான் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications