இன்று நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும், சுகாதார துறையை சார்ந்த ஊழியர்கள் பலரும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, சுகாதார துறை ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தினை செப்டம்பர் 3 வரை, மேலும் கூடுதலாக மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் அமல்படுத்திய இந்த சிறப்பு இன்சூரன்ஸ் திட்டமானது ஜூன் 30 அன்று முடிவடைய உள்ள நிலையில், அரசு இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்கள், மற்றும் சுகாரதாரப் பணியாளர்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான காப்பீடு திட்டம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த ஆண்டு மார்ச் 30 வரை நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டம், அரசு நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு மையங்களில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான, இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செப்டம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டு திட்டம் மூலம் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பணி புரியும் மொத்தம் 22 லட்சம் மருத்துவ நிபுணர்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தனிப்பட்ட விபத்து பாதுகாப்புக்கு 50 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். மேலும் இவர்கள் கொரோனா நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் உள்ளமையால், அவர்கள் எளிதில் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இத்தகைய அறிவிப்பினை கொடுத்திருக்கலாம்.
ஆக இந்த காப்பீடானது மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள், நர்ஸ்கள், துணை மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மாநில அரசுகளின் கீழ் பணி புரியும் மருத்துவ வல்லுனர்கள் ஆகியோர் இந்த அதிரடியான திட்டத்தின் கீழ் வருவர் எனவும் கூறப்படுகிறது.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சினால் இயக்கப்படும் இந்த காப்பீட்டுத் திட்டத்திற்கு, தேசிய பேரிடர் பதிலளிப்பு நிதி மூலம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications