பான் கார்டு விதியில் புதிய மாற்றம்.. முதல்ல இதை படிங்க.. நிர்மலா சீதாராமன் அறிவித்த புது ரூல்ஸ்..!!

மத்திய அரசு சமீபத்தில் வருமான வரி விதிகள் 2026-இன் வரைவு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இது வருமான வரி சட்டம் 2025-ஐ அடிப்படையாகக் கொண்டு திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது, மேலும் ஏப்ரல் 1 2026 முதல் அமலுக்கு வரும் காரணத்தால் அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்த புதிய விதிகள் பல்வேறு பரிவர்த்தனைகளில் பான் கார்டு (PAN) விபரங்களை அளிக்க வேண்டிய வரம்புகளை கணிசமாக உயர்த்தியுள்ளன. இதனால் சாமானிய மக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பலருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.

தற்போது சில சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்கும் PAN கட்டாயமாக இருந்த நிலையில், இப்போது வரம்புகள் உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட உள்ள காரணத்தால் பலருக்கும் நன்மை கிடைத்துள்ளது. இந்த மாற்றங்கள் வரி செலுத்துபவர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பான் கார்டு விதியில் புதிய மாற்றம்.. முதல்ல இதை படிங்க.. நிர்மலா சீதாராமன் அறிவித்த புது ரூல்ஸ்..!!

PAN விபரங்களை குறிப்பிட வேண்டிய பரிவர்த்தனைகளில் மாற்றங்கள்

ரொக்க பிரவர்த்தனை
புதிய வரைவு விதிகளின்படி, வங்கி அல்லது கூட்டுறவு வங்கி, தபால் அலுவலகத்தில் ஒரு நிதியாண்டில் மொத்தபணமாக டெபாசிட் அல்லது வித் டிராவல் அளவு ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே PAN குறிப்பிட வேண்டும்.

தற்போது ஒரு நாளில் ரூ.50,000-க்கு மேல் ரொக்க டெபாசிட் செய்தால் PAN கட்டாயமாக உள்ளது. இந்த மாற்றம் தமிழகத்தில் உள்ள சிறு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் ரொக்க பரிவர்த்தனைகள் அதிகம் நடக்கும் நிலையில், இந்த உயர்த்தப்பட்ட வரம்பு அவர்களின் அன்றாட செலவுகளை எளிதாக்கும்.

வாகனங்கள் கொள்முதல்
வாகனங்கள் வாங்கும் போது PAN குறிப்பிடும் வரம்பும் மாற்றப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்துக்கு மேல் விலையுள்ள வாகனங்கள் (மோட்டார் சைக்கிள்கள் உட்பட) வாங்கும்போது PAN விபரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும். தற்போது ரூ.5 லட்சத்துக்கு மேல் விலையுள்ள கார்கள் மட்டுமே இதில் அடங்கும், இரு சக்கர வாகனங்களுக்கு தனி விலக்கு இருந்தது. தற்போது இந்த வரம்பில் இரு சக்கர வாகனங்களும் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஹோட்டல், உணவக பில்கள்
ஹோட்டல், உணவக பில்கள், கன்வென்ஷன் சென்டர், பேன்குவெட் ஹால் அல்லது இவென்ட் மேனேஜ்மென்ட் சேவைகளுக்கு ரொக்கமாக ரூ.1 லட்சத்துக்கு மேல் செலுத்தும்போது மட்டுமே PAN குறிப்பிட வேண்டும். தற்போது ரூ.50,000-க்கு மேல் இருந்தது.

சொத்து பரிவர்த்தனை
அசையா சொத்து வாங்கும் போது, விற்பனை செய்யும் போது, பரிசு அல்லது கூட்டு மேம்பாடு ஒப்பந்தங்களுக்கு PAN குறிப்பிடும் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் சந்தை வளர்ந்து வரும் நிலையில், சிறிய வீடு அல்லது நிலம் வாங்குபவர்களுக்கு இது எளிதாகும். குறிப்பாக கிராமப்புற மற்றும் நடுத்தர நகரங்களில் ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ள சொத்து பரிவர்த்தனைகள் அதிகம் நடப்பதால், இந்த மாற்றம் பயனுள்ளதாக இருக்கும்.

காப்பீடு
காப்பீட்டு நிறுவனத்துடன் கணக்கு தொடங்கும் போது PAN கட்டாயமாக இருக்கும். தற்போது ஒரு நிதியாண்டில் ரூ.50,000-க்கு மேல் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவது உள்ளிட்டவைக்கு PAN தேவை. இந்த மாற்றங்கள் அனைத்தும் வருமான வரி சட்டம் 2025-ஐ அடிப்படையாகக் கொண்டவை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+