இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பிறந்த உடனேயே பல பெற்றோர்களும் சேமிக்க தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் எனில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
குறிப்பாக குழந்தைகளின் கல்வி தொடங்கி, திருமணம் வரையில் பெரியளவில் செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆக பெண் குழந்தைகளுக்கு என செய்யும் முதலீடுகளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். இப்படி செய்யும் முதலீட்டு திட்டங்கள் அரசு திட்டங்களாக இருந்தால் அது பாதுகாப்பானது தானே. இப்படி பெண் குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக உள்ள அரசின் முதலீட்டு திட்டங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
முதலில் நாம் பார்க்க விருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா. இது குறித்து பலரும் அறிந்திருக்கலாம். ஏன் முதலீடும் செய்து கொண்டிருக்கலாம். இது பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேகமான திட்டமாகும். இந்த திட்டத்தில் தற்போது வருடத்திற்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம்
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது பெண் குழந்தைகளை காப்போம் எனும் திட்டமாகும். இது கடந்த 2015ல் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதுவும் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். இது குழந்தைகளின் கல்வியை அடிப்படையாக கொண்டது. இது பெண்களின் எதிர்கால நிதித் தேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் கல்வி கட்டணம், பள்ளி சீருடைகள், மற்ற கல்வி செலவினங்களை செய்ய உதவிகரமாக இருக்கும்.
வரி விலக்கு - பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டத்தின் நோக்கம், நாட்டில் பெண்களின் நிலையை மேம்படுத்துவதும், பெண் குழந்தை பாலின விகிதத்தில் சரிவைத் தடுப்பதும், பெண்கள் அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதும் ஆகும். இந்த திட்டத்தில் 10 வயது வரை உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள். அவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்குவது அவசியம். இந்தத் திட்டம் முற்றிலும் வரி விலக்கு. உங்கள் கணக்கைத் திறந்தவுடன் அதில் இருந்து எந்தத் தொகையும் கழிக்கப்படாது.
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ - ஆவணங்கள்
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டத்தில் இணைய பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் அடையாளச் சான்று, பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் முகவரி ஆதாரம், இந்தத் திட்டத்தின் சிறந்த அம்சமே கணக்கைத் தொடங்கும் நேரத்திலிருந்து பெண் 21 வயதை அடைந்தவுடன் கணக்கு முதிர்ச்சியடையும். அவர் 18 வயதிற்குப் பிறகுதான் உயர் கல்விக்கான நிதியைப் பெறுவார். அவளுக்கு 21 வயதாகும்போது, அவளது திருமணத்திற்கான கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
லட்லி லக்ஷ்மி யோஜனா
மத்திய பிரதேச அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பெற்றோர்கள் தங்கள் மகள்களின் கல்வி மற்றும் திருமணத்திற்காக நிதி உதவி வழங்கும் ஒரு திட்டமாகும். இந்த நிதிகள் சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வட்டியை கல்வி மற்றும் திருமணத்திற்காக பயன்படுத்தப்படலாம்.
கன்யாஸ்ரீ திட்டம்
கன்யாஸ்ரீ திட்டம் மேற்கு வங்க அரசானது பெண்கள் நல முதன்மைத் திட்டமான கன்யா ஸ்ரீ திட்டம், 13 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகதா பெண் குழந்தைகளில் இருந்து 18 வயது வரியயில் நிதி உதவி வழங்கப்படுகின்றது. இது கடந்த 2013ல் தொடங்கப்பட்டது. இது பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரிடையே நிகழும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். இந்த திட்டத்தினால் பலன் பெற 1.2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருமானம் இருக்க வேண்டும். இதன் மூலம் மாதம் 1000 ரூபாய் உதவியாக பெறலாம். 13 - 18 வயது வரையில் திருமணமாகமல் இருந்தால், ஒரு முறை மானியத் தொகையாக 25000 ரூபாயினை பெறலாம்.
ஆப்கி பீட்டா ஹமாரி பேட்டி திட்டம்
ஹரியானா அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் தான் ஆப்கி பீட்டா ஹமாரி பேட்டி திட்டம். இது பெண்களுக்கு தேவையான நிதி உதவியினை வழங்குகிறது. இது பின் தங்கிய வகுப்புகளில் உள்ள சிறுமிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியாகும். இதன் மூலம் குழந்தை பிறந்தால் 21,000 ரூபாய் வழங்குகிறது.
இது பெண் குழந்தைகளின் எதிர்கால சுமையை குறைக்க இந்த திட்டங்கள் உதவும் எனலாம்.


Click it and Unblock the Notifications