ஒரு ஊழியரின் 5 ஆண்டுபணிகாலம் முடியும் முன்பே அவரது கிராஜுட்டி தொகையை வாங்க முடியும். எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
நிறுவனத்தில் இருந்து விலகும் தொழிலாளிக்கு ஒரு குறிப்பிட்ட பங்களிப்பைத் தருவதுதான் கிராஜுட்டி.
இது வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு மிகப் பெரிய வரமாகும். இருப்பினும் கிராஜுட்டி தொகைக்கான தகுதி பற்றி ஊழியர்கள் மத்தியிலும் முதலாளிகள் மத்தியிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன.

இந்த சலுகையைப் பற்றி கிராஜுட்டி சட்டம் 1972 இல் சொல்லப்பட்டிருப்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஒரே நிறுவனத்தில் ஒரு ஊழியர் குறைந்தபட்சம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றினால் அவருக்கு கிராஜுட்டி வழங்கப்படும். அதே சமயத்தில் அவர் 4.8 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாகப் பணியாற்றியிருந்தாலும் கிராஜுட்டி பெறுவதற்கான தகுதி உள்ளது.
வேறு ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்காக ஒரு ஊழியர் வேலையை விட்டு விலக விரும்பினால் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் நிர்வாகம் கிராஜுட்டி அளிக்க வேண்டிய கடமைக்கு ஆளாகிறார். 5 ஆண்டுக்குக் குறைவாக அந்தத் ஊழியர் வேலை செய்திருந்தால் அவருக்கு கிராஜுட்டி தருவதற்கு மறுக்கப்படலாம்.
இதுபோன்ற சமயங்களில் அந்த தொழிலாளர் தனது உரிமையைக் கோர முடியும். கிராஜுட்டி தொகையை வழங்குவதற்கு கிராஜுட்டி சட்டம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது.
முதலாவதாக, ஒரு தொழிலாளர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். இரண்டாவதாக இந்த நிறுவனத்தில் வாரத்துக்கு 5 நாட்கள் பணி முறை இருந்தால் பணிக்காலம் 4 ஆண்டுகள் 190 நாட்கள் இருந்தால் போதும். வாரத்தில் 6 நாட்கள் பணிமுறை இருந்தால் 4 ஆண்டுகள் 240 நாட்கள் பணியாற்றியிருந்தால் போதும்.
கிராஜுட்டி சட்டம் பிரிவு 4(2)இன்படி ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகள் 6 மாதங்கள் பணியாற்றி இருந்தால் அந்த தொழிலாளிக்கு கிராஜுட்டியை தருவதற்கு கிராஜுட்டி சட்டம் 1972 அனுமதிக்கிறது.
தானாக விரும்பி வேலையை விடுபவர்களுக்கு கிராஜுட்டி தரவேண்டும். ஒருவேளை தொழிலாளர் இறந்து போய்விட்டாலோ, விபத்துகள் அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தாலோ அல்லது பணி ஓய்வினாலோ கிராஜுட்டியை பெறலாம்.
இந்த சூழ்நிலைகளில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி பொருந்தாது. பணி ஓய்வு பெற்றவர்களின் நிதி ஆதாரத்துக்காக கிராஜுட்டியை தர வேண்டும். இன்டர்ன்கள் அல்லது தாற்காலிக ஊழியர்கள் கிராஜுட்டி பெறுவதற்கு தகுதியில்லை.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications