போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) என்பது ஒரு பிரபலமான சேமிப்பு திட்டமாகும். இது வழக்கமான நிலையான வைப்புத்தொகை மற்றும் தபால் அலுவலகங்களால் வழங்கப்படும் பிற சேமிப்பு திட்டங்களுக்கு மாற்றாக உள்ளது. மாதம் மாதம் ஒரு சிறு தொகையை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு, போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தப் பதிவில் மாதம் ரூ . 10,000 போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் முதலீடு செய்வதனால் எவ்வளவு லாபம் பெற முடியும்? என்பதைப் பார்ப்போம்.
போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் ஆயுள் காப்பீடு சேவைகளை மக்களுக்கு பயன்பெறும் வகையில் வழங்குகின்றன. இந்தச் சேவைகளில் மிகவும் விரும்பப்படும் விருப்பங்களில் ஒன்றான தபால் அலுவலக RD கணக்கு உள்ளது. தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட்டுக்கு தற்போது ஆண்டுக்கு 6.70% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

RD மீதான வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது, இது முதிர்ச்சி அடையும் வரை உங்கள் சேமிப்பை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. அக்டோபர் 1, 2023-ஆம் ஆண்டிலிருந்து நிதியமைச்சகம், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கும். ஆனால் RD கணக்கிற்கு மட்டும் 5-ஆண்டு காலம் முழுவதும் தொடக்க விகிதத்தில் தான் வட்டி விகிதம் இருக்கும்.
வங்கிகளில் வழங்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் போலன்றி, போஸ்ட் ஆஃபீஸ்களில் வழங்கப்படும் RD திட்டத்திற்கு 5 ஆண்டுகள் லாகின் காலம் உண்டு.
ஆரம்ப 5 ஆண்டுகளுக்கு அப்பால் முதலீட்டை தொடர விரும்புவோருக்கு, RD கணக்கை கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த லாகின் காலம் பத்து ஆண்டுகளாக இருக்கும்.
போஸ்ட் ஆஃபீஸ் விதிகளின்படி, RD-க்கான குறைந்தபட்ச வைப்புத் தொகை மாதத்திற்கு ரூ . 10 ஆகும், அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை.
மாதம் ரூ.10,000 போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் முதலீடு செய்வதனால் எவ்வளவு லாபம் பெற முடியும்?: மாதம் மாதம் 10,000 ரூபாயை போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் 5 ஆண்டுகளில் 6,00,000 ரூபாயை மொத்தமாக முதலீடு செய்து இருப்பீர்கள். 6.7 சதவீத வட்டி விகிதத்தில் இதற்கான வட்டியாக 1,13,659 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் நீங்கள் 7,13,659 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications