தற்போது பெரும்பாலானவர்கள் அதிக சம்பளம் வாங்கினாலும் அது போதவில்லை என புலம்புகின்றனர். ஆனால் சரியன திட்டமிடல் இருந்தால் குறைந்த சம்பளமே நிறைவான வாழ்வை தரும் என்பதற்கு இங்கே ஒரு வீட்டு பணி பெண் முன் உதாரணமாக மாறி இருக்கிறார்.
அதிக சம்பாதிக்கும் கார்ப்பரேட் ஊழியர்களே பணத்தை எப்படி சேமிப்பது என திணறிவரும் காலகட்டத்தில், ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த வீட்டு பணி பெண் ஒருவர் தனது கடின உழைப்பாலும், முறையான நிதி ஒழுக்கத்தினாலும் பலருக்கும் முன்மாதிரியாக உருவெடுத்துள்ளார். குர்கானை சேர்ந்த சிவா மித்தல் என்பவர் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் நிதி மேலாண்மை குறித்து லிங்குடினில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.

எங்கள் வீட்டு பணி பெண் கற்று தந்த பாடம் என அவர் வெளியிட்டுள்ள பதிவில், அவர் குர்கானில் உள்ள 5 முதல் 6 வீடுகளில் தினமும் சென்று வேலை செய்து வருகிறார். மாதத்தில் வெறும் 3 அல்லது 4 நாட்களை மட்டுமே விடுமுறையாக எடுக்கும் அவர், காலை 7 மணிக்கும் முன்பாகவே தனது பணியை தொடங்கிவிடுகிறார். இந்த கடும் உழைப்பின் மூலம் அவருக்கு மாதம் தோறும் சுமார் 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது என கூறியுள்ளார்.
இந்த சம்பளத்திலேயே தனது மகளுக்கு சிறந்த தனியார் பள்ளியில் தரமான கல்வியை வழங்கி வருகிறார். மின் கட்டணம் மற்றும் இதர பயன்பாட்டுச செலவுகள் போக, மாதம் 10,000 ரூபாய் வாடகையாக செலுத்துகிறார். அதுமட்டும் இல்லை தனது சொந்த ஊரில் 6 லட்சம் மதிப்புள்ள நிலம் வாங்க மாத தவணை செலுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
நாம் நிதி தொடர்பான புத்தகங்களை படிக்கிறோம், பட்ஜெட் போடும் செயலிகளை பயன்படுத்துகிறோம், கார்ப்பரேட் வேலைகளில் கைநிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், எதையாவது செய்து பணத்தை விரயமாக்கி விடுகிறோம். ஆனால், அவரிடம் எக்செல் ஷீட்டோ அல்லது சிக்கலான திட்டங்களோ கிடையாது. எதை நாம் செலவழிக்காமல் மிச்சப்படுத்துகிறோமோ, அதுவே நமது சேமிப்பு என்ற எளிய தத்துவத்துடன் வாழ்கிறார் என கூறியுள்ளார்.
கார்ப்பரேட் ஊழியர்கள் கார்கள், விலை உயர்ந்த கருவிகள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்காக கடன் வாங்கி மதிப்பு குறையும் பொருட்களில் பணத்தை முதலீடு செய்கிறோம், ஆனால், இந்த பெண்மணி தன் சொந்த ஊரில் எதிர்கால பாதுகாப்பிற்காக நிலம் வாங்கி, அதன் மூலம் ஒரு நிலையான சொத்தை உருவாக்குகிறார் என பாராட்டியுள்ளார்.
தனது வாழ்க்கையின் முன்னுரிமைகள் என்ன என்பதில் அவர் மிகவும் தெளிவாக உள்ளார் இதுவே நாம் அனைவரும் கற்க வேண்டிய விஷயம் என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனட்தையும் பெற்றுள்ளது. பலரும் அந்த பெண்மணியின் சேமிப்பு பழக்கத்தை பாராட்டி வருகின்றனர்.
அதேசமயம், நடுத்தர குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளையும், கார்ப்பரேட் வேலைகளையும் நேரடியாக ஒப்பிட முடியாது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும், பணத்தை எங்கு, எப்போது செலவழிக்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால் நிம்மதியான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை இவர் உணர்த்துவதாக பலரும் கூறியுள்ளனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


