பொதுவாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய தொடங்கினாலேயே ஒவ்வொருவரும் ஒரு டிப்ஸை கொடுப்பார்கள். இந்த பங்கினை வாங்குங்க, அந்த பங்கினை வாங்க, பெரியளவில் லாபம் கொடுக்கலாம் என கூறுவார்கள். ஆனால் எதற்காக அந்த பங்கினை வாங்க வேண்டும் என கேட்டால், அது தெரிவதில்லை.
அப்படியே காரணம் கூறினாலும், அது சரியான காரணமா? இதை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை உங்களுக்கு தீர்மானிக்க தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரியாவிட்டால் அதனை தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது.
என்ன பங்கு பரிந்துரை
ஷேர்கான் நிறுவனம் ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கினை வாங்கலாம் என கணித்துள்ளது. இது 25% அதிகரிக்கலாம் என இலக்கும் வைத்துள்ளது? ஏன் என்ன காரணம்? எதற்காக இப்படி கூறியுள்ளது. இந்த பங்கினை வாங்கலாமா? வேண்டாமா? ஷேர்கான் கூறும் காரணங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
இலக்கு விலை
ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கினை வாங்க கூறும் தரகு நிறுவனம் அதன் இலக்கு விலையை 1,400 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய நிலையில் இருந்து சுமார் 25 சதவீதம் அதிகரிக்கலாம் என கணித்துள்ளது.
தற்போதைய நிலவரம்
ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலையானது 0.48% அதிகரித்து, 1,124.80 ரூபாயாக என்.எஸ்.இ-ல் முடிவடைந்துள்ளது. இன்றைய உச்சம் 1131 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 1111 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் பங்கு விலையானது 0.46% அதிகரித்து, 1,124.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்சம் 1130.90 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 1111 ரூபாயாகும். இதன் 52 வார உச்சம் 1377 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 815.05 ரூபாயாகும்.
என்ன காரணம்
ஹெச்சிஎல் நிறுவனம் மூன்றாவது காலாண்டிலும் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது பெரியளவிலான ஒப்பந்தங்களை முடித்துள்ளது. இதன் பணியமர்த்தலும் அதிகரித்துள்ளது. ஆக இதன் வணிக செயல்பாடுகளும் முந்தைய காலாண்டினை காட்டிலும் மேம்பட்டுள்ளது.
பணியமர்த்தல் இரு மடங்கு அதிகரிப்பு
தொடர்ச்சியாக கடந்த 4 காலாண்டுகளாகவே ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனம் 35,549 பேரை பணியில் அமர்த்தியுள்ளது. இது முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இருமடங்கு அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் காலாண்டுகளிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரவிருக்கும் காலாண்டுகளிலும் புதிய ஒப்பந்தங்கள் எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரவிருக்கும் காலாண்டுகளிலும் வளர்ச்சி அதிகரிக்கலாம்.
இலங்கையில் விரிவாக்கம்
ஹெச்.சி.எல் டெக்னாலஜி குளோபல் நிறுவனம் இலங்கையில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்துள்ளது. இது 4,000 பணியாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் இருக்கும். ஹெச்.சி.எல் நிறுவனம் 2020ல் இலங்கையில் நுழைந்தது. இது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு, உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை மையமாக மாற்றும் என தெரிவித்துள்ளது. இதுவும் ஹெச்.சி.எல்-லின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications