HDFCயின் செம ஆஃபர்.. பிராசசிங் கட்டணத்தில் 50% தள்ளுபடி.. இன்னும் பல சலுகைகளும் காத்திருக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை காலம் வரவிருப்பதையடுத்து, வங்கிகள் தங்களது வேலையினை சிறப்பாக செய்ய ஆரம்பித்துள்ளன.

வீட்டுக்கடன், வாகனக் கடன், பர்சனல் லோன் என பல வகையான கடன்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் ஒவ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, பல அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. முதல் கட்டமாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, இதனையடுத்து தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் பல சலுகைகளை அறிவித்துள்ளன.

பலத்த அடி வாங்கிய சவுதி அரேபியா.. இரண்டாவது காலாண்டில் 7% வீழ்ச்சி..!பலத்த அடி வாங்கிய சவுதி அரேபியா.. இரண்டாவது காலாண்டில் 7% வீழ்ச்சி..!

Festive Treats சலுகைகள்

Festive Treats சலுகைகள்

அந்த வகையில் தற்போது ஹெச்டிஎஃப்சியும் பலத்த சலுகையினை வழங்கியுள்ளது. வாருங்கள் அதனைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். ஹெச்டிஎஃப்சி வங்கி Festive Treats 2.0 என்ற பெயரில் பலத்த சலுகையினை அறிவித்துள்ளது. அதோடு ஏராளமான பிராண்டுகளோடு இணைந்து பல சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. இவற்றோடு கேஸ்பேக் சலுகையும், ரிவார்டு பாயிண்டுகளையும் அறிவித்துள்ளது.

வங்கிக் கணக்கு முதல் கடன் வரை சலுகை

வங்கிக் கணக்கு முதல் கடன் வரை சலுகை

மேலும் வாகனக் கடன், பர்சனல் லோன், பிசினஸ் லோன் உள்ளிட்ட கடன்களுக்கு செயல்பாட்டுக் கட்டணம் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதே இரு சக்கர வாகனக் கடன்களுக்கு செயல்பாட்டுக் கட்டணம் இல்லை எனவும் கூறியுள்ளது. அது மட்டும் அல்ல கடனிலிருந்து, வங்கி கணக்கு வரையிலான வங்கியின் அனைத்து சேவைகளுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.

பல முன்னணி பிராண்டுகளுடன் டையப்

பல முன்னணி பிராண்டுகளுடன் டையப்

அதோடு இவ்வங்கி முன்னணியில் உள்ள 1000 பிராண்டுகளோடும், 2000க்கும் மேற்பட்ட ஹைப்பர் லோக்கல் இடங்களில் உள்ள வணிகர்களுடன் இணைந்துள்ளதாக ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் ஆடைகள், நகைகள், மொபைல்கள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

என்னென்ன சலுகைகள்

என்னென்ன சலுகைகள்

சில்லறை விற்பனை மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கான கடனுக்கான செயல்பாட்டு கட்டணத்தில் சலுகை, குறைந்த இஎம்ஐ, கேஸ்பேக் சலுகை, கிஃப்ட் வவுச்சர்கள் மற்றும் இன்னும் பல சலுகைகள் உள்ளதாக வங்கி கூறியுள்ளது. அதோடு ஹெச்டிஎஃப்சி வங்கி பல சில்லறை பிராண்டுகளோடும் ஒப்பந்தம் செய்துள்ளது. இது கடையில் வாங்கினாலும், ஆன்லைனில் வாங்கினாலும் பல கேஸ்பேக் மற்றும் கூடுதல் ரிவார்டு பாயிண்டுகளையும் வழங்குகிறது.

மக்கள் செலவு செய்யும் நேரம்

மக்கள் செலவு செய்யும் நேரம்

ஹெச்டிஎஃப்சி வங்கி தரப்பில் வெளியான அறிக்கையில், புதிய வகையான செலவினங்கள் வளர்ந்து வருவதை நாங்கள் காண்கிறோம். பண்டிகை காலம் அது மக்கள் வீடு, வாகனம், சிறப்பு கொள்முதல் போன்றவற்றிற்காக செலவு செய்யும் நேரமாகும். எனவே இந்த பண்டிகை காலத்துடன் நாங்கள் எங்கள் சலுகைகளை தொடங்குவது பொருத்தமானது என்றும் கூறியுள்ளது.

புதிய ஆப்பிள் பிராண்டுகளுக்கு சலுகை

புதிய ஆப்பிள் பிராண்டுகளுக்கு சலுகை

Festive Treats 1.0லியே நாங்கள் ஒரு நல்ல வளர்ச்சியினைக் கண்டோம். Festive Treats 2.0விலும் ஒரு நல்ல வளர்ச்சியினை பதிவு செய்வோம் என்று நம்புகிறோம்.
ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பிராண்டுகளுக்கு 7000 வரையில் கேஸ்பேக் சலுகையினை பெற்றுக் கொள்ளலாம். அது மட்டும் அல்ல, முன்னணி பிராண்டுகளாக சாம்சங், எல்ஜி, சோனி, கோத்ரேஜ், பானா சோனிக் உள்ளிட்டவற்றில் 22.5% வாரி கேஸ்பேக் சலுகை பெற முடியும். ஆனால் no extra cost EMI ஆக மாற்ற முடியாது. இப்படி ஏராளமான சலுகைகளை ஹெச்டிஎஃப்சி அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC bank announces 50% processing fee, discounts and cash back offers

HDFC bank announces to waiver 50% processing fees on auto loan, personal, business loans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X