சென்னை: பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்ய விரும்பும் மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி! HDFC பேங்க் தனது மூத்த குடிமக்களுக்கான FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
டேர்ம் டெபாசிட் என்று சொல்லப்படும் பிக்சட் டெபாசிட், பொதுவாக அனைவராலும் விரும்பப்படும் முதலீட்டுத் திட்டமாகும். மற்ற முதலீட்டுத் திட்டங்கள் போல அல்லாமல், FDகளில் அபாயங்கள் குறைவாகவே உள்ளது.

பல்வேறு வங்கிகள் 3 முதல் 7.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை முதலீட்டு காலத்தின் அடிப்படையில் வழங்குகின்றன. அந்த வகையில் HDFC பேங்க் தனது மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சலுகையுடன் கூடிய FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. HDFC பேங்க் மூத்த குடிமக்கள் FD திட்டங்களுக்கு 7.75 % வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் மே 2020-இல் தொடங்கப்பட்டது.
HDFC பேங்க் வழங்கும் மூத்த குடிமக்கள் FD திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: இந்த சிறப்பு மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை HDFC பேங்க், மே 2, 2024 வரை நீட்டித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்: HDFC பேங்க் வழங்கும் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்த வகை FDகளுக்கு மற்றவர்களை விட மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவிகிதம் கூடுதல் வட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பிரீமியத்திற்கு மேல் கூடுதலாக 0.25 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 0.75% கூடுதல் விகிதத்தின் பலன் 18 மே 2020 முதல் 2 மே 2024 வரையிலான FDகளில் முதலீடு செய்தவர்கள் மற்றும் செய்ய இருப்பவர்களுக்குப் பொருந்தும். மேலும், இந்தத் திட்டம் ₹5 கோடிக்குக் கீழ் டெபாசிட் செய்ய விரும்பும் டெபாசிடர்களுக்கானது என்று HDFC பேங்க்கின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு: 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், HDFC பேங்க் வழங்கும் இந்த மூத்த குடிமக்களுக்கான FDகளில் விண்ணப்பிக்கலாம்.
புதிய வைப்பு மற்றும் புதுப்பித்தல்களுக்கு இந்த வட்டி பொருந்துமா?: இந்த சிறப்பு FDக்கு ஏற்கனவே விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் அல்லது முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். எனவே, சிறப்பு வட்டி, புதிய வைப்பு மற்றும் புதுப்பித்தல் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
முன்கூட்டியே கணக்கை முடிப்பது: இந்த FD திட்டத்தில் விண்ணப்பித்த ஒரு மூத்த குடிமகன் முன்கூட்டியே கணக்கை மூடுவதற்குத் தேர்வுசெய்தால், வட்டி விகிதம் குறையும்.
5 ஆண்டுகளுக்கு முன் கணக்கை மூடிவிட்டால், வங்கியில் டெபாசிட் இருந்த காலம் வரை, முதலீடு செய்த தேதியின் அன்றைய நிலவரப்படி இருந்த வட்டி விகிதத்தை விட 1 % குறைவாக வட்டி விகிதம் வழங்கப்படும்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகை: ஒரு மூத்த குடிமகன் குறைந்தபட்சம் ரூ. 5,000 மற்றும் அதிகபட்சம் ரூ. 5 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த வகை FDகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை இதில் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications