6 மாத EMI அவகாசம்.. யார் யார் இதற்கு தகுதியானவர்கள்..எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்..ஹெச்டிஎஃப்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கன் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், உலகின் பல நாடுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றன.

ஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனாவினால் மக்கள் பலியாகி வரும் நிலையில், கொரோனாவிற்கு சரியான மருந்து இல்லாமையால் அவதிப்படும் நாடுகள், மறுபுறம் தங்களின் கண் முன்னே சரிந்து வரும் பொருளாதாரத்தினையும் பார்த்து வருகின்றனர்.

கொரோனாவின் பிடியில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு சற்று ஆறுதல்அளிக்கும் விதமாக ஆர்பிஐ 6 மாதம் இஎம்ஐ அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி அமல்

ஹெச்டிஎஃப்சி அமல்

முதன் முறையாக கடந்த மார்ச் 27 அன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, வங்கிகள் மக்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐக்கு 3 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் இதன் பின்னாரும் கொரோனா லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறையும் 3 மாத காலம் அவகாசத்தினை மேலும் நீடித்துள்ளது. இதனையடுத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இதனை அமல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியும் இதனை அமல்படுத்தியுள்ளது.

யாரெல்லாம் தகுதியானவர்கள்

யாரெல்லாம் தகுதியானவர்கள்

ஹெச்டிஎஃப்சி வங்கி மார்ச் 1,2020 முதல் ஆக்ஸ்ட் 31, 2020 வரையிலான காலத்திற்கு உண்டான இஎம்ஐ தொகையினை செலுத்த ஹெச்டிஎஃப்சி அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் மார்ச் 1 ஆம் தேதிக்கு மு¬¬¬¬¬¬ன்னர் பெற்ற அனைத்து டெர்ம் லோன்கள், சில்லறை தவணை கடன் அல்லது வேறு ஏதேனும் சில்லறை கடன், பர்சனல் லோன், வீட்டுக்கடன், ஆட்டோமொபைல்களுக்கான கடன், கிரெடிட் கார்டு நிலுவை தொகை வசதிகளைப் பெற்ற அனைத்து ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளார்களும் இதற்கு தகுதியானவர்கள் தான் என்றும் ஹெச்டிஎஃப்சி அறிவித்துள்ளது.

பல இடையூறுகள்

பல இடையூறுகள்

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ தடை சேவையை வழங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு இந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்கு கால அவகாசத்தினை வழங்குகிறது. ஏனெனில் தற்போதுள்ள நிலையில் பணப்புழக்கத்தினை குறைக்கும் வகையில் பல இடையூறுகள் உள்ளன.

விவசாயிகளுக்கு சலுகை

விவசாயிகளுக்கு சலுகை

மேலும் இவ்வாறு மார்ச் 1, 2020 முன்னர் கடன் பெற்றவர்கள் இந்த தடைகாலத்தினை தேர்வு செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் ஜூன் 1க்கு முன்னர் இந்த கடன் தடையை காலதாமதம் செய்த வாடிக்கையாளர்கள் இந்த தடையை மேலும் நீடிக்கலாம். இவர்களின் கோரிக்கைகள் வங்கிகள் தகுதி அடிப்படையில் பரீசிலிக்கும். இதில் அனைத்து வேளாண் (கிஷான் கோல்டு கார்டு) கடன்களும், மைக்ரோ நிதி வாடிக்கையாளர்களும் இதற்கு தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

சிறு குறு நிறுவனங்கள்

சிறு குறு நிறுவனங்கள்

ஹெச்டிஎஃப்சி வங்கியின் சிறு குறு மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்கள் இதற்கு தகுதியானவர்கள் தான். எங்களின் Relationship Managers உங்களை தொடர்பு கொள்வார்கள். ஆக அவர்களிடனம் நீங்கள் கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆக ரிசர்வ் வங்கியின் தடை அவகாசத்தினை பெற்று நீங்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம்.

வங்கி உங்களிடம் எதுவும் கேட்காது?

வங்கி உங்களிடம் எதுவும் கேட்காது?

ஒரு வேளை நீங்கள் இந்த 3 மாத இஎம்ஐ அவகாசத்தினை தேர்வு செய்தால், வங்கி மே 31 வரை தேர்வு செய்திருந்து, ஜூன் முதல் உங்களது நிலுவையை செலுத்த தயாரானால் நிலுவையை செலுத்தலாம். ஆனால் கூடுதல் வட்டி விகிதத்தினை தொடர்ந்து செலுத்த வேண்டியிருக்கும். வங்கிகள் ஒரு வேளை உங்களை எதுவும் கேட்காமல் இருந்தால் நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

நீங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதியின் படி, நிலுவையில் உள்ள இஎம்ஐ தடைகாலத்தினை பெற்றால், உங்களது தடை காலத்திற்கான வட்டி விகிதம் ஒப்பந்தத்தில் உள்ளது போல வசூலிக்கப்படும். மேலும் உங்களின் நிலுவை தொகைக்கு ஏற்ப வட்டி வசூலிக்கப்படும்.

எனக்கு எந்த சலுகையும் வேண்டாம்?

எனக்கு எந்த சலுகையும் வேண்டாம்?

ஆர்பிஐ அறிவித்த எந்த சலுகையும் வேண்டாம் என நீங்கள் நினைத்தால் உங்கள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை. ஆக வழக்கம்போல நாங்கள் உங்கள் செயல்பாட்டினை செயல்முறைபடுத்துவோம் என்கிறது ஹெச்டிஎஃப்சி. போதுமான நிதி உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஏனெனில் அதிக கட்டணத்தினை தவிர்க்க முடியும் என்கிறது ஆர்பிஐ.

என்ஆர்ஐக்கும் எப்படி இந்த சலுகையை பெறுவது?

என்ஆர்ஐக்கும் எப்படி இந்த சலுகையை பெறுவது?

ஆர்பிஐயின் இந்த இஎம்ஐ சலுகையானது என்ஆர்ஐ-க்களுக்கும் பொருந்தும். ஒரு வேளை உங்கள் இஎம்ஐ அவகாசத்தினை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு உங்களது விருப்பத்தினை, உங்கள் விருப்பதினை தெரிவிக்கலாம். அங்கு உங்களது வங்கிக் கணக்கினை பதிவு செய்து கொள்லாம்.

ஜூன் –ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் தேர்வு செய்யலாமா?

ஜூன் –ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் தேர்வு செய்யலாமா?

ஓரு வேளை நீங்கள் மார்ச் முதல் மே வரையில் முதல் இஎம்ஐ கால அவகாசத்தினை நீங்கள் தேர்வு செய்யாவிட்டாலும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டும் கூட தேர்வு செய்து கொள்ளலாம். இதே கிரெடிட் கார்டு நிலுவையை செலுத்திக் கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் இஎம்ஐ-யினை திரும்ப செலுத்துவதையே நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஏனெனில் வட்டி அதிகம் செலுத்துவதை நீங்கள் இதன் மூலம் தவிர்க்க முடியும்.

எவ்வளவு கட்டணத்தினை செலுத்த வேண்டும்?

எவ்வளவு கட்டணத்தினை செலுத்த வேண்டும்?

நீங்கள் ஒரு வேளை இஎம்ஐ அவகாசம் கேட்டிருந்தால், நிலுவையில் உள்ள கடனுக்காக ஒப்பந்த விகிதத்தில் உள்ள வட்டி வசூலிக்கப்படும். மேலும் நீட்டிக்கப்படும் கால அவகாசத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் வசூலிக்கப்படும். மொத்தத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டாலும். வட்டியும் முதலுமாக சேர்த்து செலுத்தியே ஆக வேண்டும் என்பது தான் உண்மை.

எப்படி இந்த இஎம்ஐ அவகாசத்தினை தேர்வு செய்வது?

எப்படி இந்த இஎம்ஐ அவகாசத்தினை தேர்வு செய்வது?

இஎம்ஐ அவகாசத்தினை பெற உங்கள் சம்மதத்தினை வங்கிக்கு வழங்க வேண்டும். எப்படி என்றால் 022-50042333. 022 - 50042211 என்ற எண்ணிற்கு கால் செய்து விருப்பத்தினை கூறலாம். அங்கு தேவையான விவரத்தினை கூறி உங்களது கடன் குறித்தான விவரங்களை கூறி, உங்கள் இஎம்ஐ கால அவகாசத்தினை பெறலாம். .

கார லோன் அல்லது பர்சனல்;

கார லோன் அல்லது பர்சனல்;

ஒரு வேளை நீங்கள் உங்களது பர்சனல் லோன் அல்லது வாகனக் கடனுக்காக இஎம்ஐ 31 மார்ச் 2020ல் செலுத்தியிருந்தால், நீங்களும் இந்த அவகாசத்தினை பெறத் தகுதியானவர் தான். ஆக தடையை பெறுவதற்காக நீங்கள் மேலே குறிப்பிட்ட செயல்முறையை பின்பற்றலாம்.

கிரெடிட் கார்டுக்கு அவகாசத்தினை எப்படி பெறுவது?

கிரெடிட் கார்டுக்கு அவகாசத்தினை எப்படி பெறுவது?

கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐக்கு அவகாசத்தினை உங்களது ஆட்டோ பே (Auto Pay) ஆப்சனை முடக்கி வைக்கலாம். அல்லது நீங்கள் தானாக முன்வந்து இதனை ஒத்தி வைக்க மேற்கூறியவாறு செய்யலாம். உங்களது நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்டவற்றில் இதனை செயல்படுத்த முடியும். இவ்வாறு தேர்தெடுக்கும் போது உங்களுக்கு 3 மாதம் அவகாசம் கிடைக்கும். ஆனால் வட்டியை செலுத்துவதை தவிர்க்க வாடிக்கையாளர்களை நாங்கள் செலுத்த ஊக்குவிக்கிறோம் என்றும் ஹெஸ்டிஎஃப்சி கூறியுள்ளது.

நிச்சயம் வட்டி வசூலிக்கப்படும்

நிச்சயம் வட்டி வசூலிக்கப்படும்

இந்த தற்காலிக அவகாசம் என்பது கால அவகாசத்தினை தள்ளி வைப்பதே தவிர, உங்கள் வட்டி தள்ளுபடி அல்ல என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆக முடிந்த மட்டில் நீங்கள் எப்போதும் போல உங்களது இஎம்ஐயினை செலுத்திவிடுவதே நல்லது என சொல்லாமல் சொல்கிறது இந்த அறிக்கை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC bank extends loans EMI moratorium, here’s all you need to know

HDFC Bank customers are who have availed of retail EMI loan or any other retail credit facilities prior to 1st March 2020 are eligible.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X