வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் ஏற்கனவே, கடனுக்கான மாத தவணைகளை செலுத்த சிரமப்படும் நேரத்தில், நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, இரண்டு கால கட்டங்களில் தனது கடன் விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி ஆனது பண்டிகையின் போது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடன்களில் இரண்டு கால கட்டங்களிலும் பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் அக்டோபர் 07, 2024 முதல் அதாவது இன்று முதல் அமலுக்கு வரும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி எடுத்த இந்த முடிவால் எச்டிஎஃப்சி வங்கியில் கடன் பெற்றவர்களின் இஎம்ஐ அதிகரிக்கும். தற்போது எச்டிஎஃப்சி வங்கியின் கடனுக்கான மார்ஜினல் காஸ்ட் ரேட் (MCLR) வட்டி விகிதங்கள் 9.10 சதவீதம் முதல் 9.45 சதவீதம் வரை உள்ளது.
சமீபத்தில், வங்கி 6 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் வாகனம், தனிநபர், வீட்டுக் கடன்கள் மற்றும் பெரும்பாலான நுகர்வோர் கடன்களுக்கு பொருந்தும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி அறிக்கையின்படி, 6 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகள் கொண்ட MCLR மட்டுமே 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது என வங்கி தெரிவித்துள்ளது. MCLR என்பது வங்கிகள் கடன் வழங்க அனுமதிக்கும் குறைந்தபட்ச கடன் விகிதமாகும். இந்த கடன் விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) தீர்மானிக்கப்படுகிறது.
கடன் வாங்குபவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கடன் காலத்தின் அடிப்படையில் MCLR ஐ கணக்கிடுகின்றனர். தற்போது, எச்டிஎஃப்சி வங்கி ஒரே இரவில் 9.10 சதவிகிதமும், 1 மாத காலத்திற்கு 9.15 சதவிகிதமும், 3 மாத காலத்திற்கு 9.30 சதவிகிதமும், 6 மாதங்கள், 1 வருடம், 2 வருட காலத்திற்கு 9.45 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இறுதியாக 3 வருட காலத்திற்கு 9.50 சதவிகிதம் வழங்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications