HDFC பேங்க் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்காக "எம்பஸி பிக்சட் டெபாசிட்" என்ற ஒரு முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக வெளிநாட்டு தூதரகங்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பணிபுரியும் நபர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை அமெரிக்க டாலரின் முதலீடு செய்ய விரும்புபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது HDFC பேங்க் வழங்கும் பிற பிக்சட் டெபாசிட் திட்டங்களைப் போல லாபகரமான முதலீட்டு திட்டம் ஆகும். இதன் விதிமுறைகள் என்னென்ன? எவ்வளவு வட்டி விகிதங்கள் கிடைக்கிறது? மற்றும் பிற முக்கிய அம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

எம்பஸி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?: ஹெச்டிஎஃப்சி பேங்க் வலைதளத்தின் தகவல்படி.. இந்த திட்டத்தில் குறிப்பாக வெளிநாட்டு தூதரகங்களில் வேலை பார்ப்பவர்கள், வெளிநாட்டு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச டெபாசிட் தொகை: குறைந்தபட்ச டெபாசிட் தொகை $5,000 டாலர்கள். கூடுதல் டெபாசிட் தொகை $1,000 டாலர்களின் மடங்குகளில் செய்யப்பட வேண்டும். ஹெச்டிஎஃப்சி பேங்க் இணையதளத்தில் அதிகபட்ச டெபாசிட் தொகை தொடர்பான எந்தவித தகவல்களும் இல்லை.
எம்பஸி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள்: எம்பஸி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியன்று வெளியிடப்படும். இந்த வட்டி விகிதம் சந்தையில் நிலவரத்தை பொறுத்து மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. எனவே நீங்கள் முதலீடு செய்யும்போதுஅப்போதைய வட்டி விகிதங்கள் என்ன என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைவதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்கும் நேரத்திலும் வட்டி விகிதங்கள் மாறலாம். எனவே செயலாக்கத்தின் போது எந்த வட்டி விகிதம் நடைமுறையில் உள்ளதோ அதுதான் பொருந்தும்.
2025-ஆம் ஆண்டின் மார்ச் 18-ஆம் தேதி நிலவரப்படி எம்பஸி பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதங்கள்:
ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரையிலான வட்டி விகிதங்கள:
1 மாதம் - 2.20%
3 மாதங்கள் - 3.60%
6 மாதங்கள் - 4.20%
1 வருடம் - 4.75%
1 மாதம், 2 மாதம், 3 மாதம், 6 மாதம் மற்றும் ஒரு வருடங்களுக்கு இந்த FD கிடைக்கின்றன. இதில் எதை வேண்டுமானாலும் பயனர்கள் தேர்ந்தெடுக்கலாம். அதே சமயம் ஒரு முறை நீங்கள் டெபாசிட் காலத்தை தேர்ந்தெடுத்து விட்டால் அதை முதிர்வு காலம் வரை மாற்ற முடியாது. முதிர்வு காலம் முடிந்த பின் எந்த அக்கவுண்டில் இருந்து பணம் டெபாசிட் செய்யப்பட்டதோ அந்த அக்கவுண்டுக்கு பணம் போடப்படும். ஆட்டோமேட்டிக் ரினிவல் என்பது இதற்கு கிடையாது. ஒருவேளை டெபாசிட் செய்பவர் விருப்பப்பட்டால் மீண்டும் புது படிவத்தை வழங்கி டெபாசிட் செய்யலாம். விருப்பப்பட்டால் முன்கூட்டியே கணக்கை மூடலாம். ஆனால் அதற்கு 0.5% அபராதம் வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications