டெல்லி: இன்றைய நாளில் உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில்நுட்பமும் அடிப்படை தேவையாக மாறி வருகின்றது. நாமும் அந்த தொழில்நுட்ப வசதிக்கு அடிமையாகி வருகின்றோம்.
ஏனெனில் ஒரு காலத்தில் வங்கி கணக்கு திறக்க வேண்டும் எனில், தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு, வங்கியில் சென்று வரிசையில் பல மணி நேரம் வரிசையில் நின்று பின்னர் தொடங்குவோம். அப்படி தொடங்கினாலும் அது செயல்பாட்டுக்கு வர ஒரு வார காலமாகும்.
ஆனால் தொழில்நுட்பம் வளர வளர வங்கிகளும் அதற்கேற்றவாறு தங்களது சேவையினை மாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் நாம் வங்கிக்கு சென்ற நிலையில் பின்னர் வங்கிகள் நம்மை தேடி வர ஆரம்பித்தன.
வீடியோ கேஓய்சி வசதி
ஆனால் இன்றோ, அதனைவிட ஒரு படி மேலே போய் ஆன்லைனிலேயே கணக்கு திறக்கலாம் என பல வசதிகளைக் கொண்டு வந்துள்ளது. அதில் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அதனையும் எளிதாக்கும் வகையில் ஹெச்டிஎஃப்சி வங்கி வீடியோ கேஓய்சி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்னென்ன கணக்குகள் இதன் மூலம் தொடங்க முடியும்?
இந்த வீடியோ கேஓய்சி மூலம் சேமிப்பு கணக்கு, கார்ப்பரேட் சம்பள வங்கிக் கணக்கு மற்றும் பர்சனல் லோன் உள்ளிட்ட பலவற்றிற்கும் தொடங்க முடியும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின் படி, வீடியோ கேஒய்சியானது சாதாரணமான முழு கேஒய்சிக்கு சமம். இந்த சேவையானது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கிடைக்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
சில நிமிடங்களில் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்
ஆக இனி வாடிக்கையாளர்கள் உங்களது அலுவலகங்களிலோ அல்லது வீட்டிலேயே அமர்ந்து, வீடியோ கேஓய்சி மூலம் கணக்கினை தொடங்க முடியும். ஆக சில நிமிடங்களில் அமர்ந்த இடத்திலேயே உலகத் தரம் வாய்ந்த இந்த சேவையினை நீங்கள் பெறமுடியும். அதோடு இந்த வீடியோ KYCயானது மிகவும் பாதுகாப்பானதும் கூட. அதோடு விரைவான ஒரு சேவையும் கூட.
எப்படி கணக்கினை தொடங்குவது?
எல்லாவற்றையும் விட காகிதமற்ற ஒரு சேவையும் கூட. இதற்காக வங்கிகளுக்கு சென்று நீங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சரி எப்படி கணக்கினை தொடங்குவது? இதனை உங்களது ஸ்மார்ட்போனில் open instant salary & savings bank account online என்ற ஆஃபினை டவுன்லோடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். இல்லையேல் ஹெச்டிஎஃப்சி வங்கியின் இணையத்தில் இன்ஸ்டா அக்கவுண்ட் என்ற ஆப்சன் மூலம் KYCயை பதிவு செய்து கொள்ளலாம்.
வீடியோ கேஒய்சி
மேற்கண்ட ஏதேனும் ஒன்றின் மூலம் உங்களது eKYCயினை பதிவும் செய்யும் போது, உங்களது பான் கார்டு மற்றும் வாடிக்கையாளர் போட்டோவை பதிவு செய்ய வேண்டியிருக்கும். இதனை பதிவு செய்து முடித்த பிறகு, வீடியோ கேஒய்சி என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது ஆவணங்கள் சரிப்பாக்கப்பட்டு பின்னரே உங்களது கணக்கு இறுதியாக திறக்கப்படும்.
பயனுள்ள திட்டம் தான்
இவ்வாறு நீங்கள் அக்கவுண்ட் ஒபனிங் எனும் போதே, அது என்ன கணக்கு என்பதையும் கேட்கும், அங்கு தனி நபர் சேமிப்பு கணக்கா, அல்லது சம்பள கணக்கா, தனி நபர் கடனுக்கான கணக்கா என்பதை குறிப்பிட வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகுந்த பயனுள்ள திட்டமே இந்த வீடியோ கேஓய்சி திட்டம்..
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications