இன்றைய காலகட்டத்தில் பல இன்சூரன்ஸ் திட்டங்கள் வந்து விட்டன. பொதுவாக இன்சூரன்ஸ் என்றால் ஹெல்த் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் என பல வகையான திட்டங்கள் உள்ளன. ஆனால் சைபர் பாதுகாப்புக்கான இன்சூரன்ஸ் திட்டங்களும் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
அத்தகைய இன்சூரன்ஸ் திட்டத்தினை தான் ஹெச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இணைய பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டு, தனது சைபர் சாசெட் இன்சூரன்ஸ் பாலிசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளார்கள் ஒரு நாளைக்கு 2 ரூபாய் என்ற வீதத்தில் கூட இந்த சைபர் பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம்.
மாதம் ரூ.1411 போதும்.. ரூ.35 லட்சம் பெறலாம்.. அஞ்சலகத்தின் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை பாருங்க..!

எவ்வளவு க்ளைம்?
இந்த பாலிசியின் மூலம் சைபர் பிரச்சனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு க்ளைம் செய்து கொள்ள முடியும். இது குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாய் வரையிலும் க்ளைம் செய்து கொள்ளலாம்.
சைபர் பிரச்சனை மூலம் ஏற்படும் நிதி இழப்பு, இணைய பாதுகாப்பு, ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் மற்றும் சைபர் மிரட்டல்கள் போன்றவற்றை இதில் கவர் செய்து கொள்ளலாம்.

தள்ளுபடி கிடைக்கும்
இந்த பாலிசியில் குறைந்த பிரீமியம் மூலம் பெரியளவில் கவரேஜ்ஜினை வழங்குகின்றது. மேலும் இந்த பாலிசியில் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம். இதில் பல்வேறு திட்டங்களை எடுப்பதன் மூலம் சில தள்ளுபடிகளையும் பெறலாம்.

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு
கடந்த 2020ம் ஆண்டில் 50,035 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் இணைய குற்றங்களில் 11.8% அதித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் தற்போது புதிய தொழில் நுட்பத்தினை பயன்படுத்துபவர்கள் மற்றும் மூத்த குடி மக்களை குறி வைத்து வருகின்றனர். ஏனெனில் இத்தகைய தாக்குதல்கள் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

எதற்கெல்லாம் பாதுகாப்பு
சைபர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஏற்படும் நிதி இழப்புகள் மிகப்பெரிய கவலையாக இருந்தாலும், டேட்டா இழப்பு, தொடர்ச்சியான சைபர் அச்சுறுத்தல்கள் என பலவற்றிற்கும் எதிராக, இந்த சைபர் சாசெட் பாலிசி விரிவான பாதுகாப்பினை வழங்குகின்றது. இந்த பாலிசி 14 பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஆன்லைன் மோசடிகள், மெயில் மூலம் ஏமாற்றுதல், ஆன்லைன் ஷாப்பிங் என பல வகையிலும் பாதுகாப்பினை வழங்குகின்றது.