RIL, Dmart-ஐ எல்லாம் விற்றுத் தள்ளிய ஹெச் டி எஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்! அப்ப நீங்க?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்டுகள் அவ்வப் போது சில பங்குகளை புதிதாக வாங்குவதும், ஏற்கனவே வாங்கி இருந்த பங்குகளை விற்பதும் வழக்கம் தான்.

ஆனால் இந்த முறை ஒரு சில முக்கியமான பெரிய கம்பெனியின் பங்குகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள்.

நாம் அதிகம் எதிர்பார்த்த சில துறை சார்ந்த பங்குகளை வாங்கி இருக்கிறார்கள். அப்படி ஹெச் டி எஃப் சி மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி, இந்த ஜூலை 2020-ல் வாங்கிய, விற்ற பங்குகள் விவரங்களைத் தான் இங்கு பார்க்க போகிறோம்.

சபாஷ் சரியான போட்டி.. ஜியோவுக்குப் போட்டியாக ஆன்லைன் பார்மஸி-யில் இறங்கும் அமேசான்..!சபாஷ் சரியான போட்டி.. ஜியோவுக்குப் போட்டியாக ஆன்லைன் பார்மஸி-யில் இறங்கும் அமேசான்..!

துறைகள்

துறைகள்

அதிக சொத்துக்களை நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் அடிப்படையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனியாக இருக்கும் ஹெச் டி எஃப் சி மியூச்சுவல் ஃபண்ட், இந்த ஜூலை 2020-ல் ஐடி, பர்மா, போன்ற துறைகளில் அதிகம் பங்குகளை வாங்கி இருக்கிறார்களாம்.

வாங்கிய பங்குகள்

வாங்கிய பங்குகள்

ஹெச் டி எஃப் சி மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி, விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், சன் பார்மாசியூட்டிக்கல், டாடா ஸ்டீல், லுபின், பார்தி ஏர்டெல், அம்புஜா சிமெண்ட்ஸ், சி டி எஸ் எல் போன்ற முக்கிய பங்குகளை வாங்கி இருக்கிறார்களாம்.

ஜூலையில் வாங்கிய மற்ற பங்குகள்

ஜூலையில் வாங்கிய மற்ற பங்குகள்

மேலே சொன்ன பங்குகள் போக, ரைட்ஸ் (RITES), அப்பொலோ டயர்ஸ், சிப்லா, கேன் ஃபின் ஹோம்ஸ், எக்ஸிட் இண்டஸ்ட்ரீஸ், டாடா கெமிக்கல்ஸ், ஹெச் பி சி எல், யுனைடெட் பிரவரீஸ், முத்தூட் ஃபைனான்ஸ், திலிப் பில்ட்கான், பாரத் டைனமிக்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், இண்டிகோ போன்ற பங்குகளையும் ஹெச் டி எஃப் சி மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி வாங்கி இருக்கிறார்களாம்.

விற்ற பங்குகள்

விற்ற பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அவென்யூ சூப்பர்மார்ட் (டி மார்ட்), பஞ்சாப் நேஷனல் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், பாரத் பெட்ரோலியம், அரபிந்தோ பார்மா, ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ டி சி, ஆக்ஸிஸ் பேங்க், ஸ்பைஸ் ஜெட் போன்ற பங்குகளை விற்று இருக்கிறார்களாம். வொடாபோன் ஐடியா, டி எல் எஃப், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் போன்ற பங்குகளை முழுமையாக விற்று வெளியேறி இருக்கிறார்களாம்.

ஜூலையில் என்ன நிலவரம்

ஜூலையில் என்ன நிலவரம்

ஜூலை 2020-ல், ஹெச் டி எஃப் சி மியூச்சுவல் ஃபண்ட் 67 கம்பெனி பங்குகளை வாங்கி இருக்கிறார்கள். 92 கம்பெனிகளின் பங்குகளை விற்று இருக்கிறார்களாம். ஐசிஐசிஐ லோம்பார்ட், ரொஸ்ஸாரி பயோடெக், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் போன்ற பங்குகளை புதிதாக வாங்கி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கவனம் மக்களே

கவனம் மக்களே

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிமார்ட் போன்ற பங்குகளை விற்று விட்டது என்பதற்காக நீங்களும் விற்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் இந்த பங்குகளில் முதலீடு செய்யும் போது இன்னும் கவனமாக இருங்கள். எந்த பங்குகளையும் வாங்குவதற்கு முன் அதை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு வாங்குங்கள். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC mutual fund sold RIL Dmart like big company shares in july 2020

India's second biggest mutual fund company HDFC mutual fund had sold RIL, D-Mart like big company shares in july 2020. Bough afresh rossari biotech, ICICI Lombard.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X