ஒரு ஹெல்த் இன்சூரனஸ் பாலிசியை வாங்குவதற்குள் பலருக்கும் பைத்தியமே பிடித்து விடுகிறது. எல்லா கம்பெனிகளும் பல விதமான ரூல்ஸ்களையும், ஆஃபர்களையும் தருவதால் எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் வாடிக்கையாளர்களுக்கு வந்துவிடுகிறது.
ஒருவர் எடுக்கும் லைப் இன்சூரன்ஸோ, ஹெல்த் இன்சூரன்ஸோ அல்லது வேறு வகையான இன்சூரன்ஸோ, ஒவ்வொன்றுக்கும் தொடர்பான சில வார்த்தைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. எதிர்பாராத சமயங்களில் நிகழும் அசம்பாவிதங்களின்போது ஏற்படும் பணச்சுமையைத் தடுப்பதே இன்சூரன்ஸ் பாலிசியின் நோக்கமாகும்.

இருப்பினும் அந்த பாலிஸி தொடர்பாக பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் அல்லது வாசகங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கேட்டறிந்து கொள்வது அவசியமாகும். இது பற்றி ஆன்சூரிட்டி கம்பெனி நிறுவனரும் சிஇஓவுமான யோகேஷ் அகர்வால் கூறுகையில், பல பாலிஸிகளில் குறிப்பிட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பற்றி இங்கு விரிவாகப் பாருங்கள்.
சம் இன்சூர்டு: ஒரு இன்ஸ்சூரன்ஸ் பாலிசியின் அடித்தளமே அது எந்தளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதுதான். இதை கவரேஜ் லிமிட் அல்லது பாலிஸி லிமிட் என்பார்கள். பாலிஸி காலம், இன்ஸ்சூரன்ஸ் வகையைப் பொருத்து முன்கூட்டியே ஒரு தொகையை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் வகுத்து வைத்திருக்கும்.
ஒருவருக்குப் இப்படிப்பட்ட பாலிஸிதான் பொருந்தும் என்றெல்லாம் வரையறுக்க முடியாது. அவரவர் தேவைக்கேற்ப பாலிஸியை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹெல்த் இன்ஸ்சூரன்ஸை எடுத்துக் கொண்டால் ஹாஸ்பிடல் தேர்வு என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
மெட்ரோ நகரங்களில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும். இதுவே சிறிய நகரங்கள் என்றால் குறைவாக இருக்கும். எனவே அதன் அடிப்படையில் தேவையான தொகைக்கு பாலிஸியை எடுக்க வேண்டும். ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸிகளை காலம் தாழ்த்தி எடுக்கக் கூடாது. இளம் வயதிலேயே பாலிஸியை எடுத்தால் அதற்காக செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். போகப்போக கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.
கோ-பே: பல பாலிஸிகளில் கோ-பேமெண்ட் என்ற ஆப்ஷன் இருக்கும். அதன்படி செலவாகும் தொகையில் ஒரு பகுதியை இன்சூர் செய்த நபர் செலுத்த வேண்டியிருக்கும். எடுத்துக் காட்டாக, மருத்துவச் செலவு ரூ.20000 ஆகிவிட்டது என்றால் அதில் 10 சதவீதமான ரூ.2000 ஐ இன்சூர் செய்து கொண்டவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். மூத்த குடிமகன்கள் போன்ற அதிக ரிஸ்க் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த கோ-பேமெண்ட் விதி இருக்கும்.
நோ-கிளைம் போனஸ்: பாலிஸி காலத்தில் எந்தவித கிளைமும் பாலிஸிதாரர் செய்ய வில்லையென்றால் அவருக்கு நோ-கிளைம் பாலிஸி போனஸ் அளிக்கப்படும். ஒவ்வொரு நோ-கிளைம் பாலிஸி காலத்திலும் காப்பீடு செய்யப்பட்ட தொகையானது 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். இது 50 சதவீதம் வரை உயரும்.
இப்போது சில இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்குப் பதிலாக காப்பீடு தொகையை இருமடங்காகவும் உயர்த்துகின்றன.
வேறு சில நிறுவனங்கள் பிரீமியம் தொகையில் டிஸ்கவுண்ட் தருகின்றன. ஆனால் எல்லா நிறுவனங்களுமே நோ-கிளைம் போனஸாக குறிப்பிட்ட அளவுக்கு காப்பீடு தொகையை அதிகரிக்கின்றன.
டிடெக்டிபிள்: இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி காலம் தொடங்குவதற்கு முன்பாக இன்ஸ்சூரன்ஸ் செய்யப்பட்டவர் ஒரு தொகையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, கட்டாய டிடெக்டிபிள் ரூ.10,000 ஆக இருந்தால் மருத்துவச் செலவு ரூ.50,000 என்றால் காப்பீடு செய்தவர் வேறு ஏதாவது காப்பீடு பாலிஸி மூலமோ அல்லது சொந்தப்பணத்திலோ அதைக் கட்ட வேண்டும். பாக்கி ரூ.40,000ஐ இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் கட்டி விடும்.
ரூம் ரென்ட் லிமிட்: மருத்துவமனையில் தங்கியிருக்கும் அறையின் வாடகைக் கட்டணம் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப இந்த அறை வாடகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள் குறிப்பாக அந்தத் தொகையை கூறும்.
ட்வின் ஷேர், தனியறை, நான்-டீலக்ஸ் போன்று பல வகை ரூம்கள் இருந்தாலும் பாலிஸி கட்டணத்துக்கு ஏற்ப அறையை தேர்வு செய்ய வேண்டும். தகுதிக்கு மீறிய அளவில் அறை வாடகை இருந்தால் அதற்கேற்ப இழப்பீடு தருவது குறையும். இவ்வாறு யோகேஷ் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications