சமுக நலன கருதி பல்வேறு விதமான திட்டங்களை அரசு வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம்.
இந்த திட்டத்தில் வெறும் 330 ரூபாய் பிரிமீயம் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் எடுக்க முடியும். அதோடு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் இந்த சேமிப்பு கணக்கினை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவன் ஜோதி பீமா யோஜனா இன்சூரன்ஸ் திட்டம்
சரி பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் என்றால் என்ன? இதில் யாரெல்லாம் இணைந்து கொள்ளலாம். என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும்.
எவ்வளவு க்ளைம் செய்ய முடியும்?
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் வருடத்திற்கு 330 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். ஓரு வேளை பாலிசி தாரர் இறந்து விட்டால், இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்?
வங்கி கணக்கு வைத்துள்ள 18 வயது முதல் 50 வயது வரையிலான எவரும் இந்த திட்டத்தில் இணைய முடியும். 50 வயது நிறைவடைதற்கு முன்பு இந்த திட்டத்தில் இணைந்தால், தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வருபவர்கள் 55 வயது வரை ஆயுள் காப்பீட்டினை பெற முடியும்.
பிரீமியம் எப்போது செலுத்த வேண்டும்?
இந்த காப்பீட்டுத் திட்டமானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த பிரீமிய தொகையினை எந்த வங்கியில் நீங்கள் இணைகிறீர்களோ அங்கு செலுத்த வேண்டும். பெரும்பாலும் வங்கிகள் ஆட்டோமேட்டிக் டெபிட் மூலம் இந்த திட்டத்தின் பிரீமியத்தினை டெபிட் செய்து கொள்கின்றன.
ஒருவர் எத்தனை பாலிசி எடுத்துக் கொள்ளலாம்?
உங்களுக்கு பல வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருக்கலாம். ஆனாலும் நீங்கள் அனைத்து வங்கிகளிலும் இந்த திட்டத்தினை தொடங்க முடியாது. ஏனெனில் ஒருவருக்கு இந்த திட்டத்தின் மூலம் ஒரு பாலிசி தான் எடுக்க முடியும். ஆக இந்த திட்டத்திற்கு தகுதியான ஒருவர், உங்களுக்கு அருகில் உள்ள ஒரு வங்கி மூலம் இணைந்து பயன் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வாறு க்ளைம் செய்வது?
இந்த பாலிசி மூலம் க்ளைம் பெற வேண்டுமெனில், இதற்காக நாமினி சம்பந்தபட்ட வங்கியினை அணுகி உங்களது பாலிசி எண் மற்றும் வங்கி கணக்கு வைத்திருந்தவர் பெயரை கூறலாம். அதோடு க்ளைம் விண்ணப்பத்தினை பெற்று, தேவையான விவரங்களுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொடுக்கலாம். அப்படி இல்லையெனில் அனைத்து ஆவணங்களையும் வங்கி பெற்றுக் கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்பிக்கும்.
க்ளைம் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?
தேவையான ஆவணங்கள், இறப்பு சான்று, மருத்துவமனை ரசீது, ( Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் வங்கிக் கணக்கு என அனைத்தும் கொடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களது ஆவணங்களை சரிபார்த்து, 30 நாட்களுக்குள் உங்களுக்கு க்ளைம் செய்து கொடுக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications