சென்னை: இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களிலும் நாம் புகைப்பட அடையாள ஆவணமாக பான் கார்டினை பயன்படுத்தி கொள்கிறோம்.
மத்திய அரசினை பொறுத்தவரை ஒருவரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்க பான் எண்ணை பயன்படுத்துகிறது. வருமான வரி துறையானது பான் எண்ணை கொண்டே ஒருவரின் வருமானம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் எதற்கெல்லாம் பான் கார்டு முக்கியமாக தேவை என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய அனைவருமே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு பான் கார்டு மிகவும் அவசியம். ஒருவர் பான் கார்டு இருந்தால் மட்டுமே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும். சில சமயங்களில் வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்கும்போது அங்கே பான் கார்டு கேட்கப்படுகிறது.
5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலை கொண்ட ஒரு வாகனத்தை வாங்குகிறீர்கள் அல்லது உங்களிடம் இருக்கும் வாகனத்தை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கிறீர்கள் என்றால் அந்த பரிவர்த்தனைக்கு உங்களுடைய பான் கார்டு விவரங்கள் கட்டாயமாக கேட்கப்படும். பான் கார்டு எங்கெல்லாம் பயன்படுகிறது.
டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பம் செய்யும் போது பான் கார்டு தகவல்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைகளை வாங்கும் போது பான் கார்டு விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் .
மியூச்சுவல் ஃபண்டுகள் , ஈக்விட்டிகள் மற்றும் பத்திரங்களில் முதலிடம் மேற்கொள்ளும் போது பான் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பல்வேறு இடங்களிலும் ஒரு நபரின் புகைப்பட அடையாள ஆவணமாகவும் வயதுக்கான அடையாள ஆவணமாகவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்யும்போது பான் கார்டினை ஒரு அடையாளமாக பயன்படுத்தலாம்.
நீங்கள் வெளிநாடு செல்கிறீர்கள் என்றால் இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சிக்கு மாற்ற வேண்டும் எனில் அந்த இடத்தில் பான் கார்டு தகவல்களை வழங்க வேண்டியது கட்டாயமாகும்.
ஒரு சொத்தினை வாங்குகிறீர்கள் அல்லது விற்பனை செய்கிறீர்கள் எனும் போது பான் கார்டு விவரங்கள் கேட்கப்படும்.
வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது பான் விவரங்களை வழங்குவது கட்டாயமாகும்.
மத்திய அரசினை பொருத்தவரை வருமான வரித்துறை வாயிலாக பான் எண்ணை வரி ஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகளை கண்டறிவதற்கு பயன்படுத்துகிறது.
எனவே இதுவரை நீங்கள் பான் கார்டு வாங்கவில்லை என்றால் அதனை வாங்கி வைப்பது நல்லது, புதிதாக வேலைக்கு செல்பவர்கள் என்றாலும் பான் கார்டினை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications