அமெரிக்காவின் மத்திய வங்கியானது சமீபத்தில் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில் , வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெப்போ ரேட் அதிகரிக்கும் பட்சத்தில், அது வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
நிபுணர்கள் வரவிருக்கும் செப்டம்பர் 30 அன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
யாருக்கு பாதிப்பு
வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டம் செப்டம்பர் 29 - 30 அன்று நடைபெறவுள்ள நிலையில்., இந்த கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று கட்டாயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக ப்ளோட்டிங் ரேட்டின் கடன் வாங்கியவர்களுக்கு இது பாதிப்பினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் உள்ளிட்டவற்றிற்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இதனால் நீங்கள் மாத மாதம் செலுத்தும் தவணை தொகையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியதாக கடன் வாங்குபவர்களுக்கும் சிக்கல் தான்
இது ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் அல்லாது, புதியதாக கடன் வாங்குபவர்களும் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு கடனை டிரான்ஸ்ப்ர் செய்தாலும், கூடுதல் வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம்.
எதிர்பார்ப்பு
ஏற்கனவே கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய வங்கியானது மூன்று முறை வட்டி அதிகரிப்பு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 4%ல் இருந்து 5.40% ஆக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. இந்த முறை இந்த விகிதமானது 5.90% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி பாதையில் இந்தியா
முன்னதாக ஃபெடரல் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தினை குறைக்கும் பொருட்டு 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இதன் காரணமாக டாலரின் மதிப்பும் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ரெசசன் அச்சமும் நிலவி வருகின்றது. எனினும் இந்தியாவில் அந்தளவுக்கு தாக்கம் இருக்காது. இந்தியா வளர்ச்சி பாதையில் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
மாத தவணை
வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ரெப்போ ரேட் அதிகரிக்கும் பட்சத்தில் அது வீட்டுக் கடனை அதிகரிக்க வழிவகுக்கும். இது மாத தவணையை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் கடன் செலுத்தும் அவகாசமும் அதிகரிக்க வழிவகுக்கலாம். இதனால் வாடிக்கையாளர்கள் செலுத்தும் மொத்த தொகை என்பது அதிகரிக்கும். இதேபோல கார் லோன், பர்சன்ல் லோன் என அனைத்திற்கும் தவணை தொகை அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications