50 லட்சம் வீட்டுக்கடனை அசால்டாக முடிக்கும் ஒரு ஐடியா.. இதை பாலோ பண்ணுங்க..!

சென்னை: சொந்த வீடு வாங்குவது பலருக்கும் வாழ்க்கையின் பெரும் கனவு, மாத சம்பளக்காரர்களுக்குச் சொந்த வீடு வாங்குவது என்பது வங்கிக் கடன்கள் வாயிலாக மிகவும் எளிதானதாக மாறிவிட்டாலும், சொந்த வீட்டை வாங்குவதற்கு அதிகப்படியான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகிறது.

ஒரு சிறிய வீட்டை வாங்குவதற்கும், கட்டுவதற்கும் கூட லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும், இதனால் பலர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் வாங்கி தான் சொந்த வீடு என்னும் கனவை நினைவாக்கி வருகின்றனர். இதனாலேயே இந்தியாவில் வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட்கள் வாங்க கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

50 லட்சம் வீட்டுக்கடனை அசால்டாக முடிக்கும் ஒரு ஐடியா.. இதை பாலோ பண்ணுங்க..!

ஆனால் சரியான திட்டமிடல் இல்லாமல் கடன் வாங்குபவர்களுக்கு வீட்டுக்கடன் என்பது பெரும் சிக்கலாகவே உள்ளது. கடன் திரும்பச் செலுத்துதல் சுமையாக மாறும், இது அதிக வட்டித் தொகையைச் செலுத்த வழிவகுக்கும்.

நீங்கள் நீண்ட காலத்திற்குக் கடனைத் திரும்பச் செலுத்தினால், அசலுக்கு இணையாக வட்டி செலுத்த வேண்டிய நிலை உருவாகும். ஆனால் அதற்கு இணையாக உங்கள் வீட்டின் மதிப்பு உயருமா என்றால் நிச்சயம் பெரும் கேள்விக்குறி தான். எனவே, குறைந்த காலத்தில் உங்கள் வீட்டுக்கடனைத் திரும்பச் செலுத்தும் திட்டம் இருப்பது அவசியம். இதனால் பெரும் வட்டி தொகையைச் சேமிக்க முடியும். உதாரணமாக 50 லட்சம் ரூபாய்க் கடனை 10 வருடத்தில் செலுத்துவது எப்படி என்பதைத் தான் இந்த செய்தியில் பார்க்கப்போகிறோம்.

கடன் காலத்தைக் குறைத்தல்: நீங்கள் ரூ. 50 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியிருப்பதாக வைத்துக்கொள்வோம். வங்கிகள் பொதுவாக 9% க்கும் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்குகின்றன. நீங்கள் கடனை 10 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தத் தேர்வு செய்தால், நீங்கள் சுமார் ரூ. 26 லட்சம் வட்டி செலுத்த வேண்டும்.

இருப்பினும், நீங்கள் 15 ஆண்டு கடன் காலத்தைத் தேர்வு செய்தால், வட்டித் தொகை ரூ. 41 லட்சம் அதிகரிக்கும், மேலும் 20 ஆண்டுகளுக்கு இது ரூ. 58 லட்சம் வரை உயரும். எனவே, கடனை குறைந்த காலத்தில் திரும்பச் செலுத்துவது குறிப்பிடத்தக்க வட்டியைச் சேமிக்க முடியும்.

ரூ. 50 லட்சம் வீட்டுக்கடனை 10 ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதன் மூலம், நீங்கள் ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான வட்டியைச் சேமிக்க முடியும். இதன் பொருள் 20 ஆண்டுக் காலத்தை விட பாதிக்கும் குறைவான வட்டி செலுத்துவது. கடன் காலத்தைக் குறைவாகத் தேர்வு செய்யும் போது ஈஎம்ஐ அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வருடம் 1-2 ஈஎம்ஐ தொகை செலுத்துதல்: ஈஎம்ஐ தொகை அதிகமாகச் செலுத்தும் திறன் கொண்டவர்களுக்குக் குறைந்த கடன் காலத்தைத் தேர்வு செய்வது உத்தமம். ஆனால் அதிக ஈஎம்ஐ செலுத்த முடியாதவர்களுக்கு அதிகப்படியான காலத்தைத் தேர்வு செய்துவிட்டு ஒவ்வொரு வருடம் கிடைக்கும் போனஸ், சம்பளம் உயர்வைப் பயன்படுத்தி அந்த தொகையை வீட்டுக் கடனுக்கான அசல் தொகையில் குறைக்கும் போது ஈஎம்ஐ-யும் குறையும், கடன் இருப்பும் குறையும். இது தொடர்ந்து செய்தால் 30 வருடக் கடனை 15- 18 வருடத்தில் முடிக்க முடியும்.

மியூச்சுவல் பண்ட் முதலீடு: வீட்டுக்கடனுக்கு 9 சதவீதம் வட்டி மட்டுமே, இதேபோல் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதில் வரி சலுகை என்பதால் நீண்ட கால கடன் காலத்தைத் தேர்வு செய்துவிட்டு. உங்கள் சம்பளத்தில் உபரியாக இருக்கும் பணத்தை 12-15 சதவீதம் லாபம் தரும் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் முதலீடு வேகமாக வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்த முதலீட்டை வைத்து வீட்டுக்கடன் 10 வருடத்திற்குள்ளேயே அடைக்க முடியும். அதேபோல் சரியான மியூச்சுவல் பண்ட்-ஐ தேர்வு செய்வது உங்கள் கையில் தான் உள்ளது, அதேபோல் ரிஸ்க் அதிகமாக எடுக்கும் போது கூடுதல் லாபம் கிடைப்பது மட்டும் அல்லாமல் இழப்பும் ஏற்படலாம்.

பங்குச்சந்தை முதலீடு: நீங்கள் பங்குச்சந்தை முதலீட்டில் கில்லி என்றால் ஈஎம்ஐ செலுத்திவிட்டு உங்கள் வருமானத்தில் உபரியாக இருக்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் சரியான போர்ட்போலியோவை உருவாக்கி முதலீடு செய்தால் குறைந்தது 15 முதல் 20 சதவீதம் வரையில் லாபம் ஈட்ட முடியும். மேலும் வீட்டுக்கடனை அடைப்பதற்காகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் மீடியம் ரிஸ்க் கொண்டு, நீண்ட கால வளர்ச்சியின் அடிப்படையில் முதலீடு செய்தாலே போதுமானது. இந்த முறையில் நீங்கள் வெற்றிகண்டால் 10 வருடத்திற்குள் வீட்டுக்கடனை மொத்தமாக அடைக்க முடியும்.

இந்த எல்லா திட்டத்திலும் உங்களுக்குக் கிடைக்கும் லாப அளவில் இருந்து கடனை அடைக்கும் காலம் மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் செட் ஆகாது என நினைப்பவர்களுக்கு முதல் முறையைத் தேர்வு செய்வது சிறந்தது. கூடுதல் வருமானம் வரும்போது அதனை வீட்டுக்கடன் அடைப்பதில் பயன்படுத்துவது சிறந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+