எல்லா மனிதர்களுக்குமே தங்களுக்கென்று ஒரு கனவு இல்லத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஹோம்லோன்கள் அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கின்றன. நீண்டகாலம் திரும்பச் செலுத்தும் வசதி, வரிச் சலுகை காரணமாக வீட்டுக் கடன்கள் பிரபலமாக உள்ளன.
வீட்டுக் கடன்கள் மாதாந்திர இஎம்ஐ தவணையாக வசூலிக்கப்படுகின்றன. ஆனால் நிதி நெருக்கடி, அவசர மருத்துவச் செலவு போன்ற பல்வேறு காரணங்களினால் தவணையை கட்டுவதற்கு சில நேரம் தவறி விடுகின்றனர். ஒரு முறை தவறினால் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். இது பலமுறை என்று ஆகிவிட்டால் பிரச்னை சிக்கலைக் கொண்டு வந்து விடும்.

கிரெடிட் மதிப்பு குறையும்: கட்டாமல் நிலுவையில் இருக்கும் தவணைகளால் வாடிக்கையாளரின் கிரெடிட் மதிப்பு குறைந்து விடும். இதனால் எதிர்காலத்தில் கிரெடிட் கார்டுகள், கடன்கள் பெறும்போது தங்களுக்கு உகந்த வட்டி விகிதத்தைப் பெற முடியாது. 750 என்ற கிரெடிட் மதிப்பு இருக்க வேண்டும் என்று பெரும்பாலான நிதிநிறுவனங்கள் கூறுகின்றன. இதுபோன்று தவணை நிலுவை இருந்தால் அவர்களது மதிப்பு குறைந்துவிடும். வாங்கும் கடன்களின் வட்டி விகிதம் அதிகரித்து விடும். இதனால் பெரும் நிதிச் சுமை ஏற்படும்.
கூடுதல் அபராதங்கள்: தவற விடும் ஒவ்வொரு தவணைக்கும் அபராதம் மற்றும் தாமதக் கட்டணத்தை கூடுதலாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி இருக்கும். அபராதங்கள் கடன் தொகையில் 1-2 சதவீதம் இருக்கும். இது தவிர கூடுதலாக அபராதத் தொகையை சேர்த்து கட்ட வேண்டி இருக்கும். இதனால் கடன் தொகை அதிகரிக்கும்.
கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு கடன்தாரர்களுக்கு சலுகைக் காலம் தரப்படும். அதற்குள் தராவிட்டால் அந்தக் கடன் நான் பெர்மார்மிங் அசட்டாக கருதப்படும். இதைத் தொடர்ந்து சொத்தை கையகப்படுத்துவதற்கான ஏல நோட்டீஸ்கள் வரலாம்.
இஎம்ஐயை தவறவிடாமல் தடுப்பது எப்படி?: எல்லா தவணைகளையும் தவறாமல் கட்டுவதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். வரவு செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக பட்ஜெட் போடுங்கள். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். இது தவணைக்கான பணத்தை சேமிக்க உதவும்.
இஎம்ஐ தவணையை ஆட்டோமேடிக்காக கட்டவேண்டும்: உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மாதாமாதம் தானாகவே இஎம்ஐ தவணைக்கு பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் தவணைகள் தவறாது.
கடனை ரீபைனான்ஸ் செய்யுங்கள்: வேலை இழப்பு அல்லது ஏதாவது அவசரக் காரணத்துக்காக தவணையை கட்டமுடியாமல் போகலாம். இந்த நேரத்தில் கடன் அளித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தவணை அவகாசத்தை மாற்றித் தரக் கோரலாம். கடனை ரீபைனான்ஸ் செய்தவன் மூலம் இஎம்ஐகளை சிக்கல் இல்லாமல் திரும்பச் செலுத்த ஏதுவாக இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications