சொந்த வீடு என்பது பலரது வாழ்நாள் கனவு. அப்படிப்பட்ட வீட்டை பல ஆண்டுகள் உழைத்து, வங்கிக் கடன் பெற்று அந்த கனவு இல்லத்தை நம்மில் பலரும் அடைகிறோம். ஆனால் எதிர்பாராத சூழலில் குடும்ப தலைவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அந்த வீட்டுக் கடன் சுமை யாரை சாரும்? உங்கள் குடும்பம் வீட்டை இழக்கும் அபாயம் ஏற்படுமா?
இங்கேதான் ஹோம் லோன் இன்சூரன்ஸ் ஒரு ரட்சகனாக உருவெடுக்கிறது. இது வெறும் கூடுதல் செலவா அல்லது உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச் செல்லும் நிம்மதியான வாழ்வா? வங்கிகள் வற்புறுத்தும் காப்பீட்டை விட, வெளியே வாங்குவது லாபமா? உங்கள் கனவு இல்லத்தை ஒருபோதும் கடன் சுமை தீண்டாமல் இருக்க, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து ரகசியங்களும் இதோ.

வீடு என்பதே முக்கிய மைல்கல் தான். அதையும் வீட்டுக் கடன் வாங்கி உங்களுடையது ஆக்கிக் கொள்வது என்பது மிக முக்கியமான மைல்கல் தான். உதாரணத்திற்கு 34 வயதுடைய ஒருவர் 25 ஆண்டுகால அளவில் வீட்டுக் கடன் வாங்குகிறார். இந்த 25 ஆண்டுகள் அவரை கடனை சரியாக செலுத்தி விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது.
மாறாக துரதிஷ்டவசமாக அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், எதிர்வரும் பிரச்சனைகளை நினைத்து பாருங்கள். குறிப்பாக உங்களுடைய பாசமிகு குடும்பம், உங்களையும் இழந்து, ஆசை ஆசையாய் கட்டிய வீட்டையும் இழந்து தவிக்கும் சூழல் வரலாம். ஆக நீங்கள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வீடாவது சொந்தமாக இருந்தால் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள் அல்லவா? ஆக அப்படி நீங்கள் நினைத்தால், நிச்சயம் ஹோம் லோன் இன்சூரன்ஸ் என்பது அவசியமான ஒன்று.
ஹோம் லோன் இன்சூரன்ஸ் என்பதும் அடிப்படையில் ஒரு டெர்ம் லைப் இன்சூரன்ஸ் போன்று தான். கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் கடன் வாங்கியவருக்கு ஏதேனும் பிரச்சனை எனில், இன்சூரன்ஸ் தொகை அவரது குடும்பத்திற்கோ அல்லது வங்கிக் கணக்கிற்கோ கொடுக்கப்படும். இந்த தொகையை வைத்து மீதமுள்ள காலகட்டத்தில் கடனை திரும்ப செலுத்தி கொள்ளலாம். இதன் மூலம் வீடும் பாதுகாப்பாக இருக்கும். பண பிரச்சனையும் ஏற்படாது. குறிப்பாக நிதி ரீதியான சிக்கல்களில் இருந்து தப்பிக்க உதவும்.
பொதுவாக இந்த வீட்டுக் கடன் இன்சூரன்ஸ்-ஐ கடன் பெறும் வங்கிகளே பரிந்துரை செய்கின்றன. அவை பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளன. ஆக அவற்றில் உங்களுக்கு எது பொருத்தமானது என்பதை தேர்வு செய்வது அவசியம். பெரும்பாலும் இதுபோன்ற பாலிசிகளுக்கான பிரீமியத்தை வங்கிகள் உங்கள் கடனிலேயே சேர்த்துக் கொள்ளும். ஆக நீங்கள் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ உடன் இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கும் சேர்த்து தான் வட்டி செலுத்துவீர்கள். மேலும் இதுபோன்ற குழு காப்பீடுகளுக்கு 18% ஜிஎஸ்டி வரியும் உண்டு. ஆக இதையும் கவனத்தில் கொள்வது நல்லது. இதில் ஆண்டுக்கு ஆண்டு குறையும் கடன் சுமை போல, இன்சூரன்ஸ் கவரேஜ் தொகையும் குறையும். இன்சூரன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு ரிஸ்க் குறைந்து கொண்டே வருகிறது. உங்கள் கடன் முடிவடையும்போது, இன்சூரன்ஸ் கவரேஜ்-ம் முடிவுக்கு வந்துவிடும்.
நீங்கள் நேரடியாக ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் ஒரு பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இதுவே உங்களுக்கு பெரும் லாபத்தை தரும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் தனிநபர் டெர்ம் பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. இங்கு நீங்கள் பிரீமியத்தை உங்கள் விருப்பம் போல செலுத்திக் கொள்ளலாம்.
பாலிசி எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்?
நீங்கள் ஒரு வீட்டுக் கடன் இன்சூரன்ஸ்-ஐ தேர்ந்தெடுக்கும்போது, வெறும் விலையை மட்டும் பார்க்காமல் 4 விஷயங்களை சரிபார்க்க வேண்டும்.
1. கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ: இன்சூரன்ஸ் நிறுவனம் இதுவரை எத்தனை பேருக்கு காப்பீட்டுத் தொகையை சரியாக வழங்கியுள்ளது என்பதை இது காட்டும். இது 98%-க்கு மேல் இருப்பது நல்லது.
2. விதிவிலக்குகள்: பாலிசி எடுத்த ஆரம்ப காலத்திலேயே சில காரணங்களால் மரணம் நிகழ்ந்தால் (உதாரணமாக: தற்கொலை அல்லது ஏற்கனவே இருந்த நோய்கள்), இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது போன்ற விதி விலக்குகள் இருக்கலாம். ஆக அதைத் தெளிவாக படித்து பார்க்க வேண்டும்.
3. எளிமையான நடைமுறை: ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது, உங்கள் குடும்பத்தினர் அலைக்கழிக்கப்படாமல் சுலபமாக பணத்தை பெறும் வகையில் அந்த நிறுவனம் இருக்க வேண்டும்.
4. மறைமுகச் செலவுகள் : பிரீமியத் தொகையை அப்படியே கடனுடன் சேர்த்து வட்டி கட்ட சொல்கிறார்களா என்பதை சரிபார்க்கவும். இது நீண்ட காலத்தில் உங்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
ஹோம் லோன் இன்சூரன்ஸ் vs தனி நபர் டெர்ம் பிளான்: எது சிறந்தது?
ஏன் ஹோம் லோன் இன்சூரன்ஸ்: இது உங்கள் கடன் குறைய குறைய கவரேஜும் குறைவதால், சாதாரண பாலிசியை விட விலை மிகவும் குறைவு. உங்கள் குடும்பத்தை 'கடன் சுமையில் இருந்து மட்டும் காப்பாற்ற இது ஒரு சிறந்த மற்றும் சிக்கனமான வழி.
ஏன் தனி நபர் டெர்ம் பிளான்: இது உங்கள் குடும்பத்தின் அன்றாட செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர் காலத் தேவைகளுக்கு உதவும். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில் வீட்டுக் கடனை அடைக்க ஒரு ஹோம் லோன் இன்சூரன்ஸ் மற்றும் குடும்பத்தின் மற்ற தேவைகளுக்கு ஒரு தனி டெர்ம் பிளான் என இரண்டையும் பிரித்து வைத்திருப்பதே புத்திசாலித்தனம். இது உங்கள் குடும்பத்திற்கு முழுமையான பாதுகாப்பைத் தரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications