வீடு வாங்குவது என்பது பல குடும்பங்களுக்கு வாழ்நாள் கனவு. இதற்கு வீட்டுக் கடன் எடுப்பது வழக்கம், தற்போது வங்கிகள் வீட்டுக் கடனை அதிகமாக தரும் காரணத்தால் இக்கனவு எளிதாக நினைவாகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பலருக்கு தெரியாமல் ஒரு செலவு சேர்க்கப்படுகிறது.
வங்கிகள் அல்லது லோன் ஏஜென்ட்கள் வீட்டுக் கடனுக்கான காப்பீடு வாங்க வற்புறுத்துகின்றனர். இது கட்டாயம் என்று கூறி பயம் காட்டுகின்றனர். கடன் வாங்குபவர்கள் சில நேரத்தில் வேறு வழி இல்லாமலும், சில நேரத்தில் பயந்தும் ஒப்புக்கொள்கின்றனர். இத்தகைய காப்பீடு லட்சக்கணக்கான ரூபாய் கூடுதல் செலவு தருகிறது. பலர் இதன் உண்மையை தெரியாமல் செலுத்துகின்றனர்.

வீட்டுக் கடன் காப்பீடு விற்பனை
ஒருவர் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் எடுக்கும் போது, கடன் வழங்குவதற்கான ஆவணங்கள் தயாரான பிறகு வங்கி ஏஜென்ட் காப்பீடு வாங்குவது கட்டாயம் என்று கூறுவது வழக்கமாகியுள்ளது. கடன் எடுப்பவர் இறந்தால் குடும்பம் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்று பயம் காட்டுகிறார். வீட்டுக் கடனை செலுத்த முடியாவிடில் வீட்டை வங்கி பறித்துவிடும் என்று சொல்கிறார். இதனால் பலர் பயந்து ஒப்புக்கொள்கின்றனர். சமீபத்தில் வேலை இழந்தாலும், இந்த காப்பீடு பாதுக்காப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
உதாரணமாக ரூ.50 லட்சம், 18 ஆண்டு வீட்டுக் கடனுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 பிரீமியம் கூறப்பட்டது. இந்த காப்பீடு மூலம் மாத தவணையில் ரூ.5,000 கூடுதல் சேர்க்கப்பட்டது. இது கடனுடன் இணைக்கப்பட்ட காப்பீடு. தனியாக தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை.
விதிகள் என்ன சொல்கின்றன?
ரிசர்வ் வங்கி அல்லது ஐஆர்டிஏஐ கடன் காப்பீட்டை கட்டாயம் என்று சொல்லவில்லை. வங்கிகள் காப்பீடு வாங்கவில்லை என்று கடன் மறுக்க முடியாது, ஆனால் லோன் ஏஜென்ட்கள் அதிக கமிஷன் பெற வேண்டும் என்பதற்காக இந்த காப்பீட்டை கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர்.
பெரு நகரங்களில் இருப்பவர்கள் இதுதொடர்பான விழிப்புணர்வுடன் இருக்கும் காரணத்தால் வங்கி அல்லது லோன் ஏஜென்ட்கள் கட்டாயப்படுத்தினாலும், திட்டவட்டமாக மறுக்கும் காரணத்தால் தப்பித்து விடுகின்றனர். ஆனால் சிறு நகரங்களில் இருப்பவர்கள், முதல் முறை ஹோம் கடன் வாங்குபவர்கள் இதுக்குறித்து தெரியமால் காப்பீட்டை தேர்வு செய்துவிடுகின்றனர்.
வீட்டுக் கடன் காப்பீட்டின் பிரச்சினை
பலர் கடனை 10-12 ஆண்டுகளில் ஹோம் லோன் செலுத்தி முடிக்கின்றனர். இதனால் கடன் காலம் முடிந்ததும் காப்பீடு நிற்கிறது, இதன் மூலம் ஏற்கனவே செலுத்திய பிரீமியம் பெரும்பாலும் திரும்ப கிடைக்காது. காப்பீடு தனியாக தொடர முடியாது. உங்கள் வீட்டின் மீதான காப்பீட்டு பாதுகாப்பும் போய்விடும். கடைசியில் நீங்கல் செலுத்திய ப்ரீமியம் மட்டுமே இழப்பு. இந்த காப்பீடு கடன் இருக்கும் காலம் வரையில் மட்டும் பயன் தரும்.
நீங்கள் வீட்டுக் கடனை பாதுக்காக வேண்டும் என்றால், வீட்டு கடன் இணைப்பு காப்பீட்டுக்கு பதில் தனி டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கலாம். ரூ.50 லட்சம் வரையிலான கவரேஜ்-க்கு 18 ஆண்டுக்கு வருடாந்திர பிரீமியம் ரூ.32,000 போதுமாது. 60000 ரூபாய் செலவில் பாதி தொகையில் உங்களுக்கான பாதுக்காப்பு கிடைக்கும். வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினாலும் காப்பீடு தொடரும். இதன் மூலம் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications