இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு வீடு வாங்குவது என்பது பல நாள் கனவு. பலருக்கும் வங்கியில் இருந்து ஹோம் லோன்கள் பெறுவது தான் அந்த கனவை நினைவாக்குவதற்கான ஒரே வழி. இருந்தாலும் குறைந்த கிரெடிட் ஸ்கோர்கள், நிலையற்ற வருமானம் அல்லது முழுமையற்ற ஆவணங்கள் போன்ற காரணங்களால் வங்கிகளில் இருந்து ஹோம் லோன் பெறுவதற்கு அனைவருமே தகுதி பெறுவதில்லை. ஹோம் லோனுக்கு நீங்கள் தகுதியற்றவராக இருந்தால் உங்களுடைய லோன் வாய்ப்புகளை மேம்படுத்த வேறு சில வழிகள் குறித்து நீங்கள் யோசிக்கலாம். இந்த பதிவில் அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோர்: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண் ஆகும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. வங்கிகள் உங்களுக்கு கடன் தர முன் வரும். அதுவே 650-க்கும் கீழிருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து யோசிக்கும். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே பெற்ற கடனை எப்படி திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள்? சரியாக திருப்பிச் செலுத்தி இருக்கிறீர்களா? எந்த தேதியில் திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள்? என்பதை உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை வைத்தே வங்கிகள் தெரிந்து கொண்டு விடும்.

பொதுவாக நல்ல கடன் நடத்தை இருப்பவர்களுக்கு வங்கிகள் தொடர்பு கொண்டு பர்சனல் லோன்கள் வழங்குவது குறித்து அல்லது பிற லோன்கள் வழங்குவது குறித்து கூறும். ஆனால் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
ஏற்கனவே உள்ள கடன்களை அடைத்தல்: உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை குறைப்பது அல்லது தனிநபர் கடன்களை செலுத்துவது போன்றவற்றை செய்யலாம். இதன் மூலம் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்.
புதிய கடன்களைத் தவிர்க்கவும்: கிரெடிட் ஸ்கோர் மேம்படும் வரை புதிய கடன்கள் அல்லது கிரெடிட் கார்டு பெறுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதுவும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும். சரியான நேரத்தில் பில் செலுத்துதல், ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் கார்டு பில்கள் அல்லது இஎம்ஐ-களை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.
உங்கள் கிரெடிட் அறிக்கையை கண்காணிக்கவும்: கிரெடிட் ஸ்கோர் குறையக் கூடிய பிழைகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள உங்கள் கிரெடிட் அறிக்கையை கண்காணியுங்கள்.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC-கள்): வங்கிகள் உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை நிராகரித்தால் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், உங்களுக்கு ஒரு மாற்றாக இருக்கலாம். வங்கிகளுடன் ஒப்பிடும்போது NBFC-கள் பெரும்பாலும் கடன் வழங்க குறைந்த அளவுகோல்களை வழங்குகின்றன.
இணை விண்ணப்பதாரருடன் விண்ணப்பியுங்கள்: உங்கள் தனிப்பட்ட நிதிநிலை ஹோம் லோன் நிராகரிப்பிற்கு காரணமாக இருந்தால், நீங்கள் ஒரு இணை விண்ணப்பதாரருடன் இணைத்து அவர்களுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பொதுவாக உங்களுடைய வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாருடனாவது சேர்ந்து கடன் பெறலாம். இது உங்கள் கடன் ஒப்புதல் வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல்.. அதிக கடன் தொகைக்கான உங்கள் தகுதியையும் மேம்படுத்தும்.
அரசாங்க திட்டங்களை ஆராய்தல்: இந்திய அரசு ஒரு சொந்த வீட்டை உரிமையாக்கி கொள்ள பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு. எனவே நீங்கள் இது போன்ற திட்டங்களை ஆராயலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்: இந்தத் திட்டம் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு கடனுடன் மானியங்களையும் வழங்குகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகள், குறைந்த வருமான குழுக்கள் மற்றும் நடுத்தர வருமான குழுக்கள் ஆகியோருக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
உங்களுடைய கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் மேலே கூறப்பட்டுள்ள பிற வழிகளையும் பயன்படுத்தலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications