Home loan வாங்க போறீங்களா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா பல லட்சங்கள சேமிக்கலாம்..!!

சொந்த வீடு என்பது கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களோட வாழ்நாள் கனவுகளில் ஒன்று. இதற்கு நமக்கு உதவியாக இருப்பது வங்கிகளில் கிடைக்கும் வீட்டு கடன்கள் தான். பெரும்பாலானோர் இதற்காக வீட்டு கடனை பெற்று மாதந்தோறும் EMI செலுத்தி வருகின்றனர். இந்த கடன் 20 முதல் 25 ஆண்டுகல் வரை நீடிக்கிறது. இவ்வாறு வீட்டு கடன் வாங்கும் போது சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் வீட்டு கடனுக்கான செலவை குறைக்கலாம்.

கிரெடிட் ஸ்கோர் : வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வட்டி விகிதத்தை தீர்மானிப்பதில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. உயர்ந்த கிரெடிட் ஸ்கோர் என்பது, நீங்கள் கடந்த காலத்தில் பெற்ற கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை மிகவும் பொறுப்புடன் கையாண்டுள்ளீர்கள் என்பதை குறிக்கிறது. எனவே உங்களுக்கு குறைந்த வட்டியிலேயே கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். வீட்டு கடன் வட்டியில் 0.10% குறைந்தால் கூட உங்களுக்கு லட்சங்களில் சேமிப்பு கிடைக்கும். எனவே கிரெடிட் ஸ்கோரை தொடர்ந்து சரிபார்ப்பது , ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றை உடனடியாக திருத்தி கொள்வது குறைந்த வட்டி விகிதத்தை பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்.

Home loan வாங்க போறீங்களா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா பல லட்சங்கள சேமிக்கலாம்..!!

டவுன் பேமெண்ட் : கடன் வாங்குவோர் தங்களுக்கு தகுதியான அதிகபட்ச கடன் தொகையை தேர்ந்தெடுக்கிறார்கள், ஆனால் அது தவறு. முடிந்த வரை அதிகப்படியான டவுன் பேமெண்ட் செலுத்துவது நீங்கள் கடன் வாங்க வேண்டிய தொகையை குறைக்கும், இது நேரடியாக உங்கள் வட்டி சுமையை குறைக்கும்.

நிறுவனங்களை ஒப்பிடுவது: வீடு வாங்கும் போது எப்படி பல இடங்களை ஒப்பிட்டு பார்க்கிறீர்களோ, அதேபோல் வெவ்வேறு வங்கிகள் வழங்கும் கடன் சலுகைகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வட்டி விகிதங்கள், செயலாக்க கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பெரிதும் மாறுபடலாம். நீண்ட கால அடிப்படையில் வட்டி விகிதத்தில் ஏற்படும் சிறிய வித்தியாசம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Also Read

சலுகை கேட்பதில் தவறில்லை: பலர் தங்களுக்கு கிடைக்கும் முதல் கடன் சலுகையை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் உங்களிடம் நிலையான வருமானம், வலுவான கிரெடிட் ஸ்கோர் மற்றும் உங்கள் வங்கியுடன் நல்ல உறவு இருந்தால், தாராளமாக வட்டி விகிதத்தை குறைக்க சொல்லி கேட்கலாம். இதன் மூலம் வட்டி குறைந்தாலும் உங்களுக்கு தானே லாபம்.

கடன் ஆய்வு: கடன் ஒப்புதல் பெற்றுவிட்டதோடு வேலை முடிந்துவிடுவதில்லை. வட்டி விகிதங்கள் மற்றும் கடன் வழங்கும் கொள்கைகள் காலப்போக்கில் மாறுகின்றன, எனவே கடன் வாங்குவோர் சந்தை நிலவரங்களை கண்காணிக்க வேண்டும். நிலையான வட்டி, ஃபுளோட்டிங் வட்டி ஆகியவற்றை எல்லாம கவனிக்க வேண்டும். கடன் தொடர்பான ஸ்டேட்மெண்டை பார்த்து முறையாக உள்ளதா சரியாக வட்டியும் அசலும் கழிக்கப்படுகிறதா என ஆய்வு செய்வது நல்லது.

Recommended For You

வீட்டுக் கடன் என்பது ஒரு நீண்ட கால நிதி சுமை, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்காவது அதற்காக உழைத்தாக வேண்டி இருக்கும். எனவே ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோரை பராமரித்தல், அதிக டவுன் பேமெண்ட் செலுத்துதல், வங்கி வட்டி விகிதங்களை ஒப்பிடுதல், வட்டி விகிதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் மற்றும் உங்கள் கடனை தொடர்ந்து மதிப்பாய்வு செய்தல் ஆகியவை உங்களுக்கு பெரிய தொகையை சேமித்து தரும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+