சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் இந்தியர்களின் வாழ்நாள் கனவு. இதற்காக அவர்கள் கிட்டத்தட்ட தங்களுடைய 25இலிருந்து 30 ஆண்டுகள் வரையிலான வருமானத்தையே வழங்க தயாராக இருக்கிறார்கள். பெரும்பாலான இந்தியர்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவதற்கு வங்கி கடன்கள் தான் உதவியாக இருக்கின்றன.
வங்கிகளில் வீட்டு கடன் வாங்கி விட்டால் அடுத்த 20 இலிருந்து 30 ஆண்டுகளுக்கு இஎம்ஐ முறையில் மாதம்தோறும் உங்களுடைய கடனை வட்டியோடு சேர்த்து வங்கிகளுக்கு திரும்ப செலுத்தியாக வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஏராளமானவர்கள் வங்கிகளில் வீட்டு கடன் வாங்கி விடுகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த வீட்டு கடனே அவர்களுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறிவிடுகிறது.

ஆனால் ஸ்மார்ட்டான முறையில் திட்டமிட்டால் 25 ஆண்டு கால வீட்டு கடனை கூட பத்தே ஆண்டுகளில் அடைத்து விட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். உதாரணமாக நீங்கள் ஒரு வங்கியில் 50 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கி இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், நீங்கள் கடனை திரும்ப செலுத்தக்கூடிய காலம் 25 ஆண்டுகள், வங்கியில் உங்களுடைய கடனுக்கு 8.5% வட்டி விதிக்கப்படுகிறது. நீங்கள் கடன் வாங்கியதிலிருந்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 40 ஆயிரம் ரூபாயை இஎம்ஐ-ஆக செலுத்துவீர்கள்.
தொடக்கத்தில் வங்கிகள் நாம் செலுத்தக்கூடிய இஎம்ஐ தொகையில் பெரும்பாலும் அவர்களுக்கான வட்டி தொகையை தான் எடுத்து கொள்ளுமே தவிர உங்களுடைய கடன் அசல் தொகை என்பது பெரும்பாலும் அப்படியே தான் இருக்கும் இறுதி ஆண்டுகளில் தான் வங்கிகள் உங்களுடைய கடன் தொகையை கழிக்க தொடங்கும். எனவே 25 ஆண்டுகால இஎம்ஐ வைத்திருப்பவர்கள் முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனை அடைத்து விட்டால் தான் அவர்களுக்கு லாபம்.

முதலில் ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக ஒரு இஎம்ஐ சேர்த்து செலுத்த வேண்டும் என கூறுகின்றனர் நிபுணர்கள். ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் அதற்கு 12 இஎம்ஐ-களை செலுத்துவோம் ஆனால் நீங்கள் கூடுதலாக ஒரு இஎம்ஐ சேர்த்து 13 ஆக செலுத்த வேண்டும். இவ்வாறு நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தும்போது உங்களுடைய கடன் செலுத்தும் காலமே 25 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக குறைந்து விடுமாம்.
அடுத்ததாக உங்களுடைய இஎம்ஐ தொகையை 7.5% என்ற விகிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்த வேண்டும் என கூறுகின்றனர்,. இவ்வாறு செய்யும்போது உங்களுடைய வீட்டுக்கடனை திரும்ப செலுத்தக்கூடிய காலம் 25 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைந்து விடும். எனவே நீங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் 12 இஎம்ஐ-க்கு பதிலாக 13 இ எம் ஐ செலுத்த வேண்டும், ஆண்டுதோறும் இஎம்ஐ தொகையை 7.5% சதவீதம் என்ற விகிதத்திலும் உயர்த்தி கொண்டே செலுத்தி வந்தால் 25 ஆண்டு கால கடனை 10 ஆண்டுகளிலேயே முடித்து விட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications