பெர்சனல் லோனுக்கு பதில் இப்படி லோன் வாங்கினால் வட்டியில் பல ஆயிரங்கள் மிச்சமாகும்..!!

அவசரமாக பணத் தேவை ஏற்படும் போது, பெரும்பாலானவர்கள் பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களை தான் நாடுகின்றனர். பெர்சனல் லோன் வாங்குவதற்கு பதில் இப்படி லோன் வாங்கினால் உங்களால் பல ஆயிரங்களை சேமிக்க முடியும்.ஏற்கனவே உங்களிடம் வீட்டுக் கடன் இருந்தால், தனிநபர் கடனைப் பெறுவதை விட, வீட்டுக் கடன் டாப்-அப் முறையை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.

வீட்டுக் கடன் டாப்-அப் என்பது ஏற்கனவே வீட்டுக் கடன் வழங்கிய வங்கியிடமிருந்தே மேலதிகமாக கடன் பெறும் முறை. உங்கள் சொத்து ஏற்கனவே பிணையமாக இருப்பதால், புதிதாக எந்த பிணையமும் தேவையில்லை. இதன் வட்டி விகிதம் மிகவும் குறைவு. அதே வேளையில் இது எந்தவொரு சொத்தும் அடமானம் இல்லாமல் வழங்கப்படும் கடன் தனிநபர் கடன். ஆனால், இதற்கான வட்டி விகிதம் அதிகம்.

பெர்சனல் லோனுக்கு பதில் இப்படி லோன் வாங்கினால் வட்டியில் பல ஆயிரங்கள் மிச்சமாகும்..!!

தனிநபர் கடன்களுக்கு வட்டி பொதுவாக 11% முதல் 24% வரை இருக்கும். ஆனால், வீட்டுக் கடன் டாப்-அப் வட்டி விகிதம் பொதுவாக 8.5% முதல் 10% வரை மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. தனிநபர் கடனை பொதுவாக 1 முதல் 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இதனால் மாத தவணை அதிகமாக இருக்கும். ஆனால், டாப்-அப் கடனை உங்கள் தற்போதைய வீட்டுக் கடனின் மீதமுள்ள காலத்திற்கு அதாவது 10 முதல் 20 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும். இதனால் மாத தவணை சுமை குறைவாக இருக்கும்.

வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், ஒட்டுமொத்தமாக நீங்கள் கட்டும் வட்டி தொகை குறைவாக இருக்கும். வீட்டு கடனை போலல்லாமல், டாப்-அப் தொகையை வீடு சீரமைக்க, குழந்தைகளின் கல்வி செலவு, மருத்துவ செலவு அல்லது வேறு கடன்களை அடைக்க பயன்படுத்தலாம்.

5 லட்சம் ரூபாயை பெர்சனல் லோனாக எடுக்கிறீர்கள் என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் செலுத்தும் வட்டி 14% என வைத்து கணக்கு செய்தால் மாதாந்திர ஈஎம்ஐ தொகை 11,634 ரூபாய். இது வீட்டு கடன் டாப் அப் முறையில் 5 லட்சம் ரூபாய் வாங்கினால் 9.25% வட்டி விகிதத்தில் ஈஎம்ஐ தொகை 10,440 ரூபாயாக தான் இருக்கும் அதாவது இதில் வட்டியிலேயே மாதம் 1194 ரூபாய் வரை சேமிக்கலாம். 5 ஆண்டுகளில் தனிநபர் கடன் என்றால் மொத்தமாக நீங்கள் செலுத்திய கடன் 6.98 லட்சம் ரூபாய் அதுவே வீட்டு கடன் டாப் அப் முறையில் 6.26 லட்சம் ரூபாய் தான் செலுத்துவீர்கள்.

Also Read

வங்கி உங்களுடைய KYC மற்றும் சொத்து ஆவணங்களை ஏற்கனவே வைத்திருப்பதால், புதிய ஆவணங்கள் தேவையில்லை. டாப்-அப் தொகையை வீடு பழுதுபார்த்தல் அல்லது விரிவுபடுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தினால், வருமான வரி சட்டம் பிரிவு 24(b)-ன் கீழ் வட்டி மீது வரி விலக்கு பெற முடியும். தனிநபர் கடனுக்கு இந்த சலுகை கிடைக்காது.

உங்களுக்குத் தேவைப்படும் தொகை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவசர அவசரமாக பண தேவை இல்லாமல், 1 முதல் 3 வாரங்கள் வரை வங்கியின் செயலாக்க காலத்திற்கு காத்திருக்க முடிந்தால் வீட்டு கடன் டாப் அப்பிற்கு செல்லலாம்.

Recommended For You

உங்களுக்கு மிக அவசரமாக அடுத்த 2 நாட்களுக்குள் பணம் தேவைப்பட்டால் பெர்சனல் லோனுக்கு செல்லலாம் ஏனெனில் வீட்டு கடன் டாப் அப்பில் பணம் கிடைக்க 2 வாரமாவது ஆகும். எனக்கு 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரையே போதும் விரைவில் என்னால் கடனை செலுத்திவிட முடியும் என்பவர்கள் பெர்சனல் லோனை தேர்வு செய்யலாம்.

ஆனால் வீட்டு கடன் டாப் அப் செய்ய பல்வேறு வங்கிகளிலும் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்கின்றன என்பதால் இதை தேர்வு செய்யும் முன்பு இரண்டிலும் உள்ள சாதகவ் பாதங்களை சரியாக ஒப்பிட்டு முடிவெடுப்பது நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+