பெங்களூரு: இந்தியாவில் பலருக்கும் ஒரு கோடி ரூபாய் என்ற ஒரு நிதி இலக்கை எட்டி விட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதற்கு மிகச் சரியான முறையில் திட்டமிட்டு பட்ஜெட் போட்டு பணத்தை சேமிக்க வேண்டும். இருந்தாலும் நம்முடைய வாழ்க்கை செலவினங்களும் புற அழுத்தங்களால் நாம் செய்யக்கூடிய செலவினங்களும் நம்முடைய சேமிப்பையும் முதலீட்டையும் கரைத்து விடுகின்றன.
பெரியளவு படிப்பை முடித்து பெரிய நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் கூட இந்த இலக்கை அத்தனை எளிதாக எட்டி விட முடியாமல் தான் இருக்கின்றனர். ஆனால் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். தனது கிடைத்த குறைந்த வருமானத்தில் சிறுக சிறுக சேமித்து 1 கோடி ரூபாய் என்ற இலக்கை அவர் எளிமையாக எட்டி இருக்கிறார்.

ரெட்டிட் தளத்தில் பெர்சனல் பைனான்ஸ் இந்தியா என்ற பக்கத்தில் 25 ஆண்டுகள் சேமிப்பில் கிடைத்த 1 கோடி என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியிருக்கிறது . இந்த பதிவுதான் தற்போது ரெட்டிட் தளத்தில் வைரலான ஒன்றாக மாறியிருக்கிறது. 1990களில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் மாதம் 4200 சம்பளத்தில் ப்ரூஃப் ரீடராக வேலையை தொடங்கி இருக்கிறார் .
தனக்கு கிடைத்த இந்த குறைந்த சம்பளத்தை கொண்டே பெங்களூரு போன்ற ஒரு நகரில் குடும்பத்தையும் நடத்தி அதன் மூலம் படிப்படியாக பணம் சேமித்து 1 கோடி ரூபாய் என்ற இலக்கை அவர் எட்டி இருக்கிறார் .இதற்காக அவர் பின்பற்றியது இரண்டு தான் . ஒன்று நிதி சார்ந்த ஒழுக்கம், மற்றொன்று எளிமையான வாழ்க்கை. தனக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்காக எடுத்து வைத்து மீதமுள்ள தொகை தான் அவர் செலவு செய்வாராம் .
அவருடைய குடும்பமும் பெரிய அளவில் எந்த ஒரு ஆடம்பர செலவையும் செய்ய மாட்டார்களாம். இதனால் படிப்படியாக பணத்தை சேமித்து அந்த சேமிப்பை அதிகரித்து அதிகரித்து அதனை முதலீடு செய்து இருக்கிறார். குறிப்பாக அவர் பிக்சட் டெபாசிட் மற்றும் ஆர்டி போன்ற பாதுகாப்பான முதலீடு திட்டங்களில் முதலீடு செய்தாராம்.
வீடு வாங்க வேண்டும் , கார் வாங்க வேண்டும் என எதற்காகவும் அவர் கடன்களை வாங்கவில்லை. அவருடைய மற்றும் அவருடைய குடும்பத்தினருடைய ஒரே கவனம் ஒரு கணிசமான தொகையை சேர்த்து வைத்து பின்னர் அந்த பணத்தில் எந்த செலவை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளில் தற்போது அவர் கைவசம் 1 கோடி ரூபாய் இருக்கிறதாம். அவருக்கு வயது தற்போது 48 வயது ஆகிறது.
பொறுமையாக சில விஷயங்களை மேற்கொள்ளும் போது அது நமக்கு பெரிய பரிசை அளிக்கும் என்பதற்கு உதாரணமாக இவர் மாறி இருக்கிறார். சொந்த கார், சொந்த வீடு உள்ளிட்ட கனவுகளை எல்லாம் விட்டுத் தந்து படிப்படியாக பணத்தை அவர் சேமித்திருக்கிறார். அவர் சொத்து சேர்க்க வேண்டும் என்றால் சில விஷயங்களை நாம் தியாகம் செய்துதான் ஆக வேண்டும் அப்படி நான் செய்த தியாகம் தான் எனக்கு பெரிய தொகையாக வந்து நிற்கிறது என கூறியிருக்கிறார் .
அவர் தொடர்பான இந்த பதிவு பலரையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக மற்றவர்களை பார்த்து அவர்களைப் போல செலவு செய்ய வேண்டும் என்று அழுத்தத்திற்கு ஆளாக கூடிய பல இளைஞர்களும் இவரிடம் இருந்து கற்க வேண்டிய பாடம் சொத்து சேர்க்க பெரிய படிப்போ சம்பளமோ தேவையில்லை என்பது தான்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications